Monday, February 28, 2011

விலங்குகளின் குளிர்கால உறக்கத்தைப் போல மனிதர்களை செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியுமா?

மனிதனின் செயற்கை உறக்கம்
சில விலங்குகள் குளிர் காலத்தை  உறக்கத்தில் கழிப்பதைப் போல மனிதர்களையும் செயற்கையாக உறக்கத்தில்  ஆழ்த்தமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  இதற்கான ஆராய்ச்சிகளில்  தாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.  பொதுவாக  அலஸ்கான் கரடிகள் பனிக்காலத்தின் போது சுமார் 7 மாதம் வரை நித்திரையிலேயே  கழிக்கக் கூடியன.

ஆபத்தை முன்கூட்டியே கண்டறியும் உபகரணம் அறிமுகம் (காணொளி இணைப்பு)

வோல்வோ பாதுகாப்பு
பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன் அவை மோதலாம்
என்ற நிலையில் அது தொடர்பில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்புவது மட்டுமல்லாமல்,
உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் கூடிய உபகரணமொன்றினை கார்
தயாரிப்பு நிறுவனமான வொல்வோ உருவாக்கியுள்ளது.

முதன் முறையாக புதனில் இறங்கும் அமெரிக்க விண்கலம்!

விண்கலம்
கடந்த 2004&ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஏவிய ‘மெசஞ்சர்’ விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தில் அடுத்த மாதம் தரையிறங்க உள்ளது. 

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ புதன் கோள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. 

2011 இல் எந்த இணைய உலாவியின் (Browser) மதிப்பு உயரும்?


இணைய உலாவிகள்
கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுசர்களுக் கிடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

எந்த பிரவுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களிடையே பிரபலமாகும் என்று கணக்கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங்களில், ஒவ்வொரு பிரவுசரும் தங்களை எந்த பயன்பாட்டில் நிலை நிறுத்த, புதிய வசதிகளைத் தந்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்று பார்க்கலாம்.

ஆயுள் காலத்தில் 14 ஆண்டுகளைக் கூட்ட 4 வழிகள்!

மனித ஆயுட்காலம்
ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு முக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.  
தேவையான உடற்பயிற்சி, அதிக அளவில் மது அருந்தாமை, அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை மிகுதியாகச் சேர்த்துக் கொள்வது மற்றும் புகைப்பழக்கம் இல்லாமை ஆகிய நான்கினையும் பின்பற்றினால், ஆயுட்காலத்தில் 14 ஆண்டுகளைக் கூட்டலாம் என்று இங்கிலாந்தின் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆகியவை இணைந்து மேற்கொண்ட மருத்துவ ஆய்வின் முடிவு தெ
ரிவிக்கிறது.




Sunday, February 27, 2011

இதயத்தை வெட்டினால் மீண்டும் வளரும்

புதிதாக பிறக்கும் பாலூட்டிகளின் இதயத்தை வெட்டினால் அது மீண்டும் வளரும் தன்மை
கொண்டதாக உள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சுண்டெலி பிறந்த ஒரு நாளில் அதன் இதயத்தின் பெரும் பகுதி வெட்டப்பட்டது. இந்த
வெட்டப்பட்ட இதயப்பகுதி 3 வாரத்தில் மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது. மீன் மற்றும்
நீர் நிலம் என இரண்டிலும் வாழும் உயிரினங்கள் தங்களது இதயத் திசுக்களை மீண்டும்
வளர்க்கும் திறன் கொண்டவை ஆகும்.

