Monday, March 28, 2011

பிரபஞ்சத்தின் மூன்று வடிவங்கள்

பிரபஞ்சத்தின் வடிவங்கள்
பிரபஞ்சம் எத்தகைய வடிவமுடையது என்ற கேள்வி சற்று சிக்கலனாது. எனினும் இதுவரை அறிவியலார் மேற்கொண்டுள்ள ஆய்வுகளினின்று மூன்று வடிவங்கள் பற்றிக் கருத்துரைத்துள்ளனர். அவை கோள வடிவான மூடிய பிரபஞ்சம், சமதளப் பிரபஞ்சம், பரவளை வடிவப் பிரபஞ்சம் என்பனவாகும். கோள வடிவான மூடிய பிரபஞ்சம் எல்லையற்றது. ஆனால் அளவிடக் கூடியது.
இப்பிரபஞ்சத்தில் மையமோ அல்லது விளிம்புகளோ கிடையாது. ஆனால் சமதள மற்றும் பரவளை வடிவப் பிரபஞ்சம் எல்லையற்று எல்லாத் திசைகளிலும் பரந்துள்ளது. இதற்கும் விளிம்போ, மையமோ கிடையாது. இப்பிரபஞ்சத்தின் வயது என்ன என்பதை இதுவரை துல்லியமாகக் கணக்கிட முடியவில்லையாயினும் தோராயமாக 1800 கோடி ஆண்டு வயதுடையது. என (இதுவரை நம்மால் முடிந்த ஆய்வுகளினின்று) அறிவியலார் கணக்கிட்டுள்ளனர். எல்லாம் அடங்கியுள்ள பிரபஞ்சம் 1000 கோடி ஒளி ஆண்டுகள் விட்ட முடையது என ஒருவாறு ஊகிக்கிறார்கள்.