Tuesday, May 31, 2011

அழிவின் விளிம்பில் நைட்டிங்கேல்

பறவைகளில் மிகவும் அரிதானது நைட்டிங்கேல். வசீகர குரல் கொண்டது. இதன் அழகையும் குரலையும் வர்ணித்து இங்கிலாந்து கவிஞர் ஜான் கீட்ஸ் எழுதிய கவிதை உலகப் புகழ் பெற்றது. இந்த அரிய பறவையினம் அழியும் தருவாயில் உள்ளதாகவும் இன்னும் 30 ஆண்டுகளில் இது இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதாகவும் பறவையின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் உறுதியாகி உள்ளது.

ஏன் உணவில் கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்?

உங்களது உணவில் கட்டாயம் கீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிலிருந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை விடாது வலியுறுத்தி வருகிறார்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது புத்தகத்திலோ கீரையின் மகத்துவத்தை பற்றி படிக்கையில் மட்டும் உணர்ச்சிவசப்பட்டு, கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்பவர்களில், அதனை நடைமுறைப்படுத்துவர்கள் மிகச் சிலரே.

Sunday, May 29, 2011

மின்சார மனிதன் - வீடியோக்கள் இணைப்பு

இந்த உலகத்திலேயே உயிருள்ள பற்றறியாக செயல்படக் கூடிய ஒரே ஒரு நபர் சேர்வியா நாட்டைச் சேர்ந்த சிலவிசா பச்கிக். இவரது உடலுக்கு மின்சாரத்தை தாங்குகின்ற அபூர்வ சக்தி உள்ளது.

எகிப்தில் தொலைந்த 17 பிரமிட்டுக்கள் கண்டுபிடிப்பு

 எகிப்தில் நிலத்திற்கு அடியில் புதைந்துள்ள 17 பிரமிட்டுக்கள் 1000 கல்லறைகள் மற்றும் 3000 பண்டைய குடியேற்றங்கள் ஆகியன செய்மதி தொழிநுட்பத்தினால் கண்டுடறியப்பட்டுள்ளன.

Saturday, May 28, 2011

12 ஆண்டுகளாக நடந்த சர்வதேச விண்வெளி மைய கட்டுமான பணி முடிந்தது!

 கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த சர்வதே விண்வெளி மையத்தின் கட்டுமான பணி நேற்று இறுதி கட்டத்தை எட்டியது. விண்வெளி ஆய்வுக்காக பூமிக்கு மேலே 355 கி.மீ. தொலைவில் சர்வதே விண்வெளி மையம் கட்டும் முயற்சியில் 16 நாடுகள் ஈடுபட்டன. அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்கலங்களில் மாறி மாறி, பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

Thursday, May 26, 2011

விண்மீன்களின் பரிணாம வளர்ச்சி.

சிவப்பு ராட்சதன்கள் என்பவை உண்மையில் ஒரு விண்மீனின் இறுதி கட்ட நிலை ஆகும். மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் எப்படி பிறப்பு, வாழக்கை மற்றும் இறப்பு என்று ஒரு பரிணாமம் உள்ளதோ, அதே போல விண்மீன்களுக்கும் கூட ஒரு பரிணாம வளர்ச்சி உள்ளது. இதை 'விண்மீனின் பரிணாம வளர்ச்சி’ (Stellar Evolution) என்கின்றனர். இந்த பரிணாம வளர்ச்சியின் இறுதி கட்டங்களில் தான் ஒரு விண்மீன் சிவப்பு ராட்சதனாக மாறுகிறது.

Tuesday, May 24, 2011

பூமியின் உட்பகுதியில் நிகழும் செயற்பாடுகள் - ஆராய்ச்சி தகவல்

பூமிப் பந்தின் உள்பகுதி உருகத்தொடங்கி இருப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் ஓட்டை ஆகியவற்றால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பூமியின் உள்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செபாஸ்டியன் ரோஸ் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.

Monday, May 23, 2011

பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி

மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம்.
மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை.