சூரியனிலிருந்து தோன்றும் கதிர்களால் வானில் வண்ணங்கள்! பூமிக்கு ஆபத்தா

சூரியவெப்பக் காற்றின் மூலம் வானில் தோன்றும் பல்வேறு வண்ணங்களால், பூமிக்கு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தப்பிக்க வழி என்ன என விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
சூரியனின் வெப்ப அளவு 1750 ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகளால் அளவிடப்பட்டு வரைபடமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருப்பதாக, கணக்கெடுப்புகள் உறுதி செய்துள்ளன. தற்போது 23வது முறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சூரியன் மிக அமைதியாக இருப்பதாக படங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, February 26, 2011

என்சைம் தடுப்பு மூலம் மார்பக புற்றுநோய் பரவலை தடுக்கலாம்

என்சைம் என்ற வேதிப்பொருளை தடுப்பதன் மூலம் மார்பக புற்று நோய் இதர உறுப்புகளுக்கு
பரவுவதை தடுக்க முடியும் என பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தினர்
கண்டுபிடித்துள்ளனர்.
LOXL2 என்சைமை தடுப்பதன் மூலம் புற்றுநோய் இதர உறுப்புகளுக்கு பரவுவதை
தடுக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர். 90 சதவீத புற்றுநோய் மரணங்களுக்கு கட்டிகள்
உடலின் இதரப்பகுதிகளுக்கு இடம் பெயர்வதே காரணமாகும்.

ஒரு நோயாளிக்கு இரு இதயங்கள்! : மருத்துவ உலகின் புதிய சாதனை! (காணொளி இணைப்பு)

மருத்துவ வரலாற்றில் மிக அரிதான சத்திரசிகிச்சை ஒன்றை அமெரிக்க வைத்தியர்கள்
அண்மையில் வெற்றிகரமாக முடித்தனர்.

நோயாளி ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு
இதயத்தினைப் பொருத்தியே அவர்கள் இச்சாதனையைப் புரிந்தனர்.

சென் டியாகோ
தோர்டன் வைத்தியசாலையிலேயே இச்சத்திரசிகிச்சை இடம்பெற்றது.

விண் வீழ்கற்கள் அல்லது மெட்டியோரைட்டுகள்

'விண்வெளியில் ஹாயாக படு பயங்கரளமான வேகத்தில் ஒரு பேஸ்பால் அளவு உள்ள கற்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் சில ஒரு சிறு தானியம் அளவுக்கு சிறியதாகவும் இருக்கின்றன. இவ்வாறு விண்வெளியில் சுற்றித் திரியும் சிறிய பொருட்களை 'விண்வீழ் உடல்கள்’ என்று அழைக்கின்றனர்.

ஆங்கிலத்தில் இதை 'மெட்டீரோயராயிட்ஸ்’ (Meteoriods) என்கின்றனர். இந்த சிறு துகல் ஒன்று பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்த உடனே, நம் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளுடன், உராய்கின்றன. இந்த உராய்வால் அவற்றின் வெப்பநிலை 3000 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உயர்கிறது.

ஸ்மார்ட் போனின் மூலம் மரபணு தொகுப்பை கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்

பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய மென்பொருளின் மூலம் மக்கள் தங்களது ஸ்மார்ட்
போனில் அவர்களது மரபணு தொகுப்பு முழு நிலையை கண்டறிய முடியும்.
இந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிரெஞ்சு சட்டப்படி
மரபணு நிலை குறித்த ஆய்வுக்கு கட்டுப்பாடு உள்ள
து. மரபணு தொகுப்பு நிலையை
கண்டறியும் மென்பொருளை மேற்கு பிரான்சின் போர்டாக்சின் 4 விஞ்ஞானிகள் உருவாக்கி
உள்ளனர். இந்த மென்பொருள் மூலம் டி.என்.ஏ சோதனை தகவல்களை பெற முடியும்.

Wednesday, February 23, 2011

புகைப்பதால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் இழப்பு: அதிர்ச்சித் தகவல்!

புகைபிடிப்பதால் தனது வாழ்நாளில் 10 ஆண்டுகள் வரை புகைப் பழக்கம் கொண்டவர்கள் இழக்கக் கூடும் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல், அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. புகைப் பழக்கத்தோடு பிற உடல்நலக்கேடான பழக்கங்களும் இருந்தால் 15 ஆண்டுகள் வரை வாழ்நாள் இழப்பு ஏற்படும் என்றும் அதில் தெரியவந்துள்ளது.

