Sunday, March 20, 2011

ஆணாக மாறும் பெண் மீன்


பெண்ணிலிருந்து ஆண்
.
மனிதர்களில் மட்டுமல்ல, சில மீன்களிலும் ஆண் தன்மையும், பெண் தன்மையும் சேர்ந்து இருக்கின்றன. இத னால் ஆணாக விரும்பினால் ஆணாகவும், பெண்ணாக விரும்பினால் பெண்ணாகவும் மாறும் வாய்ப்பு இயற்கையாகவே அவற்றுக்கு உள்ளது.
எல்லா உயிரினங்களிலும் பாலினத்தை (ஆண்/பெண்) நிர்ணயிப்பது குரோமோசோம்கள் தான். ஒரு தொகுதி மீன்களில் 50 ஆண் மீன்கள் இருந்தால், பெண் மீன்களும் 50 இருக்கும். இருந்தாலும், சில நேரங்களில் ஒருபால் குறைந்து, மற்றொரு பால் அதிகமாகி விடலாம். இதுபோன்ற சமயங்களில் நிலைமையைச் சமாளிக்க `பால் மாற்றம்' உதவுகிறது.
`செரானிடே' என்னும் குடும்பத்தைச் சேர்ந்த கொடுவா மற்றும் கலவா மீன்களிலும், `லேப்ரிடே' குடும்பத்திலும், `ஸ்பாரிடே' குடும்பத்திலும் பால் மாற்றம் நடைபெறுகிறது.
ஆண் மற்றும் பெண் தன்மைகளோடு 4 - 5 ஆண்டுகளாக இருக்கும் கலவா மீன், ஏறக்குறைய 40 செ.மீ. நீளம் வளர்ந்ததும், முதலில் பெண்ணாக இனமுதிர்ச்சி அடைகிறது. இந்தப் பெண்மீன், தன்னுடைய 14-17ஆம் ஆண்டு காலங்களில் ஆண் மீனாக மாறுகிறது. கலவா மீன்களின் எண்ணிக்கை குறைந்து விட்டால், அதிக வயதான பெண்மீன்கள், ஆணாக மாறாமல் பெண்ணாகவே இருந்து, தன்னுடைய இனத்தைப் பெருக்க துணைசெய்கின்றன. இதேபோல `கொடுவா' மீன்களில், குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பின்னர் ஆண் மீன்கள் பெண்களாக மாறுகின்றன.