Thursday, May 29, 2014

யோக கலையின் மகத்துவம் - யோகாசனம் ஆரோக்கிய வாழ்விற்கு

யோகாவின் அருமை பெருமைகள் அகிலமெல்லாம் பரவி வருகின்ற காலம் இது. நம்மைவிட வெளி நாட்டினர் யோகாவில் ஈடுபாடு செலுத்தி பயின்று வருகின்றனர். நாமே இனி யோகா கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் கலிஃபோர்னியா சென்றால் தான் நல்ல ஆசிரியரிடம் பயில முடியுமென்னும் நிலைமை இப்போது நிலவி வருகிறது.
யோகா எப்போது தோன்றியது என்பதை வரையறுத்து சொல்ல முடியவில்லை கற்காலத்திலேயே யோகாப்பியாசம், தற்போது ஆஃப்கானிஸ்தானில் தோன்றியிருக்கலாம். 
பழையகாலத்து சிந்து நதி & சரஸ்வதி நதி நாகரிகத்தில் வேதங்கள் தோன்றியிருக்கலாம். வேதங்களில் தியானம், யோகம் இவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 1400 வருடங்களில் வியாச முனிவர் வேதங்களை நான் மறைகளாக (இப்போது நாம் அறிந்த) பிரித்தார். கி.மு. 500 ஆண்டில் எழுதப்பட்டதாக கருதப்படும் பகவத் கீதைதான் யோகாவை பற்றிய முழுமையான நூல். ஞான, பக்தி, கர்ம யோகங்களை பற்றி விரிவாக விளக்கிய நூல் கீதையாகும். கி.பி. 2 அல்லது 3 ம் ஆண்டுகளில் பதஞ்சலி முனிவர் தொகுத்து எழுதிய ''பதஞ்சலி யோக சாஸ்திரம்'' தான் தற்போதைய யோகப் பியாசங்களின் தலைமையான, அடிப்படை நூல்.

யோகாவின் அடிப்படை கோட்பாடுகள் & நம்மை நாமே அறிந்து கொள்தல், மனதை கட்டுப்படுத்துவது, இவையாகும், யோகா ஒரு ஆன்மீகமும், உடல் பயிற்சிகளும் கலந்த விஞ்ஞானரீதியான, மனதுக்கு வலிமை தரும் ஓர் வாழ்க்கை முறை.

பெண்கள் இயற்கையாக நளினமானவகள் என்றாலும், அவர்கள் வாழ்க்கையில் சுமக்க வேண்டிய சுமைகள் எளிதானவை அல்ல. குழந்தை பேறு ஒரு பெரிய பொறுப்பு. மாதவிடாய் சுழற்சிகள், பேறுகால உபாதைகள் கூட குடும்பப் பொறுப்பு, வயதானவர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய கடமை இவைகலை தாங்கும் சுமைதாங்கிகள் பெண்கள்.

இவர்கள் உடலை வளைத்து, நிமிர்த்தி செய்யப்படும் யோகாசனங்களை செய்யலாமா? மாதவிடாய் காலத்தின் போது செய்யலாமா? பாதியில் நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? இந்த மாதிரியான கவலைகளும், பயங்களும் இருப்பதால் பெண்கள் அதிக அளவில் யோகாவை பயில்வதில்லை. இந்த நிலைமை இப்போது மாறிவருகிறது.

பெண்கள் யோகாசனங்கள் கற்றுக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. பெண்களுக்கு, மேற்சொன்ன சுமைகளை சுமக்க நல்ல ஆரோக்கியம் அவசியம் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது குடும்பத்திற்கு, சந்ததிகளுக்கு நல்லது. இது நாதமுனி யோக ரகசியத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி, திறமையான குருவிடம் பயில்வது அவசியம். அதுவும் பெண்கள் ஆசிரியர் இல்லாமல் யோகா ஆரம்பிக்கவே கூடாது. பெண் யோகா ஆசிரியராக இருந்தால் நல்லது. பெண்களின் இயல்பான கூச்சம், ஆசிரியர்களாக இருந்தால், கற்றுக் கொள்வதை தடை செய்யலாம்.

