Saturday, March 5, 2011

11 கோடி ஆண்டு பழைய யானை சைஸ் டைனோசர்

டைநோசெர்
11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களிலேயே தாதா போன்று வலிமையாக ஒரு டைனோசர் வகை இருந்தது தொல்பொருள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உட்டா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் 1994 ம் ஆண்டு சுரங்கம் தோண்டும்போது சில எலும்புகள், படிமங்கள் கிடைத்தன. அதுபற்றி தொல்பொருள் ஆய்வுத் துறையினர், விலங்கியல் நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி நடத்தினர்.

இரண்டு விலங்குகளின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. இது டைனோசர்களிலேயே மிகவும் வலிமையுடன் காணப்பட்ட பிரான்டோமெரஸ் வகையை சேர்ந்தது. கிரேக்க மொழியில் பிரான்டோமெரஸ் என்பது ‘இடி போன்ற தொடை’ என்பதை குறிக்கும். டைனோசர் ஆய்வு நிபுணர் ஜான் ஜேக் மெகின்டோஷை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரையும் சேர்த்து ‘பிரான்டோமெரஸ் மெகின்டோஷ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இவை 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. ஒன்று தாயும் இன்னொன்று அதன் குட்டியுமாக இருக்கலாம். தாய் பிரான்டோமெரஸ் 6 ஆயிரம் கிலோ எடை (பெரிய யானை சைஸ்), 42 அடி நீளமும் குட்டி 200 கிலோவும் 14 அடி நீளமும் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. இவற்றின் கால்களும் தொடையும் பலம் வாய்ந்ததாக இருந்துள்ளன.

இரைகளை பிடித்து உண்ணும் வகையில் இவை பயன்பட்டிருக்க வேண்டும். டைனோசர் வகையிலேயே வலுவானதாக, மற்ற விலங்கினங்களை மிரட்டும் வகையில் தாதா, ரவுடி போல இவை இருந்திருக்க வேண்டும். இந்த இனம் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது.