Tuesday, March 22, 2011

பூமிக்கு அருகில் வந்த சந்திரன்! (பட இணைப்பு)

பூமிக்கு அருகில் சந்திரன்
கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக சந்திரன் பூமிக்கு மிகவும் அருகில் வரும்
நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
'சுப்பர் மூன்' என அழைக்கப்படும்
இந்நிகழ்வினை உலகம் மக்கள் யாவரும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

சந்திரனின் முழு அழகினை கண்டு ரசிப்பது. மற்றையது இதனால் அழிவுகள் ஏற்படலாம் என
எச்சரிக்கை செய்யப்படிருந்தமையே அவை.

எனினும் எச்சரிக்கை
செய்யப்பட்டிருந்ததைப் போல அழிவுகள் ஏற்படாத போதும் மக்கள் அன்றைய தினத்தில்
சந்திரனின் அழகைக் கண்டுகளிக்கத் தவறவில்லை.

இவ் அபூர்வ நிகழ்வினை பலர்
தங்களது புகைப்படக் கருவிகளில் வெவ்வேறு விதமாகப் படம் பிடித்திருந்தனர்.


அவ்வாறு படம்பிடிக்கப்பட்டவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
சில உங்கள் பார்வைக்காக......




கிழக்கு லண்டன்





புனித மைக்கல்ஸ் டவர் கிளஸ்டன்பெரி டோர்



பெர்லின் ஜேர்மன்



சசெக்ஸ்