Monday, March 28, 2011

பிரபஞ்சத்தின் மூன்று வடிவங்கள்

பிரபஞ்சத்தின் வடிவங்கள்
பிரபஞ்சம் எத்தகைய வடிவமுடையது என்ற கேள்வி சற்று சிக்கலனாது. எனினும் இதுவரை அறிவியலார் மேற்கொண்டுள்ள ஆய்வுகளினின்று மூன்று வடிவங்கள் பற்றிக் கருத்துரைத்துள்ளனர். அவை கோள வடிவான மூடிய பிரபஞ்சம், சமதளப் பிரபஞ்சம், பரவளை வடிவப் பிரபஞ்சம் என்பனவாகும். கோள வடிவான மூடிய பிரபஞ்சம் எல்லையற்றது. ஆனால் அளவிடக் கூடியது.

அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகள்: இந்திய நிறுவனமொன்றின் அற்புதமான கண்டுபிடிப்பு

அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகளை தயாரிக்க இந்திய நிறுவனமொன்று நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.
அவ்வாறானதோர் பரீட்சார்த்த வடிவமைப்பை தாம் தற்போது மேற்கொண்டு வருவதாக
இந்தியாவின் "சென்டர் போ டிவலப்மென்ட் ஓப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்" நிறுவனம்
தெரிவித்துள்ளது.

15 கொம்புகள் கொண்ட டைனோசரஸ் எலும்புக்கூடுகளை கண்டுபிடிப்பு

கொம்புள்ள டைனோசர்கள்
பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டைனோசரஸ். இயற்கை
பேரழிவு மற்றும் பருவ நிலை மாற்றம் போன்றவற்றின் காரணமாக அந்த இனம் உலகில் அழிந்து
விட்டது.

ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் செயற்கை மேகம்

செயற்கை மேகம்
விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தார் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சாவூத் அப்துல் கனி.

Sunday, March 27, 2011

உலகின் அதிவேக கணினி தயாரிப்பில் அமெரிக்கா சாதனை - Videos

உலகின் அதிவேக கணினியை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா வெற்றிபெற்றுள்ளது. இந்த மடிக்கணினியை அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதனை மையம் தயாரித்துள்ளது. 1000 ட்ரில்லியன் நடவடிக்கைகளை இந்த சாதனைக் கணினி ஒரே வினாடியில் செய்து முடிக்கும் வல்லமை கொண்டது.

Friday, March 25, 2011

நிலநடுக்கத்தை முன்கூட்டியே எறும்புகள் அறியும்: ஆய்வுத் தகவல்

எறும்புகள்
பல ஆயிரம் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும்
திறன் மிகச் சிறிய எறும்புகளுக்கு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
செம்மர எறும்புகள் நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறிவதாக துய்ஸ்பர்க் சென்
பல்கலைகழக புவியியல் நிபுணர் உல்ரிச் ஸ்கர்பர் தெரிவித்துள்ளார். உல்ரிச்சும் அவரது
ஆய்வுக் குழுவினரும் மேற்கு ஜேர்மனியின் எபல் பிராந்தியத்தில் 2 ஆண்டுகளாக எறும்பு
மலைப்பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Wednesday, March 23, 2011

பிரபஞ்சத் தோற்றம்.

Universe
புவியின் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள விண்வெளி என்பது, நம்மால் முழுவதும் அறிந்து கொள்ள முடியாத, எல்லையற்ற அண்ட வெளியாகும். விண்வெளியானது எல்லாத் திசைகளிலும் முடிவற்ற அளவில் விரிவடைந்து கொண்டே செல்லும் ஒரு வெற்றிடப் பரப்பாகும். விண்வெளியில் பிரபஞ்சங்கள், பால்வழி மண்டலங்கள், விண் மீன்கள், நமது சூரீயக் குடும்பம் எல்லாம் உள்ளன. பிரபஞ்சங்களுக்கிடையே உள்ள வெளியில் காற்று மண்டலம் கிடையாது. இரவானாலும், பகலானாலும் நமது காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள விண்வெளி இருண்டே (கருமையாக) காணப்படும்.