யோகாசனங்கள் மெதுவாக செய்யப்படுவதால், உடலில் வலிகள், காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. பெண்களை அதிகம் தாக்கும், முதுகு வலி, சோகை, ஆர்த்தரைடீஸ், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், போன்றவற்றுக்கு, ஆசனங்கள் பயனளிக்கின்றன. மாதவிடாய் சமயத்தில் சில ஆசனங்களை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் சில பெண்களுக்கு அடி வயிற்றில் வலி, கோபம், எரிச்சல், பலவீனம் தோன்றும். இதற்கு யோகாசனங்கள் சிறந்தவை. யோகா டென்ஷனை குறைக்கிறது. இதனால் வேலைக்கு போகும் பெண்கள் அவசியம் யோகா கற்க வேண்டும். பருமனான பெண்கள் யோகவால் எடையை குறைக்க முடியும். ஆனால் நிறுத்திவிட்டால் மறுபடியும் எடை கூடலாம்.

கர்ப்பிணி பெண்கள் யோகாசனங்களை செய்யலாமா? செய்யலாம். ஆனால் முதல் மூன்று மாதங்களில் யோகாசனம் வேண்டாம். அதன் பிறகு கர்ப்பிணிகளுக்கு என்று பிரத்யேகமான ஆசனங்களை செய்யலாம். தடாசனம் பக்த கோணாசனம் வஜ்ராசனம், நமஸ்காராசனம், ஆனந்த சயனாசம், மகாமுத்திரா பாலாசனம், சவாசனம் போன்றவை நல்ல ஆசனங்கள். மகாமுத்திரா, குறிப்பாக, கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு நல்லது.

ஆசனங்கள் கர்ப்பிணிப் பெண்களின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முதுகெலும்புக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தவிர உடலின் கீழ் பாகங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஜீரணசக்தி அதிகரிக்கும். இடுப்பு தசைகள், நரம்புகள் வலிமை பெறும். இதனால் குழந்தை பிறப்பு சுலபமாகும். ஆசனங்களால் கருவுக்கும் நல்லது. பெண்கள் யோகாசனங்கள் செய்வது பற்றிய குறிப்புகள் நமது இதிகாசங்களில் உள்ளன.

பரமசிவன் பார்வதிக்கு யோகாசனம் பற்றி விவரிப்பது ''சிவ சம்ஹிதை''யில் காணலாம். யாக்ஞவல் முனிவர் தன் மனைவிக்கு தனியாக யோகா கற்றுத்தந்ததாக, இவர் எழுதிய நூலில் சொல்லுகிறார். நாதமுனி பெண்கள் எந்த ஆசனங்களை செய்யலாம், எவற்றை செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். 

பிராணாயமம் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, ஏற்றது. ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு, கழுத்து வலி (ஸ்டான்டிலோஸிஸ்) இவற்றுக்கு பிராணாயமம் சிகிச்சை அமைதிப்படுத்தி குணமாக்கும். பெண்கள் நினைவில் கொள்ள வேண்டிய பாதுகாப்புகள்:-

ஆசனங்களை சரியான எண்ணிக்கையில் செய்யுங்கள். தவறாக அதிக நேரம் அல்லது அதிக தடவை செய்யக் கூடாது. இரவு சாப்பாட்டுக்குப் பின் செய்யக் கூடாது. இலகுவான, எளிய ஆசனங்களை செய்யவும். குறிப்பாக ஆரம்ப நிலையில்.

குரு இல்லாமல் ஆசனங்களை பயிலக் கூடாது. ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களுக்கு ஆசனங்கள் மிக நல்லது.

பெண்களின் ஹார்மோன் கோளாறுகளை யோகா களைகிறது.

கர்ப்பிணி பெண்கள் மட்டுமல்ல, குழந்தை பிறந்த பின்பும் ஆசனங்களை தொடரலாம். 

வயிறு திரும்பி இயல்பான நிலையை அடையும். கர்ப்பிணி பெண்கள் சிரசாசனம், பசிமதானாசம் இவற்றை செய்யக் கூடாது. 

