Friday, March 18, 2011

உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கியுள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள் தகவல்

உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கியுள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.

இதற்கு ' சோஹல்' பெயரிடப்பட்டுள்ளது. ஆளில்லாமல்
இயங்கக்கூடிய இப்பறக்கும் தட்டானது உளவு பார்த்தல் போன்ற பல தேவைகளுக்காக
உபயோகிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இப் பறக்கும் தட்டானது உருவத்தில் சிறியதெனவும், குறைந்த சத்தத்தையே
எழுப்பக்கூடியது என்பதுடன், இலகுவாக பயணிக்கக்கூடியது போன்றவை இதன் நன்மைகள் எனவும்
ஈரானிய செய்திகள் குறிப்பிடுகின்றது.

மேற்படி தகவலானது இதுவரை
உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பல
உலக நாடுகள் அணுச் செறிவாக்கல் காரணமாக ஈரான் மீது பொருளாதாரத்தடைகளை விதித்துள்ளன.


எனினும் ஈரான் தனது தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியாக முன்னேறி வருவதாக
அவதானிகள் தெரிவிக்கின்றனர்.