Tuesday, March 22, 2011

பூமிக்கு அருகில் வந்த சந்திரன்! (பட இணைப்பு)

பூமிக்கு அருகில் சந்திரன்
கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக சந்திரன் பூமிக்கு மிகவும் அருகில் வரும்
நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
'சுப்பர் மூன்' என அழைக்கப்படும்
இந்நிகழ்வினை உலகம் மக்கள் யாவரும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

Monday, March 21, 2011

கண்ணுக்கு புலப்படாத வி-பி சிக்னல்களை(Wi-fi) கமரா மூலம் பார்க்கலாமே!-Video

வி பி
நாம் இவ்வளவு நாளும் கணனியிலுள்ள ஐகான் மூலம் பார்த்த வி-பி அலைகளின் அளவை இப்பொழுது காமரா மூலம் பார்க்கலாம்.இந்த புதியகண்டுபிடிப்பை நோர்வேயில் உள்ள  Oslo School of Architecture & Design இல் திமோ  அர்
நோலும்அவரதுகுழுவினரும்இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.அதை அவைகள் எவ்வாறு உருவாக்கினார்கள்என்பதைஇந்த காணோளிமூலம் பார்க்கலாம்.

Sunday, March 20, 2011

பால் அருந்துவதால் பல நூறு நன்மைகள் உண்டு.

பால்
இந்தியாவில் அரிசி முக்கிய உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சில வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது. தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு குளிர்ச்சி தருவது.

குறட்டையை குறைக்கும் வழிகள்

நித்திரையில் குறட்டை
.நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங் கும். சுருங்கும் தொண்டைவழியாகச் செல்லும் காற்றுக்கு இப்போது உள் சென்று வெளியேற போதிய இடம் இல்லை. 

ஆக சுருங்கிய தொண்டை வழியாகச் செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன. 

இந்த அதிர்வைத்தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை ஈ.வெ.ரா.பெரியார்  நெடுஞ்சாலை யில் உள்ள கே.கே.ஆர்.காது மூக்கு தொண்டை மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் ரவிராமலிங்கம்.

ஆணாக மாறும் பெண் மீன்


பெண்ணிலிருந்து ஆண்
.
மனிதர்களில் மட்டுமல்ல, சில மீன்களிலும் ஆண் தன்மையும், பெண் தன்மையும் சேர்ந்து இருக்கின்றன. இத னால் ஆணாக விரும்பினால் ஆணாகவும், பெண்ணாக விரும்பினால் பெண்ணாகவும் மாறும் வாய்ப்பு இயற்கையாகவே அவற்றுக்கு உள்ளது.
எல்லா உயிரினங்களிலும் பாலினத்தை (ஆண்/பெண்) நிர்ணயிப்பது குரோமோசோம்கள் தான். ஒரு தொகுதி மீன்களில் 50 ஆண் மீன்கள் இருந்தால், பெண் மீன்களும் 50 இருக்கும். இருந்தாலும், சில நேரங்களில் ஒருபால் குறைந்து, மற்றொரு பால் அதிகமாகி விடலாம். இதுபோன்ற சமயங்களில் நிலைமையைச் சமாளிக்க `பால் மாற்றம்' உதவுகிறது.

Saturday, March 19, 2011

இன்று "சுப்பர் மூன்'

முழு நிலவு (Super Moon)
கடந்த 20 ஆண்டுகளில் முதல் தடவையாக சந்திரன் பூமிக்கு மிகவும் அண்மையில் இன்று
சனிக்கிழமை நெருங்கி வருகிறது.
"சுப்பர் மூன்' எனப்படும் இந்த அபூர்வ
நிகழ்வு இன்று சர்வதேச நேரப்படி 19: 10 மணிக்கு இடம்பெறுகிறது.
சூரியன்
மறைந்ததையடுத்து கிழக்கு பகுதியில் தோன்றும் இந்த சந்திரன் வழமையான சந்திரனை விட 14
சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் பிரகாசமானதாகவும் தோன்றும்.