Sunday, May 22, 2011

சூரியனின் பன்முகத் பார்வைகள் - காணொளி இணைப்பு.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செயற்கை கோள் உதவியுடன் சூரியனின் பல்வேறு விதமான காணொளிகளை வெளியிட்டுள்ளது.

ஸ்டெம் செல் சேமிப்பு!

என்னம்மா, கல்யாணமும் பண்ணிட்டு ஒன் புள்ளை ஃபாரினுக்கு போய் செட்டிலாயிட்டான். ஒரு வருஷமாச்சு, ஒன் மருமக வயற்றுலே ஒரு புழுபூச்சி கூட இன்னும் வளரலையா? புள்ள கிட்ட என்ன ஏதுனு கேட்டியா?’‘அதெல்லாம் கேட்டாச்சு. அதுக்கு அவன் சொல்றான், ‘மம்மி, ஒன் காலத்தோட இந்த, வயிற்றுல புழுபூச்சி டயலாக்கு முடிஞ்சு போச்சு. இப்ப

Friday, May 20, 2011

கொழுப்பால் கொலஸ்ரோலா? தக்காளிச் சாறு அருந்துங்கள்! விஞ்ஞானிகள் தகவல்



சமைக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளிச் சாறில் காணப்படும் இரசாயனம் இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்

இயற்கையின் படைப்புகள் அனைத்தும் வியக்கத் தக்கவை.  உயிரினங்களில் ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை உள்ள அனைத்து படைப்புகளிலும் பல அற்புதங்கள் புதைந்துள்ளன. இதில் மனித உடலானது ஒரு மாபெரும் படைப்பாகும்.

மொபைலில் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ தொழிநுட்பங்களுக்கிடையிலான வேறுபாடுகள்!

GSM and CDMA– Global System for Mobile Communication and Code Division Multiple Access இவை இரண்டும் மொபைல் போன் தொழில் நுட்பத்தில் இரண்டு வகை.

விண்வெளியில் 10 மிதக்கும் கோள்கள் கண்டுபிடிப்பு!

விண்வெளியில் உள்ள கோள்கள் பொதுவாக ஏதாவது ஒரு சூரியனை சுற்றி வரும். ஆனால் அப்படி சூரியனை சுற்றாமல் தனியே மிதக்கும் 10 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியாளர் அயன்பாண்ட் தலைமையில் சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அயன்பாண்ட் கூறியதாவது:

தேன் ஒரு சிறந்த மருந்தாகும் - இயற்கையின் இனிமை

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.

சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம்-SOLAR ENERGY(வீடியோ இணைப்பு)

சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 அன்று ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விமானம் தனது பயணத்தை சுவிஸ்லாந்தின் PAYERNE விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் LUXEMBOURG ஆகிய நாடுகளுக்கு மேலாக 12400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் BRUSSELS விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Tuesday, May 17, 2011

வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சனை நீளும்.

பிரபஞ்சம் - ஓர் சுருக்க விளக்கம்.

ஆரம்ப காலங்களில் மனிதன் தான் வாழும் இடத்தையும் தனக்கு மேல் உயரே நீண்டு சென்ற ஆகாயத்தையும் மட்டுமே பிரபஞ்சம் என்று கருதி வந்தான். ஆகாயம் என்பது கூட பெரிய மலைகளுக்குச் சற்று மேலே எட்டி விடும் தூரத்தில் தான் அமைந்திருப்பதாக அவனுக்குப் பட்டது.

Monday, May 16, 2011

மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு

சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களில் ஒன்றான கிராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.. இதில் யூனினால், பைனின், வேனிலின், போன்ற ஆவியாகும் எண்ணெய்ப் பொருட்களும், பிசின் மற்றும் டேனின்கள் உள்ளன.

Sunday, May 15, 2011

பத்து வழிகளில் இந்த உலகம் முடிவுக்கு வருகிறது.(காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)


இந்த உலகம் போற போக்கைப் பார்த்தால் மனிதனால் மட்டும் தான் உலக அழிவு நிகழும் என்பதற்கில்லை , பல்வேறு வெளிக்காரனங்க்களும் இருக்கத்தான் செய்கின்றன.இந்த காணோளிகளைப் பார்க்கும்போது பல விசயங்களப் அறிந்துகொள்லாம்.

