நித்திரையில் குறட்டை |
.நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங் கும். சுருங்கும் தொண்டைவழியாகச் செல்லும் காற்றுக்கு இப்போது உள் சென்று வெளியேற போதிய இடம் இல்லை.
ஆக சுருங்கிய தொண்டை வழியாகச் செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.
இந்த அதிர்வைத்தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை யில் உள்ள கே.கே.ஆர்.காது மூக்கு தொண்டை மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் ரவிராமலிங்கம்.

காரணங்கள்:
நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது. முழு தூக்கம் இருக்காது:
யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாகத் தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம்.
குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது. உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக் காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்கவாட்டில் படுக்க வேண்டும்.
4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்கக் கூடாது. சாப்பிட்ட உடன் படுக்க போகக் கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்தக் கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது வல்லுநரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3 வகை நோயாளிகள்:
குறட்டையின் தீவிரத் தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.
1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.
2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.
3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.