Friday, March 18, 2011

6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை அடைந்தது விண்கலம்

புதனில் விண்கலம்
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 2004ம் ஆண்டில் ஏவிய ‘மெசஞ்சர்’ விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை நேற்று சென்றடைந்தது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றிய ஆராய்ச்சிக்காக ‘மெரைனர்10’ என்ற விண்கலத்தை நாசா 1973&ல் அனுப்பியது. அதன் பிறகு, 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 3&ம் தேதி ‘மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை புதனுக்கு நாசா அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து டெல்டா2 ராக்கெட்டில் வைத்து மெசஞ்சர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 beta !

internet explore 9 beta
தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

பிப்ரவரி முதல் வாரத்தில், இதன் இறுதி சோதனைப் பதிப்பு (Release Candidate) வெளியானது . இது ஒரு "மிக மிக அழகான இணையம்' என இந்த தொகுப்பின் உருவாக்க குழுவின் மூத்த இயக்குநர் ரையன் காவின் அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே இதன் முழுமையான தொகுப்பினை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மூளை வளர்சிக்கு மீன் உண்பது அவசியமானது .

மீன் உணவு
கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.   மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.   இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கியுள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள் தகவல்

உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கியுள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.

இதற்கு ' சோஹல்' பெயரிடப்பட்டுள்ளது. ஆளில்லாமல்
இயங்கக்கூடிய இப்பறக்கும் தட்டானது உளவு பார்த்தல் போன்ற பல தேவைகளுக்காக
உபயோகிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Thursday, March 17, 2011

பயந்தால் மூளை முடங்கி விடும்

மூளை
மனிதனை தான் நினைத்தபடியெல்லாம் ஆட்டுவிப்பது மூளை. உழைப்பு, தூக்கம், களைப்பு
உள்ளிட்ட எல்லா செயல்களையும் நிர்ணயிப்பது மூளை தான்.
அந்த மூளையின் செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு
வருகின்றன. ஒவ்வொரு ஆய்விலும் ஒரு புதுமையான தகவல் கிடைக்கத் தான் செய்கிறது. பய
உணர்வு அதிகரிப்பதற்கு மூளையின் செயல்பாடே காரணம் என்பது சமீபத்திய ஆய்வுத் தகவல்.

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இராட்சத விலங்குகளின் எச்சங்கள் (பட இணைப்பு) _

இராட்சத விலங்குகள்
உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது.
அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் எச்சங்கள்,
சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில்
முகப்பெரியதாக அது கருதப்படுகின்றது.
அதேபோல வேறு பல மிகப் பெரிய
உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன. அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Wednesday, March 16, 2011

பூமியர்திவு என்றால் என்ன என்று தெரிய வேண்டுமா!

நிலநடுக்கம்/பூமியதிர்வு
நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்:earthquake) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்திட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.

Tuesday, March 15, 2011

தற்பொழுது ஜப்பானில் பூமியதிர்ச்சி - Live Telecast

தற்பொழுது ஜப்பானில் பூமியதிர்ச்சி
இந்த இணைப்பினூடாக பார்க்க முடியும் .http://www.ustream.tv/channel/nhk-world-tv

Monday, March 14, 2011

உலக அணுவாயுதக் கையிருப்பை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஜப்பான் பூமியதிர்ச்சி


ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியானது உலக நாடுகள் அனைத்தினதும் அணு
ஆயுதங்களை விட 1000 மடங்கு சக்தியினை வெளியிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவ்வதிர்ச்சியானது 6.7 டிரில்லியன் தொன்கள் டி.என்.டி வெடிபொருட்களின் சக்திக்கு சமனானதெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு: பகல் பொழுதின் நேரம் குறைவு-NASA

பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு
ஜப்பானிய நிலநடுக்கம் காரணமாக உலகில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றம்
நிகழ்ந்துள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்பட்ட திகதியிலிருந்து புவிச்சுழற்சியின்
வேகம் அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஜப்பானியப் நில அதிர்வைத் தொடர்ந்து புவியின்
சுழற்சி வேகம் 1.6 மைக்ரோ செகண்ட்ஸ் அதிகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள்
அறிவித்துள்ளனர்.

