Thursday, March 10, 2011

அடுத்த வாரம் வானில் ஓர் அதிசயம் நிகழப்போகிறது

பூமியை நெருங்கும் சந்திரன்
அடுத்த வாரம் வானில் ஓர் அதிசயம் நிகழப்போகிறது. ஆம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன்  மீண்டும் பூமிக்கு அருகில் வரப்போவதாகவும் இதனால் பூகம்பம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த மாதம் 19ம் தேதி சந்திரன், பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது. அதாவது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைலாக குறையும். கடந்த 1992ம் ஆண்டுக்குப் பிறகு பூமியும் சந்திரனும் மிக அருகில் வரப் போகின்றன.
வரும் பவுர்ணமி அன்று சந்திரன் வழக்கமான அளவைவிட சுமார் 90 சதவீதம் பெரியதாக இருக்கும். அடுத்த மாத பவுர்ணமி வரை இதை பார்க்க முடிவதுடன் வெளிச்சமும் அதிகமாக இருக்கும். 'சூப்பர்மூன்' என்ற இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டது. அதாவது 18 முதல் 19 ஆண்டு இடைவெளியில் நிகழ்கிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் இ&மெயில்கள் பரவி வருகின்றன.

"வானில் அதிசயங்கள் நிகழும்போது, பூகம்பம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனினும், "பூகம்பம், எரிமலை வெடிப்பு உட்பட பூமியில் நிகழும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது. கடற்கரை நகரங்களில் மட்டும் வானிலையில் சிறு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலில் அலை அதிகரிக்கும்." என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஜான் கெட்லே தெரிவித்துள்ளார்.