Monday, February 29, 2016

பதவி வெற்றிடம்-தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முகாமைத்துவ உதவியாளர் ( ஒப்பந்தம்)




பெண்களே எச்சரிக்கை - ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…!


Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.
இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…!
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும்கண்டு புடிக்க முடியாது.
மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால்அடிமை ஆகி விடுவார்களாம்.
அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன்வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.
மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும்என்கின்றனர் மருத்துவர்கள்.
இதைப் போன்றநிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..!
மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம்இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள்.
மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும்குடிக்காதீர்கள்…!
ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம்இவை ஏற்றப்படலாம்….!
குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப் பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன் பாடு அதிகரித்துள்ளது.
அத்துடன் வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப் பட்டுள்ள இம் மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.
வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத் தக்கது விரைவில் முழுமை விபரம்…..
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி…
பொது நலம் கருதி வெளியிடுவோர்…


இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர், இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றையை முதலாவது அமர்வில் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் பேரவையின் தலைவர் சொய் கியோம்லிங் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர். இதன்போது ஐ.நா ஆணையாளர், இலங்கை தொடர்பான விரிவான விளக்கமொன்றை அவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா ஆணையாளர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், இங்கு தாம் அறிந்த விடயங்கள், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து சபையில் விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன், இதற்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் தமது கருத்துக்களையும் முன்வைக்கவுள்ளன.
ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் சர்வதேசத்தின் பங்களிப்புடனான விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேண்டுமென பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னரான அமர்வுகளில், இலங்கைக்கு எதிராக செயற்பட்டு பிரேரணைகளை முன்வைத்த அமெரிக்கா, கடந்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு சார்பான வகையில் பிரேரணை முன்வைத்ததோடு, அதற்கு இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இணை அனுசரணையும் வழங்கியிருந்தன.
இதேவேளை, இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, 31ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டுமென கடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே ஜனாதிபதி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். 

சிரியாவில் போர் நிறுத்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

சிரியாவில் கொண்டுவரப்பட்ட மோதல் தவிர்ப்பு, இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. கடந்த 5 வருடங்களில், அமைதியான நாளாக, இன்றைய தினம் அமைந்தது. மோதல் தவிர்ப்பின் முதல் நாளான சனிக்கிழமை, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதோடு, அரசாங்கத் தரப்பும் சிரியப் போராளிகளும், மற்றைய தரப்பைக் குற்றஞ்சாட்டியிருந்தன. இதுகுறித்து, டமாஸ்கஸ்ஸிலுள்ள மருத்துவபீட மாணவனொருவன் கருத்துத் தெரிவிக்கையில், 'குண்டுகளின் சத்தமின்றி நாங்கள் துயிலெழுந்தது, இது தான் (அண்மைக்காலத்தில்) முதற்தடவையென்று நான் நினைக்கிறேன்" என்றார். இந்த மோதல் தவிர்ப்பைக் கண்காணிப்பதற்காக, ஐக்கிய அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள குழு, சனிக்கிழமையன்று மோதல் தவிர்ப்பு, பெருமளவில் வெற்றிகரமானதாக அமைந்ததாகத் தெரிவித்தது. மோதல் தவிர்ப்பை மீறிய சில சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை, எனினும் அவை, விரைவிலேயே இல்லாது போனதாகத் தெரிவித்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமையை விட அமைதியான சூழலே காணப்பட்டதாக, அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மோதல் தவிர்ப்பு பின்பற்றப்படுகின்ற போதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. றக்கா மாகாணத்திலுள்ள தல் அபியட் நகரில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதோடு, குர்திஷ்கள் தரப்பில் 20 பேரும் பொதுமக்களில் இருவரும் கொல்லப்பட்டனர். அதேபோன்று, சனிக்கிழமை மாத்திரம், ஐ.எஸ்.ஐ.எஸ் குழு மீது, அமெரிக்க விமானங்களால் 10 வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, மோதல் தவிர்ப்புக்கு அமைவாக, ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-நுஸ்ரா தவிர்ந்த ஏனைய குழுக்கள் உள்ள பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களை நிறுத்துவதாக, ரஷ்யா அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலிகெப்டர், பல்கேபெத்த பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஹெலியொன்று விபத்துக்குள்ளாகவில்லை என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இதேவேளை, தெனகல பகுதியில் உள்ள காட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கல்முனை பெண் முகாமையாளர் கொலை சந்தேகநபர் பிடிபட்டார்.

கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முன்னர் முகாமையாளராகப் பணிபுரிந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரே இக்கொலை தொடர்பான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ. அப்துல் கபார் தெரிவித்தார்.
வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்ணும், கொலைச் சந்தேக நபரான முன்னாள் முகாமையாளரும் உடன்பிறவாச் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது. இருவரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவர்கள்.
முன்னாள் முகாமையாளரின் நிதி தொடர்பான பிரச்சினையே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.
கல்முனை, மட்டக்களப்பு பிரதான வீதியில் மிகவும் சனசந்தடிமிக்க வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள இந்நிதிநிறுவன அலுவலகத்தில் இச்சம்பவம் பட்டப்பகலில் இடம்பெற்றமை பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
அதனால், செய்தி அ றிந்ததும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அவ்விடத்திற்குச் சென்று பல மணி நேரம் காத்திருந்தனர். நற்பிட்டிமுனை குளோரி வீதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்ற இளம் பெண் முகாமையாளரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தாய் என்பதும் கணவர் தையல் வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:-
வழமை போன்று சனிக்கிழமையன்று காரியாலயத்துக்கு சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது. அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் காப்புகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் உணவுக்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது இந்த உதவி முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் கபார் தலைமையிலான பொலிஸ் குழுவினர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், அம்பாறையிலிருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட ‘சோக்கோ் பொலிஸ் அணியினர் விசாரணையிலீடுபட்டனர்.
கல்முனை மாவட்ட நீதிவானும், பதில் நீதிபதியுமான ராமகமலன் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து விசாரணைகளை நடாத்தினார். மூடிய அலுவலகத்துள் பிற்பகல் 3 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை விசாரணை தொடர்ந்தது.
அலுவலக ஊழியர்கள் அறுவர், சந்தேக நபரான முன்னாள் முகாமையாளர் பொன்னம்பலம் உதயகுமார் ஆகியோரை பொலிசார் 4 மணி நேரம் பூரண விசாரணை செய்துள்ளதோடு கொலையாளியை கையும் மெய்யுமாக அடையாளம் கண்டனர்.
கொலையாளியை அடையாளம் கண்டது எப்படி?
நிறுவனத்துக்குள் வைக்கப்பட்டிருந்த தலைக் கவசத்தை பற்றி சந்தேக நபரிடம் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணை செய்துகொண்டிருந்த போது சந்தேக நபரின் கை விரலில் புதிய காயம் ஒன்று இருந்துள்ளது. அதனை விசாரித்த போது வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த போது ஏற்பட்ட காயம் என அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை உறுதிப்படுத்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று விசாரித்த பொலிசார், “அப்படியொன்றும் நடக்கவில்லையென ஊர்ஜிதம் செய்தனர். சந்தேக நபரின் காயப்பட்டிருந்த விரல் நகம் துண்டிக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கபார் கொலை செய்யப்பட்ட சடலத்தின் வாய்ப் பகுதியை பார்வையிட்டபோது சந்தேக நபரின் கை விரல் நகம் சடலத்தின் வாய்ப் பகுதியில் இருந்துள்ளது.
கொலைச் சம்பவம் நடைபெற்ற போது அப்பெண் கொலையாளியின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிசெய்த போது விரல் கடிக்கப்பட்டு நகம் வாயினுள் சென்றிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலை நடைபெற்ற நேரமும், இடமும் கொலையாளிக்கு ஒரு கொலை செய்யக்கூடிய வாய்ப்பு குறைவாக இருந்த போதும் நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலையாகவே பார்க்க முடிகின்றது.
நிறுவனத்தில் யாரும் இருக்கவில்லை. காவலாளி இல்லை, சீசீரிவீ கமரா இல்லை. இத்தனை விடயங்களும் ஒரே நேரத்தில் அறிந்திருக்கக் கூடியமையானது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அல்லது அந்த நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்தவரால் மட்டுமே தீர்மானித்திருக்க முடியும்.
இந்த நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்கான காரணமென தெரியவருகிறது. இது குடும்ப தகராறாக இருக்கலாம் என்று பலரால் ஊகம் தெரிவிக்கப்பட்டாலும் கொல்லப்பட்ட புதிய முகாமையாளரின் வருகையின் பின்னர் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள பல மோசடி சம்பவங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.
இதனைத் தாங்க முடியாத நிலையில் இக் கொலைக்கான திட்டம் வகுக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று முன்தினம் கொலைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் திரண்ட மக்களினால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டன. குறித்த பிரதேசம் எங்கும் பொலிசார் குவிக்கப்பட்டு அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டது.
நாட்டில் பல வருடங்கள் கடந்தும் கண்டு பிடிக்க முடியாமல் உள்ள சூழலில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்று 5.00 மணித்தியாலத்தில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டமையானது கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ. ஏ. கப்பாரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
பாரிய வன்முறை சம்பவம் ஒன்று அப்பிரதேசத்தில் நடப்பதற்கான சூழல் அமைந்திருந்த போதும், எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் மிக சூட்சுமமாக கொலையாளி கைது செய்யப்பட்டமைக்கு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சாமர்த்தியமான நடவடிக்கையே காரணமாகும்.
சாப்பாட்டுக்கு வருவேன் என்றவர் வரவில்லை
கொலை செய்யப்பட்ட பெண் முகாமையாளர் கர்ப்பிணி என தகவல்கள் வெளியாகிய போதிலும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.
இவர் கடமைக்குச் சென்றதும் வீட்டிலிருந்து பகல் உணவு அனுப்பப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. சம்பவ தினம், மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டே சுலக்ஷனா சென்றுள்ளார்.
வீட்டிலிருந்து அன்றைய தினம் அலுவலகம் புறப்படுவதற்கு சற்றுமுன்னர் தாயாரை அழைத்த சுலக்ஷனா, “பிள்ளைக்குச் சாப்பாடு கொடுங்கள். நான் சாப்பாட்டுக்கு வருகிறேன்” என கூறிவிட்டே அலுவலகம் புறப்பட்டுள்ளாரென குடும்ப உறவிகனர்கள் தெரிவித்தனர்.

