Friday, March 11, 2011

கோமா நிலை நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிய புதிய முறை அறிமுகம்

கோமா நிலையை அறிதல்
கோமா நிலை நோயாளியின் மூளை பிம்ப தொழில்நுட்பங்களை அப்ரிடின் பல்கலைகழக விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர்.
ஸ்காட்லாந்தில் இது போன்று நடைபெறும் முதல் ஆராய்ச்சி இதுவாகத் தான் இருக்கும்
என நியூஅப்ரிடின் தெரிவித்தார். இந்த புதிய ஆய்வின் மூலம் கோமா நிலை நோயாளிகள்
விழிப்புணர்வு குறித்து கூடுதல் தகவல்களை பெற முடியும்.


இந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளுக்கு ஸ்காட்லாந்தின் வட கிழக்கு பகுதியில் உள்ள
நோயாளிகள் உதவி செய்கிறார்கள். இந்த புதிய தொழில்நுட்ப ஆய்வு பேராசிரியர்
கிறிஸ்டியன் ஸ்வார்ஸ் பவுர் தலைமையில் நடைபெறுகிறது.


கோமா நிலை நோயாளிகள் குறித்த தகவல்களை அறிய எப்.எம்.ஆர்.ஐ என்ற ஸ்கேனிங்
பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பங்கள் கோமா நோயாளிகளுக்கு அளிக்கப்படும்
சிகிச்சையில் வழிகாட்டுதலாகவும், உறவினர்களுக்கு உரிய தகவல் தரக்கூடியதாகவும்
இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


மூளைக்காயம் காரணமாக அவதிப்படும் நோயாளிகளுக்கு உணர்வற்ற கோமா நிலை ஏற்படும்
அபாயமும் உள்ளது. இது போன்ற நவீன மருத்துவ கவனிப்பு மூலம் மூளைக்காயம் அடைந்த
நோயாளிகள் இயல்பு நிலை அடையும் சூழல் உருவாகியுள்ளது.


கோமா நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து நுணுக்கமான விவரங்களை
பெறுவதற்காக இந்த குழு ஆய்வு செய்கிறது.