Wednesday, March 16, 2011

பூமியர்திவு என்றால் என்ன என்று தெரிய வேண்டுமா!

நிலநடுக்கம்/பூமியதிர்வு
நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்:earthquake) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்திட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன.
பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம்.

இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.
இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.

பூமியதிர்வு வரலாறு
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு.1177 இல் நேர்ந்துள்ள ஓர் பூகம்பம்
சைன வரலாறுகளில் பதிவாகி யுள்ளது! ஐரோப்பாவின் வரலாற்றில் பண்டைய நிலநடுக்கம் ஒன்று
கி.மு.580 ஆண்டில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது! 1556 ஆம் ஆண்டில் சைனாவின் ஷான்ஸி
மாநிலத்தில் நேர்ந்த மாபெரும் பயங்கரப் பூகம்பத்தில் 830,000 மக்கள் மாண்டதாக அறிய
வருகிறது! ஜப்பான் டோக்கியோவில் 1703 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 மக்கள்
மரித்ததாகத் தெரிகிறது! ஐரோப்பாக் கண்டத்தில் போர்ச்சுகல் லிஸ்பனில் 1755 இல்
நேர்ந்த பூகம்பத்தில் 70,000 பேர் மாண்டனர்! வட அமெரிக்காவில் 1811-1812 ஆம்
ஆண்டுகளில் நியூ மாட்டிரிட், மிஸ்ஸெளரியில் (8.1, 8.0, 7.8) ரிக்டர் அளவில் முறையே
மூன்று பெரும் நிலநடுக்கங்கள் நேர்ந்துள்ளன!
கடைசியாக ஜப்பானில் நடந்த பூமியாதிர்வே மிகவும் கூடுதலாக இருக்கலாம் .
இதன் அளவு 9 ரிக்டர் ஆகும்.

இந்த காணொளியில் நீங்கள் இன்னும் தெளிவாகலாம்

Earthquake - Discovery Channel from mrollie on Vimeo.