Saturday, March 12, 2011

எதிர்வரும் 19 பேரழிவு ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் (காணொளி இணைப்பு)

பூமியை நோக்கி சந்திரன்
.பாரிய இயற்கை அழிவு எதிர்வரும் 19ஆம் திகதி ஏற்படவுள்ளதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர். சந்திரன் பூமிக்கு மிக மிக அருகாமையில் வரும் 'சூப்பர் மூன்"
நிகழ்வினாலேயே ஜப்பானில் நிலநடுக்கம் பாரிய சுனாமி போன்ற அனர்த்தங்கள் இடம்
பெற்றிருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளனர்.

சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

சைவ உணவுகள்
சைவ உணவுகளை  எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது  என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம்  இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:

நார்சத்து  மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ  வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும்  திறன்  மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி   போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.

விண்வெளியில் காணப்படும் கரும்பள்ளங்கள்

கருங்குழி(Black Holes)
1939ஆம் ஆண்டு ஓப்பன் ஹீமர் என்ற விஞ்ஞானி நியூட்ரான் விண்மீன்களைப் பற்றி ஆராய்ந்தார். அவரது கருத்துப்படி நம் சூரியனை விட 3.2 மடங்கு அதிக நிறை உடைய ஒரு நியூட்ரான் விண்மீன், தன்னுடைய சொந்த ஈர்ப்பு விசையை எதிர்க்க முடியாமல், அதனுடைய நியூட்ரான்கள் உள்நோக்கி மேலும் சுருங்குகின்றன.

அப்போது 'ஒருமைத் தன்மை’ (Singularity) என்ற ஒரு நிலையை அவை அடைகின்றன.

அதாவது அவை பருமன் (Volume) ஏதும் இல்லாமல், ஆனால் முடிவில்லாத (Infinite) ஒரு நிறையையும் அடர்த்தியையும் கொண்டிருக்கின்றன.

நிலநடுக்கம் காரணமாக பூமி அதன் அச்சிலிருந்து பத்து சென்டிமீட்டர்கள்(நான்கு அங்குலம்) நகர்ந்துள்ளது

நில நடுக்கம்
ஜப்பானில் நேற்று இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக அதன் பிரதான தீவு தனது
அச்சில் இருந்து எட்டு அடி(2.4 மீற்றர்கள்) நகர்ந்துள்ளது.
இதை அமெரிக்காவின் பூகற்பவியல் நிபுணர் கென்னத் ஹுட்னட் தெரிவித்துள்ளார். அதே
நேரம் இத்தாலிய பூகற்பவியல் மற்றும் எரிமலைகள் தொடர்பான ஆய்வு மையத்தின் தகவல்களின்
பிரகாரம் நேற்றைய நிலநடுக்கம் காரணமாக பூமி அதன் அச்சிலிருந்து பத்து
சென்டிமீட்டர்கள்(நான்கு அங்குலம்) நகர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.

Friday, March 11, 2011

கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!

இன்றைய அவசர யுகத்தில்  கிடைத்ததை உள்ளே தள்ளிவிட்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக  ஓடிக்கொண்டிருப்பவர்கள் சில ஆண்டுகளிலேயே உடல் பருமன், தொப்பை  என பல  பிரச்சனைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேற்படி  உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டி பார்த்த பின்னர்தான்,  சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டி பார்க்கிறது.