Thursday, May 12, 2011

ஏரியன் ஸ்கவுட் - உளவு பார்க்கும் ரகசிய ரோபோ கமெரா.

வானத்தில் பறந்த படியே ஆயிரம் அடி தொலைவில் இருந்து தெள்ளத் தெளிவாக படம் எடுக்கக் கூடிய ரோபோ கமெராவை கனடாவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Wednesday, May 11, 2011

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்கைப் நிறுவனத்தை கொள்வனவு செய்யத் தீர்மானம்

உலகின் முன்னணி மென்பொருள் உற்பத்தி நிறுவனமான மைக்ரோப்ட் நிறுவனம், உலகின் முதனிலை இணைய தொலைபேசி நிறுவனங்களில் ஒன்றான ஸ்கைப் நிறுவனத்தை கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.

இன்றுடன் ரோம் நகரம் முற்றாக அழியுமா? ரெபேல் பெண்டாண்டியின் எதிர்வு கூறல் சரியாகுமா?

இத்தாலியின் தலைநகரமான ரோமில் இன்று 11 ஆம் திகதி மே மாதம் 2011 இல் பாரிய நிலநடுக்கம் ஏற்படுமெனவும் இதனால் அந்நகரம் முற்றாக அழிந்துவிடுமெனவும் பூகம்பவியல் அறிஞர் ஒருவர் 1915 ஆம் ஆண்டு எதிர்வு கூறியிருந்தார்.

Tuesday, May 10, 2011

விரைவில் அறிமுகமாகும் கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி (காணொளி இணைப்பு)

கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.

Monday, May 9, 2011

பேசினால் போதும்: தானாகவே சார்ஜ் ஏறும் கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு-South korea

பேசினாலே பற்றரியில் சார்ஜ் ஏறும் புதிய வகையான கைத்தொலைபேசிகளை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Friday, May 6, 2011

பிரஷருக்கு மருந்து பெரிய வெங்காயம்

வீட்டுக்கு வீடு வாசல்படி இருக்கிறதோ இல்லையோ.. உடல் பருமன், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் இருக்கிறது.  ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்று ஆராய்ச்சிகளும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

Thursday, May 5, 2011

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழலுவதனால் பாரிய தீப்பிழம்பு உருவாவதாக ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளுக்கும் காந்தபுலங்களுக்கும் இடையிலான
செயற்பாட்டினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சூரியனில் உருவான பாரிய சூரியப் பிழம்பு
உருவானதாக இங்கிலாந்தின் மத்திய பல்கலைக்கழ
க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, May 4, 2011

கோழி கொழுப்பில் விமான எரிபொருள்!

பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை ஏறி வருகிறது. அதற்காக கார், பைக் ஓட்டாமல் இருக்க முடியுமா? எவ்வளவு விலை உயர்ந்தாலும் குறையாமல் நடக்கிறது விற்பனை. அதே நேரம்.. ‘பயன்பாட்டை குறையுங்கள், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது’ என்கிறார்கள் ஆர்வலர்கள்.

மனிதர்கள் நினைப்பதை கண்டறியும் தாவரங்கள்

தாவரங்களுக்கும் நுண்ணறிவு உண்டு என்று பல ஆய்வுகள் மூலம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் கிளி பாக்ஸ்டர் என்பவர் தற்செயலாக தாவரங்களின் மர்மங்களை அறிந்து கொள்ள நேரிட்டது.

Monday, May 2, 2011

சிரியஸ் பி

சிரியஸ் B என்பது வெறுமனே 11,100 கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்ட ஒரு சிறிய விண்மீன். இது நம் பூமியின் விட்டத்தை விடவும் குறைவாகும். இதன் நிறை நம் சூரியனின் நிறை அளவு உள்ளது. சூரியன் அளவு கனமான ஒரு உருவம் பூமி போன்ற ஒரு வடிவத்தில் அடங்கியிருந்தால் அதன் அடர்த்தியும் அதன் ஈர்ப்பு விசையும் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.