Saturday, July 30, 2011

சனி (கோள்) & சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்

சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்.வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும்.
சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இது பாறை மற்றும் பனிக்கட்டியாலான சிறிய உள்ளகமும் (core) அதைச் சுற்றி தடிமனான உலோக (மாழை) ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்.

Friday, July 29, 2011

நீரழிவு நோயினால் ஏற்படும் குறைபாடுகள்.

 நீரழிவு நோயினால் ஏற்படும் கண் பார்வைக் குறைபாடுகள்
ஒளிக் கதிர்கள் விழியின் முன்பகுதியான வெண்படலத்தின் ஊடாக ஆடியை அடைந்து அங்கிருந்து விழித்திரையில் குவிகின்றன. விழி வெண்படலம் கோர்னியா (Cornea) என்றும் விழி ஆடி லென்ஸ் (Lens) என்றும்அழைக்கப்படுகின்றன.

Thursday, July 28, 2011

உலகின் 2 ஆவது உயர்ந்த கட்டிடமாக அமையவுள்ள அரிசோனா சூரிய சக்திக் கோபுரம்

 உலகின் 2 ஆவது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரமொன்று அரிசோனா பாலைவனத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கி (chimney) உடன் கூடியதாக அமையவுள்ளது.

போலி உற்பத்திகளின் தாயகம் சீனா: 'அப்பிள் ஸ்டோர்ஸ்' ஐயும் விட்டுவைக்கவில்லை (பட இணைப்பு)

போலியான உற்பத்திகளை செய்வதில் சீனாவிற்கு நிகர் சீனாவே தான்.

ஆரம்ப காலத்தில் மற்றைய நிறுவனங்களின் இலத்திரனியல் பொருட்களை போலியாக தயாரித்து சந்தைப்படுத்தத் தொடங்கியது சீனா. மலிவான விலை காரணமாக அவை சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

Wednesday, July 27, 2011

ஆபத்தை தெரியப்படுத்தும் விஷேச பந்து(வீடியோ இணைப்பு)

ஆபத்தான இடங்களில் மாட்டிக்கொண்டு இருப்பவர்களை எப்படி காப்பாற்றுவது என கையை பசைந்து கொண்டிருக்க வேண்டாம். புது வளைய பந்து கருவி வந்துவிட்டது.

Tuesday, July 26, 2011

தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிப்பு ஏற்படும்.

தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிக்கும் என ஸ்டான் போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பகலில் நடந்த நிகழ்வுகளை மதிப்பீடு செய்ய இரவு நேர தூக்கத்தை மூளை பயன்படுத்திக் கொள்கிறது என பிரிட்டன் தூக்க மருத்துவ நிபுணர் நீல் ஸ்டான்லி கூறினார்.

தெரிந்த வெந்தயம் தெரியாத இரகசியம்.

தமிழ் மக்களின் பல்வேறு உணவுகளிலும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள்.

Monday, July 25, 2011

கூகுள் + 3 வாரங்களில் 20 மில்லியன் பாவனையாளர்கள்: பேஸ்புக்கை முந்துமா?

கூகுளின் சமூகவலையமைப்பான கூகுள் + அறிமுகப்படுத்தப்பட்டு 3 வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 20 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதாக இணைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Wednesday, July 20, 2011

உடலை எப்பொழுதுமே குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம் - ஐப்பான் நிறுவனம்

அலுவலகம் மற்றும் வீட்டில் ஏர்கண்டிசனில் இருந்தே பழக்கப்பட்டவர்கள் வெளியே வெயிலில் செல்லும் போது மிகவும் சிரமப்படுவர்.
வெயிலின் தாக்கம் அவர்களை கடுமையாக பாதிக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கும், வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன்!

மருத்துவ உலகில் சாதனைகள் தொடர்கதையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சாதனை படைக்கப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன் மேற்கொள்வது குறித்த ஆய்வில் வெற்றி கிட்டியுள்ளது. நோயாளிகளை இயல்பு நிலையில் வைத்து, அவர்களின் சிந்தனைகளை சிதறடித்து கவனத்தை மாற்றி ஆபரேஷன் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Tuesday, July 19, 2011

விண்டோஸ் 8 அடுத்த ஆண்டில் அறிமுகம்.