Sunday, February 28, 2016

ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு.


இலங்கையின் அரசியல் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்திய ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது . இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  குணசீலன் சௌந்தரராஜா தலைமையில்  மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது . இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வில் ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தோழர்கள் கலந்துகொண்டனர் . இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு    இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து சுயேட்சைக் குழுவாக பொதுத் தேர்தலில் பங்கேற்று 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு   வடக்கு கிழக்கு மலையக மக்களின் தற்கால தேவைகளை உணர்ந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சியாக தன்னை வெளிப்படுத்திக்  கொள்வதாக மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது . இந்நிகழ்வில்   ஈரோஸ் ஜனநாயக முன்னணி செயலாளர் நாயகம்  இராஜேந்திரா , ஈரோஸ் மத்திய குழு உறுப்பினர்  த . சபாரெத்தினம்  மற்றும் மட்டக்களப்பு  , அம்பாறை  , திருகோணமலை  , வவுனியா  ,யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு  ,கிளிநொச்சி , மன்னார்  ,  மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கலந்துகொண்டனர் .


முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் ஏழ்மை ஏன்?

இலங்கையில் மிகவும் வறுமையான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டமும், அதற்கு அடுத்ததாக மன்னார் மாவட்டமும் உள்ளதாக, உலக வங்கியின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த பருத்தித்துறை அபிவிருத்திக்கான ஆய்வு மையத்தின் ஆய்வாளர் மு.சர்வானந்தன், நிலப்பரப்பில் ஒப்பீட்டளவில் பரந்துபட்ட மாவட்டங்களான இவை, காலாகாலமாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகவும், அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்களையும் இடர்களையும் எதிர் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அங்குள்ள மக்கள் ஒரு சில இடங்களில் மட்டும் செறிந்து வாழ்கின்றமை வறுமை நிலைக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், இந்த மாவட்டங்களின் வறுமை நிலைக்கு முன்னைய அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம் என குற்றஞ்சாட்டினார்.
இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பபதுடன், துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்து கொடுப்பதன் ஊடாக, வறுமையைப் போக்கி மாவட்டத்தை அபிவிருத்தி நோக்கி எடுத்துச் செல்ல முடியும் என, விவசாயம் மற்றும் மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மட்டக்களப்பு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளும் வறுமையின் பிடியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - பிபிசி தமிழ் 

ஹிலாரி கிளிண்டன் வெற்றி

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் வெட்பாளர் தேர்தலில் சவுத் கரோலினாவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் போட்டியிட்டார். இதுவரை லோவா, நிவேடா, நியூஹாம்சியர் மற்றும் சவுத் கரோலினா ஆகிய 3 மாகாணங்களில் வேட்பாளருக்கான தேர்தல் நடந்துள்ளது. அவற்றில் லோவா, நிவேடாவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று சவுத் கரோலினாவில் பிரசாரமும், அதை தொடர்ந்து தேர்தலும் நடந்தது. இதிலும் ஹிலாரி வெற்றி பெற்றார். இதன் மூலம் 4 மாகாணாங்களில் நடந்த தேர்தலில் 3 மாகாணங்களில் அவர் வென்றுள்ளார்.

ஜப்பான் மக்களின் பிறப்பு விகிதம்.

