Wednesday, December 26, 2012

வன்பொருள் செயல்முறை - Vedios (Computer Hardware Technology)

www.saakaram.co.nr
கணிப்பொறியை மனிதனுடன் ஒப்பிடுவார்கள். அதாவது தரவுகளைப் பெறுதல்,அவற்றை ஆராய்தல், சேமித்தல் மற்றும் தேவையானபோது நினைவில் இருந்து எடுத்துக் கொடுத்தல் இவ்வாறன செயல்பாடுகள் கணனியில் நடைபெறுகின்றது.

Saturday, December 22, 2012

பூண்டு மருத்துவம் அறிவோமா !


www.saakaram.co.nr
மருத்துவமும் இன்றைய விஞ்ஞானமும் பூண்டின் மருத்துவ குணம்  மகத்தானது என்கின்றனர் .இரத்தத்தில் உள்ள கொலஸ்றாளை குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது.
ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது.
மேலும் கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன.

Thursday, December 20, 2012

ஏன் உலகம் அழியாது?

ஒரு ஆய்வு சொல்லுவதுபோல்  உலக சனத்தொகையில் 6 இல் ஒருவர் இந்த உலகம் 2012 அழியும் என நம்புகின்றனர். ஆனால் மனிதனுடைய அறிவை மிஞ்சிய ஒரு விடயம் எப்பொழுதுமே நடந்து கொண்டு இருப்பதை அநேகர் யோசிப்பதில்லை.இத்தகைய நிலையில் நாம் எவ்வாறு 2012 இல் உலகம் அழியும் என்று நம்பமுடியும்! தற்போதைய விஞ்ஞான மெய்ஞ்ஞான கருதுகோள்களின் படி கூறப்பட்ட சில விடயங்கள் எமது தளத்தில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.அவை இங்கே உங்களுக்காக மீண்டும்.

இஞ்சி தரும் இன்பம்

இஞ்சி 

என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.
காலையில் எழுந்தவுடன் இஞ்சி டீ குடிப்பது நல்லது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம்.
ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும்.

Wednesday, December 19, 2012

மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி - டம்மீஸ்


சில்வியு அஞ்சலீசு, “CCNA பரீட்சை வளிகாட்டி அனைத்தும் ஒன்றாக சேர்ந்த மாதிரி”
2010 || 987 பக்கங்கள் || PDF வகை கோப்பு || அளவு 11.1MB
இது ஆரம்ப கட்ட நெட்வேர்க்கிங் CCNA பயிலும் மாணவர்களுக்கான ஒரு முழுமையான ஆயத்த வழிகாட்டியாகும். நீங்கள் ஒரு சிஸ்கோ பரீட்சை செய்யும் முன்னர் இவ் பதிப்பை முழுமையாக படிப்பது நல்லது. இது புதிய முறைகளையும் பல விடையங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது புதிய பரீட்சை வளிகாட்டி ஆகும். இதில் 7 சிறிய புத்தகங்களில் அடிங்கிய விடையங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் IPv6, 2960 Switches, Cisco Network Assistant, Advanced EIGRP & OSPF, அத்துடன் Wireless Network அறிமுகமும் அடங்கியுள்ளது.புதிய வினாக்களை உள்ளடக்கியுள்ளது இது உங்கள் பரீட்சைக்கு துணையாய் அமையும்.

பொதுவாக உடலில் கொழுப்பை குறைக்கும் உணவுகள்

நாம் இன்றைய உணவுகளில் எம்மை அறியாமலே கொழுப்புகள் நிறைந்த வகைகளை விரும்பி உண்கின்றோம்.இதனால் சிறு வயது முதலே தொப்பை உருவாகின்றது இதனை தவிர்ப்பதற்கு பின்வரும் உணவுகளை உண்ணமுடியும் என்று மருத்துவ உலகம் கூறுகின்றது.

Tuesday, December 18, 2012

சிஸ்கோ(CCNA) நெட்வொர்கிங் கற்றுக்கொள்வோம் - Videos

சிஸ்கோ (Cisco) உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம், நுகர்வோர் மின்னணுவியல், வலைப்பின்னலாக்கம், குரல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் துறைகளில் சேவைகளையும் பண்டங்களையும் வழங்குகிறது.கலிபோர்னியாவில் சான் ஹொசே நகரைக் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. 65,000 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இதன் வருடாந்திர வருவாய் 40.0பில்லியன் அமெரிக்க டாலர்.
சிஸ்கோ நெட்வொர்கிங் இன் முக்கியத்துவம் கருதி சாகரம் தளமானது இது சம்பந்தமான கற்கை நெறிகளை தமிழில் வழங்க இருக்கின்றது.அதாவது இணையத்தில் காணப்படும் வீடியோக்கள் மூலமாகவும் மற்றும் நாமும் இணைந்து இவற்றை தருகின்றோம். 