அப்பிள் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு ஐ பேட்


  அப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் கணனிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

அப்பிள் நிறுவனத்தின் தகவல்களுமைய சுமார் 15 மில்லியன் ஐ பேட்கள் உலகம் முழுவதும்ம் விற்பனையாகியுள்ளன.

Tuesday, February 22, 2011

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

Monday, February 21, 2011

பூமியில் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறியமுடியுமா? முடியுமே!

வெயில், காற்று, மழை, புயல், சூறாவளி, காட்டுத்தீ என இயற்கை சீறும்போது மனிதகுலம் பெரிதாக பாதிக்கப்படுகிறது. இவற்றை தடுக்க முடியாது என்றாலும் தப்பிக்கும் வித்தையை தெரிந்து வைத்திருப்பது நமது அறிவியல், தொழில்நுட்பத்தின் சாதனை. கடல் அலை மட்டத்தில் ஏற்படும் விபரீத மாற்றத்தை வைத்து சுனாமியையும் முன்கூட்டி உணரக்கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம்.

சிட்டுக் குருவி வடிவில் உளவு விமானம்

பதினாறு செண்டிமீட்டர் அளவுள்ள சிறு குருவி இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாபபுத் துறையின் பெண்டகனுக்கு உருவாக்கப் பட்டுள்ளது.
நாலு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும்.

மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்கள் (வீடியோ இணைப்பு)

ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இக்கருவி மூலம் மனித மூளையின் விருப்பபடி வாகனங்களை இயக்கலாம். வாகன ஓட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள்வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும்.

எதிர்கால வீடுகள் புதிய தொழிநுட்பத்தில் எவ்வாறு இருக்கலாம்

தென் கொரியா எதிர்காலத்தில்  வீடுகள் புதிய தொழிநுட்பத்தில் எவ்வாறு இருக்கலாம் என்பதை இப்போதே செய்யத்தொடங்கியுள்ளனர் இது ஒரு சிறந்த தொழிநுட்பமாக இருக்குமா ! இந்த விடியோக்களைப் பாருங்கள்  

Saturday, February 19, 2011

மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?

 உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை. மாரடைப்பு என்றால் என்ன?

விலங்குகளின் குளிர்கால உறக்கத்தைப் போல மனிதர்களை செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியுமா?

சில விலங்குகள் குளிர் காலத்தை உறக்கத்தில் கழிப்பதைப் போல மனிதர்களையும் செயற்கையாக உறக்கத்தில் ஆழ்த்தமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான ஆராய்ச்சிகளில் தாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Friday, February 18, 2011

இனி அறுவை சிகிச்சையின் போது நரம்புகள் மின்னும்: அமெரிக்க விஞ்ஞானிகள்

அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க நோயாளியின் உடல் நரம்புகளை ஒளிரச் செய்யும் திரவம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அறுவை சிகிச்சை என்றால் அனைவருக்கும் ஒரு வித பயம் ஏற்படுவது வழக்கம். காரணம் சிகிச்சையின் போது ஏற்படும் சில தவறுகளால் பல பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் புதிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான்.

Thursday, February 17, 2011

விண்வெளியில் தூசின் அளவு இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பூமண்டலத்தின் விண்வெளியில் தூசின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகியவற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.



மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கையில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

பேஸ்புக் பட்டனுடன் எச்.டி.சியின் சா சா மற்றும் சல்சா


  பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை சா சா (Cha Cha) மற்றும் சல்சா (Salsa) என பெயரிடப்பட்டுள்ளன.

மேற்படி கையடக்கத்தொலைபேசிகள் ஊடாக பாவனையாளர்கள் மிக இலகுவாக பேஸ்புக்கினை உபயோகிக்க முடியும்.

Monday, February 14, 2011

டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன- Nasa

சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ்கட்டியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும் அளவில் பூமி போல 760 மடங்கும் பெரியது. நமக்கு ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என ஒரே ஒரு சந்திரன்தான். மெகா சைஸ் சனி கிரகத்துக்கு 62 சந்திரன்கள்.

