Thursday, September 15, 2011

மனிதனிலிருந்து மின்சாரம்: ஜப்பானின் புதிய முயற்சி (காணொளி இணைப்பு) .

 உலகம் தற்போது எதிர்நோக்கி வரும் பிரதான சவால்களில் ஒன்று மின் சக்திப் பற்றாக்குறையாகும்.

வளர்ந்து வரும் நாடுகள் முதல் வளர்ச்சியடைந்த நாடுகள் வரை அனைத்தும் இதற்கு முகங்கொடுத்து வருகின்றன.

குறிப்பாக ஜப்பான் தற்போது மிகப் பெரியளவில் மின்சக்தி பற்றாக்குறைக்கு முகங்கொடுத்து வருகின்றது.
அண்மையில் அந்நாட்டைத் தாக்கிய சுனாமியால் அங்கு காணப்பட்ட பல அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

Friday, September 9, 2011

அண்டார்டிக் பகுதியில் பெருகி வரும் ராட்சத நண்டு இனங்கள்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை.

புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும். நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை.
எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம்.

Monday, September 5, 2011

முக அழகிற்கு உதவும் எலுமிச்சை.

எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மஞ்சள் காமாலை, கண்நோய் மற்றும் ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
ஒரு தே‌க்கர‌ண்டி எலு‌மி‌ச்சை சா‌ரி‌ல் ‌சி‌றிது தென் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சருமம் வழவழப்பாக இருக்கும்.