Saturday, March 12, 2011

எதிர்வரும் 19 பேரழிவு ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் (காணொளி இணைப்பு)

பூமியை நோக்கி சந்திரன்
.பாரிய இயற்கை அழிவு எதிர்வரும் 19ஆம் திகதி ஏற்படவுள்ளதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர். சந்திரன் பூமிக்கு மிக மிக அருகாமையில் வரும் 'சூப்பர் மூன்"
நிகழ்வினாலேயே ஜப்பானில் நிலநடுக்கம் பாரிய சுனாமி போன்ற அனர்த்தங்கள் இடம்
பெற்றிருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளனர்.


கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகாமையில் அதாவது 2 இலட்சத்து
21 ஆயிரத்தி 556 மைல் தூரத்தில் நெருங்கி வருகிறது.

இதை அடுத்து எதிர்வரும்
19 ஆம் திகதி சந்திரன் பூமிக்கு அருகாமையில் வருவதால் சுனாமி, எரிமலை வெடிப்பு
உட்பட பல்வேறு பேரழிவுகளை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற வாய்ப்பு
இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கு முன் 'சூப்பர் மூன்"
நிகழ்வு 1955 ஆண்டு, 1974ஆண்டு, 1992 ஆண்டுகளில் நிகழ்ந்தன. இதன் போது குறித்த
நாட்களில் மோசமான காலநிலை நிலவியதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.