இலங்கையில் வேற்றுக் கிரக வாசிகளின் நடமாட்டம்?

இலங்கையில்  வேற்றுக் கிரக வாசிகளின் நடமாட்டம் காணப்பட்தாக லங்காதீப சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் நாட்டின் பல பாகங்களிலும் இந்த அதிசமான நிகழ்வுகள் நடைபெற்றதாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வேற்றுக் கிரகவாசிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக பல பாகங்களில் தகவல்கள் வெளியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, February 13, 2011

கைவிரலால் கணக்குப் பார்த்துவிடலாமே

ஐயாயிரம் பத்தாயிரம் என்றால் எப்படியாவது எண்ணி முடித்துவிடலாம். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் கச்சிதமாக எண்ணி முடிக்க என்ன வழி..? வங்கிகள் என்றால் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். வங்கிகளுக்கோ, பெரிய நிறுவனங்களுக்கோ அதை வாங்கி வைப்பதில் பெரிய பிரச்னை எதுவுமில்லை.ஆனால், தனி நபர்களுக்கு அது சாத்தியமில்லாத விஷயம்.

சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது: ஆராய்சித் தகவல்

உலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படுவது சீன பெருஞ்சுவர். நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில்(கி.மு. 220-206) கட்டப்பட்டது.

பக்கவாதத்திற்கு மஞ்சளில் இருந்து மருந்து

உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்று பக்கவாதத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் ஒரு சிலவற்றை சீர் செய்வதாக கூறப்பட்டுள்ளது.
முயல்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சாதகமான முடிவுகள் வந்துள்ளதை அடுத்து மனிதர்களிடம் சோதனை செய்ய செடார்ஸ் சினாய் மருத்துவ நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

டுவிட்டரை வாங்கப்போவது யார்?

 சமூக வலைப்பின்னல் தளமான டுவிட்டரை வாங்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிறுவங்களின் அதிகாரிகளின் இடையே கீழ்மட்ட அளவில் இது தொடர்பில் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Saturday, February 12, 2011

அமெரிக்க இராணுவத்தினரின் புதுவகை லேசர் தொழினுட்பம் - வீடியோ இணைப்பு

அமெரிக்க இராணுவத்தினரின் புதிய லேசர் தொழினுட்பதால் விண்ணில் பறந்தது கொண்டிருக்கும் விமானத்தை தாக்க வரும் ஏவுகணையை விண்ணிலேயே தாக்கியளிகலாம்.

அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம்

பைலட் இல்லாமல் தானே இயங்கக் கூடிய ஆளில்லா போர் விமானம் அமெரிக்காவில் சோதித்து பார்க்கப்பட்டது. கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உதவியுடன் இந்த விமானம் வெற்றிகரமாக பறந்தது. அமெரிக்க விமானப் படையில் ஆளில்லா போர் விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன.

ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை (பட இணைப்பு) _


  'அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள்.

Wednesday, February 9, 2011

நெரிசல் இடங்களை கடக்க விமானம் போல் பறந்து செல்லும் நவீன கார்; சாதாரண பெட்ரோலில் ஓடும்

சமீப காலமாக உலகம் முழுவதிலும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால் திட்டமிட்டப்படி ஒரு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் விமானம் போல் பறந்து சென்று கடந்து சென்றால் என்ன? என்று நமக்கு தோன்றும்.

Monday, February 7, 2011

பறவைகளின் மூளை அளவு குறைவு

செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட இடத்தில் காணப்படும் பறவைகளின் மூளை அளவானது 5 சதவீதம் வரையில் குறைவாக இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இந்த பகுதியில் காணப்பட்ட சுமார் 48 இனங்களை சேர்ந்த 550 வகையான பறவைகளிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

புதன் கோளில் அடுத்த மாதம் இறங்குது அமெரிக்க விண்கலம்

கடந்த 2004ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஏவிய ‘மெசஞ்சர்’ விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தில் அடுத்த மாதம் தரையிறங்க உள்ளது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ புதன் கோள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.

