ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியானது உலக நாடுகள் அனைத்தினதும் அணு
ஆயுதங்களை விட 1000 மடங்கு சக்தியினை வெளியிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவ்வதிர்ச்சியானது 6.7 டிரில்லியன் தொன்கள் டி.என்.டி வெடிபொருட்களின் சக்திக்கு சமனானதெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
டி.என்.டி எனப்படுவது Trinitrotoluene என்பதன் சுருக்கமாகும். இது ஒருவகை
வெடிக்கக்கூடிய இரசாயன பொருளாகும்.
பொதுவாக கடல் அடியில் ஏற்படும் புவி
அதிர்வானது சாதாரண நில அதிர்வினை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.
உலகில் ஏற்படும் நில நடுக்கங்களில் 20 வீதமானவை ஜப்பானிலேயே
இடம்பெறுகின்றன.
இவற்றில் அதிகமானவை 6 ரிச்டர்களுக்கும் அதிகமாகும்.
புவியியலாளர்களின் கருத்தின்படி பூமியின் பல கண்டங்களினதும் மற்றும்
சமுத்திரங்களினதும் தட்டுக்கள் உதாரணமாக பசுபிக் தட்டு, பிலிப்பைன் தட்டு, யூரோ
ஏசிய தட்டு, வட அமெரிக்க தட்டு ஆகியன ஜப்பானிய பகுதியிலேயே சந்திக்கின்றன.
இதன் காரணமாகவே அங்கு பல எரிமலைகள் மற்றும் வெந்நீர் ஊற்றுக்கள் எனபன
அமைந்துள்ளன.
மேலும் ஜப்பான் பசிபிக் எரிமலை வலையம் எனப்படும் உலகின்
அதிகமான நிலநடுக்கங்கள் எரிமலை கொந்தளிப்புக்கள் இடம்பெறும் பகுதியிலேயே
அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதொரு காரணியாகும்