Sunday, December 1, 2013

தொப்பையை குறைக்கும் மூலிகை வைதிதியம்

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும்.நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்துஇ பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

Saturday, November 30, 2013

வெந்தயத்தின் பயன்பெறுவோம்.

அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவக் காத்திருக்கிற அற்புத மருந்து  வெந்தயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். சாம்பாரோ, வத்தக்குழம்போ, புளிக்குழம்போ... எதுவானாலும்,  தாளிக்கும்போது சிறிது வெந்தயம் தூக்கலாகச் சேர்த்துப் பாருங்கள். முழுதாக வெந்தயம் சாப்பிடப் பிடிக்காதவர்கள், கொதித்து இறக்கும் முன்  வெந்தயப் பொடியைத் தூவிப் பாருங்கள்... உங்கள் சமையலறை வாசம், தெருக்கோடி வரை வீசும். மணத்தில் மட்டுமின்றி, குணத்திலும் மிகச்  சிறந்தது வெந்தயம்!மேலதிகமாக அறிந்துகொள்ள - http://ta.wikipedia.org/s/3rp 

Thursday, November 28, 2013

அரிய வகை டைனோசர் எலும்புக்கூடு ஏலத்தில் விற்பனை.

(BBC/TAMIL) பூமியில்150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உலவிய டைனோசர் ஒன்றின் எலும்புக்கூடு ஆறு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் கூடுதலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.இங்கிலாந்திலுள்ள பில்லிங்ஸ்ஹர்ஸ்ட் நகரில் இன்று மதியம் இந்த ஏலம் நடைபெற்றது.
கிட்டத்தட்ட முழுமையாக இருக்கும் இந்த டிப்லோடோகஸ் வகை டைனோசரின் புதைபடிவ எலும்புக்கூட்டில் அதன் நீண்ட கழுத்தும், சாட்டைப் போன்ற வாலும் காணப்படுகின்றன.
ஏலம் போகவுள்ள இந்த டைனோசர் எலும்புக்கூடு தலை முதல் வால்வரை 17 மீட்டர்கள் நீளம் கொண்டது.

Wednesday, November 27, 2013

மனிதனைப் போன்ற இயந்திர மனிதனை உருவாக்கி உள்ளனர்.(Human like robot)

உலகில் ரோபோட் என்றழைக்கப்படும் முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை – இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர். பெயர் ஞடஈ-2.மனிதனுக்கு உள்ள அத்தனை உறுப்புக்களையும் கொண்ட ரோபோவுக்கு “லெனின் கிரேடு’ என்று பெயர். இது ரோபோ இயல் மற்றும் பொறியியல் சைபர்னடிக்ஸ் கழகத்தில் உள்ளது.அயர்லாந்து அருகே அட்லாண்டிக் கடலில் ஏர்இந்தியா ஜெட் விமானம் வெடித்துச் சிதறியபோது கடலில் மூழ்கிய பொருள்களைக் கண்டெடுத்த ரோபோவின் பெயர் “ஸ்கார்ப்’.2050,ம் ஆண்டுக்குள் சிவப்பு விளக்கு ஏரியாக்களில் பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் இடம்பெறும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Tuesday, April 23, 2013

உலக பூமி தினம்

Earth Day
அனைத்து உயிரினங்களும் வாழத் தகுதியான ஒரே கிரகம் நாம் வாழும் பூமி மட்டுமே.
செவ்வாய், சந்திரன் போன்ற கிரகங்களில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் உறுதிசெய்யப்படவில்லை என்பதே உண்மை.
இதற்கிடையே பூமி, இன்று பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறது. வருங்கால சந்ததியினரும் வாழ வேண்டுமெனில் பூமியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

Saturday, January 5, 2013

குண்டான உடலை குறைப்பதற்கான சிறந்த வழிமுறைகள்.

www.saakaram.co.nr

மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஜிம்மில் வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கருவிகளில் சிலவற்றைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. சில கருவிகளைக் குறைசொல்ல முடியாதுதான். ஆனால், வேறு சில கருவிகள் நம் கைகளையும் கால்களையும் கவ்வி அசைப்பதைப் பார்க்கும்போதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது.

வன்தட்டு(HARD DISK) படுதடைவதர்கான காரணங்கள்

 பொதுவகவே ஒரு சில நேரங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்யும் அனைத்து தகவலும் வன்தட்டில் பதிவு செய்யபடும் என்பதால் வன்தட்டு என்பது மிகவும் முக்கியமான 
பகுதியாகும். வன்தட்டு சரியான முறையில் இயங்க மென்பொருள்களை பயன்படுத்தி ஃபைலை ஒருங்கு இணைப்போம் (defragmentation,disk cleanup).

கணணி பராமரிப்புக்கு தேவையான மென்பொருட்கள்.

www.saakaram.co.nr
 கம்ப்யூட்டரில் பணியாற்றும் சூழ்நிலை இன்று எங்கும் பரவி வருகிறது. எத்தகைய அலுவலகம் என்றாலும், அங்கு கம்ப்யூட்டர் மூலமே நிர்வாகம் இயக்கப் படுகிறது. அதே போல தனி நபர் வாழ்க்கையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது.
மாணவர்கள் கல்வி அறிவுத் தேடலிலும் கம்ப்யூட்டர் முக்கிய இடம் கொண்டுள்ளது.