ரோபோக்களை கட்டுப்படு​த்தும் Tablet-கள் (Video)

கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தொழிற்சாலைகளில் ரோபோக்களின் பங்களிப்பானது தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.
எனினும் இந்த ரோபோக்களை இயக்குவதற்கு மனித மூளை மற்றும் வலு என்பன அவசியமாகக் காணப்பட்டன.
இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்பட்டு வந்தது.

கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்

கத்தரிக்காயில் குறைந்த கலோரியும், அதிகளவு சத்துக்களும் அடங்கி உள்ளது.
முக்கியமாக எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு கத்தரிக்காய் மிக நல்லது.
உலகம் முழுவதிலும் வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது.
கொழுப்பு சத்து குறைந்த கத்தரிக்காய், குறைந்த ஆற்றலை தரக்கூடியது. 100 கிராம் கத்தரிக்காயில் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது, 9 சதவிகிதம் நார்ச்சத்து உள்ளது.

ஐபோன்களுக்கென கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய மென்பொரு

இணையத்தளங்களினூடு வீடியோ கோப்புக்களை பகிருவதில் முன்னணியில் திகழும் YouTube தளத்தினை கைப்பேசிகளிலும் பயன்படுத்தும் வசதிகள் காணப்படுகின்றமை அறிந்ததே. 
இவ்வாறு iPhone - களில் YouTube வீடியோக்களை பார்க்கும் அதேவேளை அவற்றினை பதிவு (Capture) செய்வதற்கான வசதியினை தரும் பிரயோக மென்பொருள் ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உள்ளிருக்கும் அற்புதத்தை உணர்ந்து கொள்ளுங்கள்

“உண்மையான ஆனந்தம் சாதனைகளைப் பற்றியதல்ல, உங்கள் உள்ளேயே அமைதியைக் கண்டுகொள்வதைப் பற்றியது. கண்டுகொள்வதற்காக உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணம்தான் எல்லா பயணங்களையும் விட மிக சிறந்த பயணம்.”
மகராஜி அவர்கள் தன் சிறுபிராயத்திலிருந்தே மக்களிடம் உள் அமைதியைப் பற்றி உரையாற்றி வருவதுடன் தனது பதிமூன்றாவது வயதில் அவர் சர்வதேச ரீதியில் பிரயாணம் செய்ய தொடங்கினார். அன்றுதொட்டு அவர் உலகெங்குமுள்ள ஆறரைகோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார். அவரின் உரைகளை பல்வேறு சாதனங்களின் வாயிலாக மலேசியா உட்பட 88-ற்கும் மேற்பட்ட நாடுகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

Friday, August 31, 2012

மனிதனின் உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் ரோபோவை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

பேச்சு, முக பாவம் ஆகியவற்றை கொண்டே ஒருவரது உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் ரோபோவை பின்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மனிதனின் உணர்ச்சிகளை கண்டுபிடிக்கும் ரோபோவை உருவாக்கும் ஆராய்ச்சியில் பின்லாந்தின் அவுலு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேடி பிடிகெய்னன், ஜுகா ரோனிங் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

Wednesday, August 8, 2012

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க

தற்போது அழகாக இருக்கும் முகத்தின் அழகை கெடுப்பதில் கரும்புள்ளிகளும் ஒன்று. அதிலும் இந்த பிரச்சனை டீனேஜ் வயதினரையே அதிகம் பாதிக்கிறது.
அது ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி. அவ்வாறு கரும்புள்ளிகள் வந்துவிட்டால், அதைப் போக்குவது என்பது கடினம்.

மரணத்தை தள்ளிப் போடும் நெல்லிக் கனி

தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப் போடலாம் என்று கூறுவது உண்டு.
நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது, இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

Google Fiber: அதிவேக இணைய வசதி

கூகுள் அண்மையில் ஓர் அட்டகாசமான திட்டம் ஒன்றை அமெரிக்க மக்களுக்குத் தந்துள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இது அடுத்த கட்டமாக அமைய உள்ளது.
இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், உலகின் அனைத்து இடங்களிலும் கூகுள் இதனைச் சாத்தியப்படுத்தலாம்.
கூகுள் பைபர்(Google Fiber) என்ற பெயரில், அதி வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் திட்டம் ஒன்றை கூகுள் வடிவமைத்துள்ளது.