கணினிகளுக்கான நவீன விண்டோஸ்_8 என்ற மென்பொருளை மைக்ரோசொப்ற் நிறுவனம் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Monday, July 18, 2011

பக்கவாத நோயைத் தடுக்கும் வாழைப்பழம்.

மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. தினமும்3வாழைப்பழங்களை சாப்பிட்டால், பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலையில் ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று என்றுதினம் 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால், போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது.

Friday, July 15, 2011

பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு!

பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால், உடல் பருமன், இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் குறித்து பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம் (காணொளி இணைப்பு)

                                            உலகமெங்கும் 3D காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் LG தனது பங்கிற்க்கு உலகின் முதலாவது 3D Smartphone ஆன LG Optimus 3D யினை அறிமுகப்படுத்தி உள்ளது.

Thursday, July 14, 2011

பறவை உருவத்தில் உளவு பார்க்கும் கருவி!

விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.போர் மற்றும் உளவு பார்த்தலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன.

Tuesday, July 12, 2011

' நேக்ட் மோல்' எலி மூலம் புற்று நோய் மருத்துவத்தில் புரட்சி.

' நேக்ட் மோல்' எனப்படும் எலி வகையின் மரபணுக்களைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் புற்றுநோய்க்கெதிரான மருந்துக் கண்டுபிடிப்பில் புதிய புரட்சியை மேற்கொள்ள முடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே முதன்முறையாக இவ்வகை எலியின் முழு மரபணு வரைவினை வெளியிட்டுள்ளனர்.


Sunday, July 10, 2011

புளியங்கொட்டையில் இருந்து புதிய மருந்து

மூளை, முதுகெலும்பு ஆகியவற்றில் உள்ள நரம்புகள் சேதம் அடைந்து இருந்தால் அவற்றை குணப்படுத்தி மீண்டும் வளர உதவும் மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தமருந்து புளியங்கொட்டையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

Saturday, July 9, 2011

பருக்களின் வடுக்களை போக்க முடியுமா?

பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வராமல் தடுக்கவும், பரு வடுவைப் போக்கவும் வழி உள்ளதா?

இந்த கேள்விக்கு நமது அழகுக் கலை நிபுணர் கூறும் யோசனை:

அட்லான்டிஸ் இன்று கடைசி பயணம்

சர்வதேச விண்வெளிமையத்துக்கு அட்லான்டிஸ் விண்கலம் இன்று தனது கடைசி பயணத்தை மேற்கொள்கிறது. இத்துடன் நாசாவின் கைவசம் உள்ள விண்கலங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளன. சர்வதேச விண்வெளிமையத்துக்கு நாசா விண்கலங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வீரர்களையும், பொருட்களையும் எடுத்துச் சென்று வந்தது. அனைத்து விண்கலங்களும் கடந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது.

Sunday, July 3, 2011

சீறி வந்தது விண் துகள் குறுகிய இடைவெளியில் தப்பியது சர்வதேச விண்வெளி மையம்

விண்வெளியில் மணிக்கு 29 ஆயிரம் மைல் வேகத்தில் வந்த விண்துகள், சர்வதேச விண்வெளி மையத்துக்கு மிக அருகே கடந்து சென்றது. இதில் அதிர்ஷ்டவசமாக விண்வெளி மையத்துக்கும் அதில் தங்கியிருந்த 6 வீரர்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
விண்வெளி ஆய்வுக்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விண்ணில் சர்வதேச விண்வெளி மையத்தை உருவாக்கி வந்தது. கடந்த 1998ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி சமீபத்தில்தான் முடிவடைந்தது. 2028ம் ஆண்டு வரை இது செயல்பாட்டில் இருக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

Friday, July 1, 2011

மார்பக புற்றுநோயை தடுக்கிறது சூரியஒளி!

டொரன்டோ: தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது பட்டால், மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சூரிய ஒளி நம்மீது படும்போது, வைட்டமின் டி உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை, ஒருவித ஹார்மோனோக மாற்றும் திறன் பெற்றவை.

சிறுகோள்கள் பூமியில் மோதுண்டால் அழிவிற்கு உண்டாகும் நாடுகளின் பட்டியல் வெளியீடு

விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.