சூரியனின் முழுப் முப்பரிமாண தோற்றம்: அதிசய படங்கள்

மனித வரலாற்றில் முதன் முறையாக சூரியனின் 360 பாகை அதாவது முழுப் முப்பரிமாண தோற்றத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவினால் கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட ஸ்டீரியோ எனப்படும் இரட்டை விண்வெளி ஓடங்கள் சூரியனுக்கு நேர் எதிராகப் பயணித்து இம் முப்பரிமாண படங்களை பதிவு செய்துள்ளன.

Saturday, February 5, 2011

நீங்கள் வானியல் துறையில் ஆர்வமுடையவரா இணையுங்கள் நாசாவுடன்!

நாசா கடந்த 20 ஜனவரி ஒரு விண்கலத்தை ஏவியுள்ளனர். இது பூமியில் இருந்தது
மிக குறைந்த தூரத்தில் ஒரு ஒபிட்டில் சுற்றுகிறது .இதை நீங்கள் சாதாரண கண்களால் பார்க்ககூடியதாக உள்ளது. இந்த விண்கலத்தால் உலகின் காலநிலை சம்பந்தமான விடயங்களை ஆராய்கின்றது .
நீங்கள் இந்த விண்கலத்தை

தங்க அரிசி

தங்க அரிசி என்பது மரபணுப் பொறிமுறையின் மூலம் உயிர்ச்சத்து ஏ யின் முன்னோடித் தாதுவான பீட்டா கரோற்றினை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய நெல்லினமாகும். கடந்த 2000 ஆம் ஆண்டு பன்னாட்டு அரிசி ஆய்வு மையமும் (IRRI) ராக்கேபெல்லெர் அமைப்பும் (The rockefeller foundation) இணைந்து மரபணு மாற்ற உயிரினத்தின் ஐந்தாவது வருகையான இத்தங்க அரிசி உருவாக்கப்பட்டது.இது பற்றிய அறிவியல் தகவல்கள் 2000 ஆம் ஆண்டு Science சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

ஓசோன் தேய்விற்கான காரணங்கள்

ஓசோன் தேய்விற்கு ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) காரணங்களாக உள்ளன. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Friday, February 4, 2011

குடல் புற்று நோயினைக் கண்டறியும் நாய்

இதுவரை காலமும் நாய்களின் மோப்பசக்தியானது போதைப் பொருட்கள் , வெடிபொருட்கள் என்பனவற்றைக் கண்டுபிடிப்பதற்கே உதவி வந்தன.

எனினும் அண்மைக்காலமாக நாய்களின் மோப்ப சக்தியின் மூலம் நோய்களைக் கண்டறிய முடியும் என்பது தொடர்பில் அதிகளவான ஆராய்ச்சிகள் இடம் பெற்றுவருகின்றன.

சூரிய மண்டலத்தில் சுற்றும் விண்கற்களால் பூமிக்கு ஆபத்து வரலாம் !


பூமிக்கு அருகில் 134 விண்கற்கள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) கண்டுபிடித்துள்ளது. இதுவரை கண்டறியாத 20 வால் நட்சத்திரங்கள், 33 ஆயிரம் சிறிய கிரகங்கள் மற்றும் விண்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களை சுற்றி சூரிய குடும்ப ஏரியாவில் சுற்றிவரும் விண்கற்கள், சிறிய கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ‘நியோவைஸ்’ என்ற ஆய்வுத் திட்டத்தை நாசா 2009 ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.

Thursday, February 3, 2011

மாரடைப்பின் பின்னர் சுயமாக புதுப்பித்துக் கொள்ளும் திறனைப் பெறுமா மனித இதயம்?

சீப்ரா எனப்படும் மீன் வகையின் இதயமானது மாரடைப்பின் பின்னர் தானாக புதிப்பித்துக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதைப் போல மனித இதயமும் அத்தகைய திறனைப்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.