Tuesday, July 31, 2012

உலக அழிவு- மிக அபத்தமானது-விவாதம் தொடங்குகிறது

"பலகோணங்களில் ஆராயப்படும் இந்  நிகழ்வுக்கு முதற் படியாக இக் கட்டுரை அமைகிறது "
நம் முன்னே இருக்கும் தவிர்க்க இயலாத அபாயம் சூரியன் முழுமையாக எரிந்துபோவது மட்டுமே
தலைவர் பி.ஆர்.எல். கவுன்சில் & முன்னாள் தலைவர், இஸ்ரோ
ஜோதிடர்கள், கிளி ஜோதிடர்கள் மற்றும் போலி விஞ்ஞானிகள் ஆகியோர் டிசம்பர் 21-ம் தேதி உலகம் கடுமையான அழிவைச் சந்திக்கும் என கணித்துள்ளனர்.

Friday, July 13, 2012

சாகரத்தின் புதிய விஞ்ஞான மெய்ஞான தொடர் ஆரம்பம் - "உலக அழிவு"

எமது இந்த வாழ்க்கையில் சந்தோசம் துக்கம் என்பன ஒவ்வரு கணப்பொழுதும் ஒரு சக்கரமாக சுழன்றுகொண்டு  இருக்கிறது.இதை  ஆசையின் அல்லது தேவையின் அளவு  தீர்மானிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஏன் இது இங்கே சொல்லப்படுகின்றது என்பது போகப்போக புலப்படக்கூடியதாக இருக்குமென நாம் நம்புகின்றோம். இந்த உலகத்தின் தளம்பல் போக்கை ஆராய்வதட்குதான் நாம் முயற்சிக்கின்றோம் 

Tuesday, July 10, 2012

விண்டோஸ் 7ஐ பூட்டபிள் USB மூலம் கணணியில் நிறுவுவதற்கு


விண்டோஸ் 7 இயங்குதளத்தை சிடி இலிருந்து நிறுவும் போது ஏதாவது ஒரு காரணத்தினால், அவை தடைப்பட்டு பாதியில் நின்று விடும். இதை தவிர்க்க மாற்று வழியாக பூட்டபிள் பென் டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ கணணியில் நிறுவிக் கொள்ளலாம்.இவற்றிற்கு தேவையானது குறைந்தது 4 GB அளவுடனான யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டோலேஷன் டிவிடி.

உங்கள் கணணியில் இரகசிய தகவல்களை பாதுகாக்க இலகுவழி


கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்சினை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம்தான். இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.

Sunday, July 8, 2012

9 திகதி ஏய் வைரஸிலிருந்து கணணி பாதுகாக்கும் முன்னெச்சரிக்கைகள்

ஏய் வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணிணியை செயல் இழக்கச்செய்து விடும் என்ற தகவல் பயணாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. 
இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கணணியில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9 ம்திகதி பெரும் பாதிப்பை தரும் என்கின்றனர் கணணி வல்லுநர்கள்.

Thursday, July 5, 2012

2012 மே இல் தான் உலக வரலாற்றில் அதி கூடிய வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டுள்ளது


இந்த வருடத்தின் மே மாதம் தான் உலக வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவாகிய மாதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இந்த மே மாதம் தான் அதிக சூடாக இருந்ததாம்.1880 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக வெப்பம் இந்த வருட மே யில் தான் பதிவாகியுள்ளது.இதனை அமெரிக்காவின் (NCDC) தேசிய காலநிலை தரவு மையம் (National Climatic Data Centre) உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது.

Wednesday, July 4, 2012

கடவுளின் அணுத் துகள் “ஹிக்ஸ் போஸான்” கண்டுபிடிப்பு: 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளது

கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.

Tuesday, July 3, 2012

கணணி தொழினுட்பத்தின் எதிர்காலம்!

அடுத்த 10 ஆண்டுகளில் கணணியில் என்ன என்ன மாற்றங்கள் வரும் என்பதை கணித்து நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.அதிக இடத்தை எடுத்துக் கொண்டு மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கணணியின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கணணிகள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

குரோமின் வளர்ச்சிப்படியைக் காட்டும் கூகுளின் சுவாரஸ்ய காணொளி -தொழினுட்பத்தின் தெளிவு வீடியோ

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பொக்ஸ் உலாவிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் கூகுளும் குரோமினை அறிமுகப்படுத்தியது.
கூகுள் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குரோமினை வெளியிட்டது. 
குரோமின் எளிய தோற்றமும் செயல்படும் வேகமும் சிறப்பாக இருப்பதனால் நான்கே வருடங்களில் சுமார் 310 மில்லியன் பாவனையளர்களைப் பெற்று அபார வளர்ச்சி அடைந்துள்ளது. 
இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கத்தினைக் குரோம் வெகுவாக குறைத்துள்ளதுடன் பயர்பொக்ஸினையும் பின் தள்ளியது. 