ஜப்பானில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் அளவுக்கு மக்கள் தொகை குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பில் எப்போது சீனாவைப் பின்னுக்குத் தள்ளப்போகிறோமோ என்று இந்தியா கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜப்பானோ, மக்கள் தொகை சரிவை நினைத்துக் கலங்கியுள்ளது.
மக்கள் தொகை குறைந்திருப்பதற்கு, ஜப்பான் மக்களின் பிறப்பு விகிதம் குறைந்ததும், பல்வேறு காரணங்களால் அந்நாட்டுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கைக் குறைந்ததுமே என்று கருதப்படுகிறது.
அதோடு, இன்னும் 30 ஆண்டுகளில் ஜப்பானில் வயதானவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள் என்றும், இன்னும் மக்கள் தொகை குறைய வாய்ப்பிருப்பதாகவும் அந்நாட்டின் மக்கள் தொ கணக்கெடுப்பு ஆய்வாளர்கள் கவலையை அதிகரிக்க வைத்துள்ளனர்.

அனைவருக்கும் தூக்கு தண்டனை.

தெஹ்ரான் : ஈரான் நாட்டின் சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதைப் பொருள் கடத்தியதாக, அவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாததால், வருவாய் ஈட்டுவதற்கு வேறு இல்லாததால் அவர்கள் போதை கடத்தியதாக சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

சிரியாவில் போர் ஓய்வு - அமேரிக்கா , ரஷ்யா முயற்சி



அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சி யால் சிரியாவில் நேற்றுமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு தற்காலிகமாக குண்டு சத்தம் ஓய்ந்திருப்பதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே பகைமை நீடிக்கிறது. அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் ஆசாத், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் போரிட்டு வருகின்றன.
இதில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்., அல்-காய்தாவுக்கு ஆதர வளிக்கும் அல் நஸ்ரா ஆகியவை ஐ.நா. சபையால் தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப் பட்டுள்ளன. சிரியாவின் பெரும் பகுதி தற்போது ஐ.எஸ். கட்டுப் பாட்டில் உள்ளது.
இவை தவிர சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகள், குர்து இனத்தைச் சேர்ந்த குழுக்கள் என 160-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற் றில்குர்து இன குழுக்கள் சில இடங் களில் மட்டும் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா முயற்சி
மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் குர்து குழுக்களுக்கும் ஆரம்பம் முதலே அமெரிக்கா ஆதரவளித்து ஆயுதங்களை வழங்கி வருகிறது.
அதேநேரம் ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டு அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவின் உதவியால் அண்மைக்காலமாக அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி யுள்ளது. மிதவாத எதிர்க்கட்சிகளின் தலைமையிடமாகக் கருதப்படும் அலெப்போ நகரை ஆசாத் படைகள் சுற்றிவளைத்தன.
இதனால் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ரஷ்யாவுடன் சமரசத்தில் ஈடுபட் டார். அதன்பயனாக சிரியாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இரு வல்லரசுகளும் ஒப்புக் கொண்டன.
அதன்படி சிரியாவில் நேற்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. மிதவாத எதிர்க்கட்சி களைச் சேர்ந்த 97 போராட்டக் குழுக்களும் அதிபர் ஆசாத் படைகளும் சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிக்க உறுதியளித் துள்ளன. இதனால் சிரியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று தற்காலிகமாக குண்டு சத்தம் ஓய்ந்தது.
எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அல்-நஸ்ரா தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன. அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பதற்றத்துடனேயே வாழ்கின்றனர் என்று சர்வதேச போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, February 26, 2016

அவசர உதவிக்கு அழைக்கின்றோம்



இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு) Stem தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வோல்தம்ஸ்டோ (Walthamstow) பகுதியை சேர்ந்தவர் வித்யா அல்போன்ஸ்.
இலங்கையை சேர்ந்த இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் தொடர்பாக படித்து வருகிறார்.
காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர் லூக்கிமியா என்னும் இரத்த புற்றுநோயால் வித்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக உள்ளதால் ஏற்படும் இந்நோய் இரத்த அணுக்கள் உருவாகும் இடத்தில் ஏற்படுவதாகும்.
மேலும் சில மாதங்களில் அவர் இறந்துவிடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வித்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.
சில வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யா மேல் சிகிச்சைக்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உடனடியாக குருத்து அணு மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது சகோதரரின் குருத்து அணுவை மருத்துவர்கள் சோதித்ததில் 50 சதவீதம் மட்டுமே ஒத்துப்போனது.
எனவே அவருக்கு குருத்து அணு தானம் பெறுவதற்காக குருத்தணு தானம் தொடர்பான விழிப்புணர்வை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வித்யா கூறுகையில், ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் எனக்கு ஆதரவாக குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். எனக்கு நம்பிக்கையாக உள்ளது.
இந்த விழிப்புணர்வு மூலம் எனக்கு நன்மை ஏற்படவில்லை என்றாலும் கண்டிப்பாக யாருக்காவுது நன்மை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
To sign up to the donor list go to www.anthonynolan.org if you’re 16-30.