கோமா நிலை நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிய புதிய முறை அறிமுகம்

கோமா நிலையை அறிதல்
கோமா நிலை நோயாளியின் மூளை பிம்ப தொழில்நுட்பங்களை அப்ரிடின் பல்கலைகழக விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர்.
ஸ்காட்லாந்தில் இது போன்று நடைபெறும் முதல் ஆராய்ச்சி இதுவாகத் தான் இருக்கும்
என நியூஅப்ரிடின் தெரிவித்தார். இந்த புதிய ஆய்வின் மூலம் கோமா நிலை நோயாளிகள்
விழிப்புணர்வு குறித்து கூடுதல் தகவல்களை பெற முடியும்.

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி

கண்ணுக்கு பயிற்சி
எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.  உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.

Thursday, March 10, 2011

அடுத்த வாரம் வானில் ஓர் அதிசயம் நிகழப்போகிறது

பூமியை நெருங்கும் சந்திரன்
அடுத்த வாரம் வானில் ஓர் அதிசயம் நிகழப்போகிறது. ஆம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன்  மீண்டும் பூமிக்கு அருகில் வரப்போவதாகவும் இதனால் பூகம்பம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த மாதம் 19ம் தேதி சந்திரன், பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது. அதாவது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைலாக குறையும். கடந்த 1992ம் ஆண்டுக்குப் பிறகு பூமியும் சந்திரனும் மிக அருகில் வரப் போகின்றன.

Wednesday, March 9, 2011

பால்வழி மண்டலம்

அண்டம்
நமது அண்டமானது சுருள் வில் வடிவமுடையது. சுருள்வில் போன்ற பல கைகளையுடைய நமது அண்டத்தில் "சுருள் கை" (Spiral arm) போன்ற பகுதிகளில் மிக அதிகமான அடர்த்தியில் விண்மீண்கள் உள்ளன. நமது சூரியன் பால்வழி மண்டலம் எனப்படும் நமது அண்டத்தில் உள்ள ஓரியான் நெபுலா (Orion Nebula) உள்ள "ஓரியன் கை" (Orion Arm) எனப்படும் பகுதிக்கு அருகாமையில் உள்ளது. நமது அண்டமானது சுமார் 1,00,000 ஒளி ஆண்டுகள் அளவு (விட்டம்) பரந்து விரிந்து காணப்படுகிறது. இதன் மையப்பகுதியானது நுண்மையான பனிக்கட்டி போன்ற தூசு துகள்களால் ஆனது.

கருந் துளை - Black Holes (video)

அண்டத்தில் காணப்படும் கருந் துளை  சம்பந்த்தமான விவரணம்.

Tuesday, March 8, 2011

கற்பனை செய்து பார்த்திருப்போமா? (பட இணைப்பு)

தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி
இயற்கையில் நாம் காண்பவற்றில் உள்ள வண்ணங்களை எதுவித மாற்றமுமின்றி உண்மையான நிறத்தை எம் சித்திரங்களுக்கு தீட்ட முடிந்தால் எப்படியிருக்கும்! இப்படி கற்பனை செய்பவை எல்லாம் உண்மையில் நடக்கக்கூடிய சாத்தியமே இருக்காது என எண்ணியிருப்போம்.

ஸ்லிம்மா இருக்க ஸ்பெஷல் டிப்ஸ்

அழகுக் கலை
சேலை, சுடிதாருக்கு டாட்டா காட்டிவிட்டு டைட் ஜீன்ஸ், குட்டி டாப், குர்தி, லெகின்ஸ் என நவநாகரிக உடைகளை அணிவதே இளம்பெண்களின் விருப்பமாக உள்ளது. இந்த ஆடைகளுக்கு உடல்வாகும் ஒத்துழைக்க வேண்டும். மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், வயதுக்கு மீறிய உடல்பருமனோடு இருக்கும் இளம்பெண்கள் இந்த உடைகளை நினைத்து பார்க்கவே முடியாது. இவர்களுக்கு டிரெண்டி டிரஸ்ஸிங் மிகப்பெரிய கனவு. உடற்பயிற்சி மற்றும் உணவில் கவனம் செலுத்தினால் கனவு நனவாகும் என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா.

சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி (பட இணைப்பு) _

பெண் மம்மி
சீனாவின் கிழக்கு பகுதியில் சுமார் 700 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படும் பெண்
மம்மியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின்
டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே இதனை
முதலில் கண்டுள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பெண் மம்மியானது 1368-
1644 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என
ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மம்மியில்அணிவிக்கப்பட்டிருந்த
ஆடையும் அதனைப் பறைசாற்றுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பூமிக்கு வெளியே மனித உயிர்கள்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

நாசா
பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரி கற்களை சோதனையிட்டதில், அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை, நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.

Saturday, March 5, 2011

ஆப்பிள் சாப்பிட்டா ஆயுள் கூடும்

ஆப்பிள் நல்லா சாப்பிடுங்கோ
அன் ஆப்பிள் எ டே, கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பது அனைவரும் அறிந்த மொழி. பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம். அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது. ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது.

11 கோடி ஆண்டு பழைய யானை சைஸ் டைனோசர்

டைநோசெர்
11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களிலேயே தாதா போன்று வலிமையாக ஒரு டைனோசர் வகை இருந்தது தொல்பொருள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உட்டா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் 1994 ம் ஆண்டு சுரங்கம் தோண்டும்போது சில எலும்புகள், படிமங்கள் கிடைத்தன. அதுபற்றி தொல்பொருள் ஆய்வுத் துறையினர், விலங்கியல் நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி நடத்தினர்.

மின்னஞ்சல்களை படித்து சொல்லும் புதிய கார்

நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
கற்பனையில் நினைப்பவற்றை இன்று நிஜத்திற்கு மாற்றித் தந்து கொண்டிருக்கிறது இன்றைய
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்.


குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்!

பச்சை வாழைப்பழம்

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....




Thursday, March 3, 2011

கொழுப்பு நிறைய இருந்தால் ஞாபக சக்தி குறைந்துவிடும்

கொழுப்பு அதிகமானால் ஞாபக
சக்தி குறைந்துவிடும்
உடலுக்கு தீமை விளைவிக்கும் அதிக கொழுப்பு, உயர்ரத்த அழுத்தம் போன்றவற்றால் நினைவாற்றல் பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பாரிசில் உள்ள ப்ரெஞ்ச் நேஷனல் சுகாதாரத்துறை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாரா கபாஷியன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

Wednesday, March 2, 2011

பூமியின் மொத்த மதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரம் லட்சம் கோடி...

பூமியின் மதிப்பு
பூமி உட்பட கோள்களை கரன்சி மதிப்பில் கணக்கிடும் முறையை விண்வெளி விஞ்ஞானி கிரேக் லாக்லின் கண்டுபிடித்துள்ளார். அவரது கணக்கின்படி, நாம் வாழும் பூமியின் பண மதிப்பு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் லட்சம் கோடி. கொஞ்சம் தலை சுற்றவே செய்யும். அதாவது 3,000 ட்ரில்லியன் பவுண்டு. (1 ட்ரில்லியன் =1 லட்சம் கோடி) கோள்களின் அளவு, வயது, வெப்பம், உயிரினங்கள், அடர்த்தி  மற்றும் வளங்கள் ஆகியவை அடிப்படையில் மதிப்பை கிரேக் கணக்கிடுகிறார். அதன்படி, பிரபஞ்சத்தில் உள்ள கோள்களிலேயே பூமிதான் விலை மதிப்பில் முதலிடம் வகிக்கிறது. செவ்வாய் கிரகத்தின் மதிப்பு ரூ. 7.2 லட்சம் மட்டுமே.

புதிய பாதையில் பிரவேசிக்கும் இன்டர்நெட்!

இணைய புரட்ச்சி
இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது. தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம்.

Tuesday, March 1, 2011

ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.

தட்டச்சு
ஒன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு  செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. 

கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பது தான்.

டைப்ரைட்டிங்  வகுப்புக்கு கூட செல்ல நேரம் இருக்காது இந்தநிலையில் நாம் ஆன்லைன் மூலம்  டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவத்தான் இந்தத்தளம் உள்ளது.