Wednesday, June 20, 2012

இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் வாழ்ந்துள்ளான்: கலாநிதி நிமால் பெரேரா


இலங்கையில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோசபியன்ஸ் மனிதன் வாழ்ந்தான் என்பதை களுத்துறை, புளத்சிங்களப் பகுதியில் உள்ள பகியங்கல வளைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புக்கூடு உறுதி செய்துள்ளதாக தொல்பொருள் திணைக்கள பிரதி பணிப்பாளர் கலாநிதி நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Saturday, May 5, 2012

வாழையின் மருத்துவ குணங்கள்

அன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்த தாவரம் வாழை. பல்வேறு உடல்நல பாதிப்புகள், குறைவுகளுக்கு வாழை உதவுகிறது.
தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைய்பட்ட காயம் போன்ற இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.

காயங்கள், தோல் புண்கள் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து, புண்கள் மேல் போட்டு அவற்றின் மீது மெல்லிய வாழை இலையை கட்டு மாதிரி போட வேண்டும்.

இன்று இரவு 11.35 மணிக்கு தென்பட இருக்கும் இவ்வருடத்தின் பெரிய நிலவு! ( வீடியோ)

இன்று வெசாக் பண்டிகை தினம். புத்த சமயிகளுக்கு மிகவும் முக்கியமான நாள். அத்துடன் இன்று சித்திரா பௌர்ணமியும்கூட. தமிழ் இந்துக்களுக்கும் மிக முக்கிய நாள்.
ஆனால் இவ்வருடத்தின் முக்கியமான நாள்களில் ஒன்றாக உலகத்தவர் அனைவருமே இன்றைய நாளை குறிப்பிடலாம்.
ஏனெனில் இவ்வருடத்தில் மிகப் பெரிய முழு நிலவு இன்றுதான் தென்பட இருக்கின்றது. இரவு 11.35 மணிக்கு இந்நிலவை காண முடியும்.

புற்றுநோயை தடுக்கும் ஸ்ட்ராபெர்ரி

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் உயர்ந்த பழங்களில் ஒன்று ஸ்ட்ராபெர்ரி.
ஸ்ட்ராபெர்ரி என்றால் நம் நினைவுக்கு வருவது நம் கண்களை கவரும் அழகும், சுகந்த மணமும், கருஞ்சிவப்பு நிறமும் ஆகும். இவை கோடைகாலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோ கோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் உள்ளன.

LG நிறுவனத்தின் Optimus LTE2 கைப்பேசிகள் வெளியீடு (வீடியோ இணைப்பு)

LG நிறுவனமானது முதன் முறையாக 2GB RAM கொண்ட Optimus LTE2 கைப்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இக்கைப்பேசியானது முன்னைய தயாரிப்புக்களை விடவும் தொழிற்பாடு வேகம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் அறிமுகமாகியது செம்சுங் கெலக்ஸி SIII - NEW

செம்சுங் கெலக்ஸி SIII நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய கெலக்ஸி SIII யானது பல புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது.

இதன் முன்னைய வெளியீடான கெலக்ஸி SII மற்றும் செம்சுங் கெலக்ஸி நோட் ஆகியனவும் சந்தையில் மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்றதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது.

பறந்து பறந்து சுடும் புதிய எந்திர துப்பாக்கி

ஹெலிக்கப்டர் போன்று பறக்கும் ஒரு குவேட்ரேட்டர் எந்திரத்தை உருவாக்கி, அதில் இந்த எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கியின் விசேடம் மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்லும்.
இந்த எந்திர துப்பாக்கியை டேப்லட் PC மூலம் கட்டுப்படுத்த முடியும். அதோடு இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியில் கமெராவும் பொருத்தப்பட்டுள்ளதால் இலக்கை சரியாக குறிவைத்து ஏவ முடியும்.

Monday, April 23, 2012

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது!

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிளின் ஐ போன் 5 புதிய வகை கலப்பு உலோகத்தினால் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. 

தொழில்நுட்ப உலகத்தில் பெரிதும் அறியப்படாத கலப்பு உலோகம் 'liquid metal' ஆகும்.


Monday, February 13, 2012

எதிர் காலத்தில் லினக்ஸின் பயன்பாடு

சென்ற ஆண்டு பெர்சனல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் கொண்டு வந்த மாற்றங்கள், அறிவித்த புதிய திட்டங்கள் மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தின.

Tuesday, January 17, 2012

இன்றைய நாளில் உலகில் நடந்தது என்ன?

இன்றைய தினமாக ஜனவரி 16ல் இதற்கு முந்தைய வருடங்களில் உலகளவில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு.

Friday, January 13, 2012

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம்.

Sunday, January 1, 2012

சாகரம் வாசகர்களுக்கு எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2012.

        உங்களுடைய ஆதரவுக்கு நன்றி மீண்டும் வருக -2012.

இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கு

இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை கணணியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Auslogics Internet Optimizer என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.