சூர்ய நமஸ்காரம் பெண்களும் செய்யலாம்

இனி விரிவாக பார்க்கலாம் 

1.சர்வாங்காசனம்

செய்முறை:
விபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்புதான் சர்வாங்காசனம் செய்ய முடியும். விபரீத கரணி நிலையில் நாடியில் கொண்டு இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு தாங்கி நிற்கும்படி எல் உருவத்தில் நிற்க வேண்டும். சாதாரண மூச்சு அரைகுறையாக மூடிய நிலையில் பார்க்கவும். கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும்படி நிற்கவேண்டும்.2 நிமிடத்திற்கு ஒரு முறையாக, 3 முதல் 4 முறை செய்யலாம்.
பலன்கள்:
உடலில் உள்ள அத்தனை அங்கங்களுக்கும் பலன் கிடைப்பதால் சர்வாங்காசனம் எனப் பெயரிடப்பட்டது. முதுமையைப் போக்கும். தைராய்டு கிளாண்டு நன்கு வேலை செய்யும். கண் பார்வை மங்கல், நாடி மண்டல பலக்குறைவு நீங்கும். பெண்கள் கர்ப்பப்பை சோய் வராமல் தடுக்கும் . சுக்கிலம் பலப்படும்.
கெட்ட கனவுகள் நீக்கப்பட்டு நன்றாகத் தூக்கம் வரும். தைராய்டு, பாராதைராய்டு முதலிய இடங்களில் தேங்கி நிற்கும் இரத்தத்தை நாடி நரம்புகள் மூலம் மேலே ஏற்றி மறுபடியும் கீழே இறக்கும் சக்தி இவ்வாசனத்திற்கு உண்டு. இதனால் இரத்த நாளங்களுக்கு சுத்த இரத்தம் கிடைத்து சுகவாழ்வு பெறும்.
2.தனுராசனம் 

செய்முறை:
வரிப்பில் குப்புறப் படுத்துக் கைகளால் காலை(கரண்டைக்கால்) ஒறுகப் பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை வில்போல் வளைத்து நிற்கவும். தனுர் என்றால் வில் எனப் கொருள். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 5 தடவை செய்யவும். ஆரம்ப காலத்தில் காலை விரித்துச் செய்யவும். பின் மிக மெதுவாகச் சுருக்கவும்.
பலன்கள்:
முதுகெலும்பின் வழியாக ஓடும் அத்தனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும். ஜீரண சக்தி அதிகப்படும். சோம்பல் ஒழியம். கபம் வெளிப்படும். தொந்தி கரையும். மார்பகம் விரியும். இளமைத் துடிப்பு உண்டாகும்.
அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தொந்தி, வயிற்றுக் கொழுப்பு, ஊளைச் சதை நீங்கும். மூலபவுந்திரம், நீர்ரோகம், நீரிழிவு நோய் நீங்கும், பாங்கிரியாஸ் சிறுநீர்க் கருவிகள், ஆண்களின் டெஸ்டீஸ், பெண்களின் ஓவரி. கர்ப்பப்பை நல்ல இரத்த ஓட்டம் ஏற்பட்டு பலம் பெறும். இளமைப் பொலிவு உண்டாகும், பெண்களின் மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
3.மயூராசனம் 
செய்முறை:
மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப் பெயர், முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்ததுத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புகளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு மறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம்.
பலன்கள்:
வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிநுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.
4.சக்கராசனம் 

செய்முறை:
முதல் முறை: பிரையாசனம் கொஞ்ச நாள் செய்த பிறகு இவ்வாசனத்தைச் செய்ய முயிற்சிக்க வேண்டும். நின்ற நிலையில் கைகளைத் தொட வேண்டும். பின் மூச்சை உள்ளே இழுத்து கைகளைத் தரையில் அழுத்தி எழுந்திருக்க வேண்டும்.
இரண்டாவது முறை: தரையில் படுத்துக்கொண்டு கால்களை இழுத்து கைகளைப் பின்னால் ஊன்றி முதுகையும் உடலையும் உயர்த்தி படத்தில் பாட்டியபடி நிற்க வேண்டும். ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். ஆரம்பத்தில் 2வது முறையே பழகலாம்.
பலன்கள்:
ஆசனங்களில் மிக முக்கியமானது. முதுகுத்தண்டின் வழியாகச் செல்லும் அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்படும், புத்துணர்வு பலம் பெறும். சோம்பல் ஒழிந்து சுறுசுறுப்பு உண்டாகும். நுரையீரல், சுவாச உறுப்புகள் பலம்பெறும், வயது முதிர்ந்தாலும் இளமை மேலிடும்.
5.வச்சிராசனம் 

செய்முறை: கால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமர்த்தி கம்பீரமாக உட்காரவும் நன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும் 2 முதல் 4 நிமிடம் ஆசன் நிலையில் இருக்கலாம்.
பலன்கள்: வச்சிரம் போன்று திட மனது ஏற்படும். அலையும் மனது கட்டுப்படும். தியானத்துக்குரிய ஆசனம்.
6.யோகமுத்ரா 

செய்முறை:
பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். நாடி மெதுவாக வெளியே விட்டவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியாவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தை பயிலலாம். ஒரு முறைக்கு 20 வினாடியாக 5 முறை செய்யலாம். தரையை நெற்றியால் தொட முடியாதவர்கள் முடிந்த அளவு முயிற்சித்துவிட்டு, விட்டுவிடவும், கொஞ்ச நாளில் முழு நிலை அடையலாம்.
பலன்கள்:
முதுகின் தசை எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் நீங்கும். தாது இழுப்பு, பலக்குறைவு நீங்கும், நீரழிவு நோய் நீங்கும், தொந்தி கறையும். முதுகெலும்பு நேராகும். அஜீரணம், மலச்சிக்கல் ஒழியம். நுரையீரல் நோய்க் கிருமிகள் நாசமடையும்.
பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும். வயற்றில் ஆபரேஷன் செய்திருந்தால் 6 மாதம் இவ்வாசனம் செய்யக் கூடாது.
7.உட்கட்டாசனம் 
செய்முறை: நேராக நின்று கொண்டு காலை ஒரு அடி அகலமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி கைகளை நேராக நீட்ட வேண்டும். உடல் பூராவும் இளக்கமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி பாதி உட்கார்ந்த நிலையில் முடிந்த நேரம் நிற்க வேண்டும். கால் மூட்டில் இலேசாக வலி வரும். அப்போது உட்கார்ந்து விட வேண்டும். பலன்கள்: ஆசனம் செய்வதற்கு முன்னால் உட்கட்டாசனத்தை முதலில் செய்வதால் உடலில் உள்ள நாடி நரம்புகள் இளக்கம் கொடுக்கும். அடிவயிறு, தொடைப்பகுதி, பிருஷ்ட பாகம் இளக்கம் கொடுக்கும். பிற ஆசனங்கள் செய்ய உடல் இலகுவாக அமையும். கால் மூட்டு வீக்கம், மூட்டில் நீர் தேங்கல், வலி, உளைச்சல், வாதம் நீங்கும். 5 மைல் வாக்கிங் செய்வதால் ஏற்படும் பலன் கிடைக்கும். ஒரு முறை செய்தால் போதுமானது.

8.பத்மாசனம் 

செய்முறை: இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மீதும் மாற்றிப் போடவும். கால்மூட்டுகள் இரண்டும் தரைடைத் தொடவேண்டும். குதிகால்கள் இரண்டும் வயிற்றின் அடிப்பாகத்தை தொடும்படியாக அமைக்கவும். முதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின் முத்திரையுடன் படத்தில் காட்டியபடி வைத்துக் கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும். சில பேர்களுக்கு இவ்வாசனம் இலகுவில் வராது. ஒவ்வொரு காலாக தொடையில் போட்டுப் பழகவும். நாளடைவில் வந்துவிடும். ஆரம்பக் கட்டத்தில் சில வினாடிகள் இருந்தால் போதுமானது. வலி இருந்தால் உடன் ஆசனத்தைக் கலைத்துவிட வேண்டும். நாள் செல்ல வலி வராது. வெகு நேரம் இருக்கலாம். 1 முதல் 3 நிமிடம் இருக்கலாம். மேஜை சாப்பாடு உள்ளவர்களுக்கு இவ்வாசனம் இலகுவில் வராது. ஒரு வேளையாவது தரையில் சாதாரணமாக உட்கார்ந்து சாப்பிட்டால் இவ்வாசனம் இலகுவில் வந்துவிடும். பலன்கள்: அடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். நன்றாக பசி எடுக்கும். வாதநோய் தீரும். வழிபாடு, ஜபம், தவம், மன ஒருமைப்பாடு இவற்றிக்குச் சிறந்தது. நாடி சுத்தி, பிராணாயாமம் இந்நிலையில் இருந்து கொண்டு செய்தல் நலம்.
யோகாசனம் பயிற்சி காணொளிகள் 











குறிப்பு - அனைத்து விடயங்களும் இணையதளம் மற்றும் பத்திரிக்கை  மூலமாக பெறப்பட்டது.