Saturday, November 30, 2013

வெந்தயத்தின் பயன்பெறுவோம்.

அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவக் காத்திருக்கிற அற்புத மருந்து  வெந்தயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். சாம்பாரோ, வத்தக்குழம்போ, புளிக்குழம்போ... எதுவானாலும்,  தாளிக்கும்போது சிறிது வெந்தயம் தூக்கலாகச் சேர்த்துப் பாருங்கள். முழுதாக வெந்தயம் சாப்பிடப் பிடிக்காதவர்கள், கொதித்து இறக்கும் முன்  வெந்தயப் பொடியைத் தூவிப் பாருங்கள்... உங்கள் சமையலறை வாசம், தெருக்கோடி வரை வீசும். மணத்தில் மட்டுமின்றி, குணத்திலும் மிகச்  சிறந்தது வெந்தயம்!மேலதிகமாக அறிந்துகொள்ள - http://ta.wikipedia.org/s/3rp 

Thursday, November 28, 2013

அரிய வகை டைனோசர் எலும்புக்கூடு ஏலத்தில் விற்பனை.

(BBC/TAMIL) பூமியில்150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உலவிய டைனோசர் ஒன்றின் எலும்புக்கூடு ஆறு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் கூடுதலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.இங்கிலாந்திலுள்ள பில்லிங்ஸ்ஹர்ஸ்ட் நகரில் இன்று மதியம் இந்த ஏலம் நடைபெற்றது.
கிட்டத்தட்ட முழுமையாக இருக்கும் இந்த டிப்லோடோகஸ் வகை டைனோசரின் புதைபடிவ எலும்புக்கூட்டில் அதன் நீண்ட கழுத்தும், சாட்டைப் போன்ற வாலும் காணப்படுகின்றன.
ஏலம் போகவுள்ள இந்த டைனோசர் எலும்புக்கூடு தலை முதல் வால்வரை 17 மீட்டர்கள் நீளம் கொண்டது.

Wednesday, November 27, 2013

மனிதனைப் போன்ற இயந்திர மனிதனை உருவாக்கி உள்ளனர்.(Human like robot)

உலகில் ரோபோட் என்றழைக்கப்படும் முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை – இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர். பெயர் ஞடஈ-2.மனிதனுக்கு உள்ள அத்தனை உறுப்புக்களையும் கொண்ட ரோபோவுக்கு “லெனின் கிரேடு’ என்று பெயர். இது ரோபோ இயல் மற்றும் பொறியியல் சைபர்னடிக்ஸ் கழகத்தில் உள்ளது.அயர்லாந்து அருகே அட்லாண்டிக் கடலில் ஏர்இந்தியா ஜெட் விமானம் வெடித்துச் சிதறியபோது கடலில் மூழ்கிய பொருள்களைக் கண்டெடுத்த ரோபோவின் பெயர் “ஸ்கார்ப்’.2050,ம் ஆண்டுக்குள் சிவப்பு விளக்கு ஏரியாக்களில் பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் இடம்பெறும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.