Sunday, February 15, 2015

விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்! யாழில் பேரணிக்கு ஏற்பாடு

இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை அறிக்கையினை சமர்ப்பிப்பதனை தடுக்க பலர் முயற்சிப்பதை எதிர்த்தும், அந்த அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தியும் எதிர்வரும் 24ம் திகதி மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. 

இதனை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் இராஜகுமாரன் தெரிவித்தார். 

வட மாகாணசபையின் தீர்மானம் மதிக்கப்பட வேண்டும்!

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையின் அறிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கூறுகின்றது. 

Thursday, February 12, 2015

உள்ளக விசாரணை இலங்கையில் சாத்தியம் இல்லை: ஐ.நா ஆணையாளருக்கு சிவில் அமைப்பு கடிதம்

சர்வதேச விசாரணையை முன்னெடுத்துக் செல்லுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை தொடர்பான விசாரணை என்ற தலைப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,
ஐ.நா மனித உரிமை ஆணையாளார் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கும் எதிர்வரும் மார்ச் மாத ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டதொடர் தொடர்பில் தங்களிற்கு தமிழ் சிவில் சமுக அமையம் சார்பில் இம்மடலை வரைகின்றோம்.

அன்ரன் பாலசிங்கம் ஏதோ பெரிய ஆள் மாதிரி அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முதலமைச்சர். இதோ முழுகாணொளி


வயது முதிர்வு அடைந்தவர்களுக்கு பெரும் வேதனையாக இருப்பது மூட்டு வலி. தற்போது நச்சு கலந்த உணவு வகைகளால், இயற்கையில் விளையும் பொருளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்மூலம் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும். நாளடைவில் இதுவே பெரிய நோயாக மாறும். இந்த மூட்டு வலியை நீக்க நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது.

Monday, February 9, 2015

ஊழல்- மோசடிகளை விசாரிக்க சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு

இலங்கையில் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாணத்தில் அரலகங்வில பிரதேச மக்கள் முன்னிலையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று நாட்டு மக்கள் காத்திருப்பதாகக் கூறினார்.

How DARPA is planning fast, cheap satellite launches



நீங்கள் யோகா செய்பவரா?... அப்போ இது உங்களுக்குத் தான்!.

உடலை திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு யோகாசனம் இன்றியமையாததாக காணப்படுகின்றது.
பண்டைய காலக் கலையான இதனை புதிய தொழில்நுட்பத்துடன் இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் செய்வதற்கு SmartMat எனும் நில விரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சம்பிக்கவின் கருத்து மகிழ்ச்சியளிக்கின்றது: மைத்திரி, ரணில் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்: த.தே.கூ.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் வடக்கில் கையகப்படுத்திய  காணிகளை மீண்டும் உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ரீதியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் கூறப்பட்ட கூற்றினை தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றிருப்பதாக தெரிவித்த கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என பாதுகாப்பு பிரதியமைச்சர் ருவான் விஜேயவர்த்தன கூறிய கூற்று கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மறுபடியும் முஸ்லிம் காங்கிரஸ் துரோகமிழைத்துள்ளது -அரியநேத்திரன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இரண்டாவது முறையாகவும் துரோகமிழைத்துள்ளது. நாளை மறுதினம் 10 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாதமாக செயற்படுகின்றது என்று மட்டு. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். ப. அரியநேத்திரன் தெரிவித்தார்.

Friday, February 6, 2015

கடலுக்கு அடியில் மர்ம உயிரினம்

நியூசிலாந்தில் மிகவும் வசீகரமான கடலொன்றான டர்க்கைஸ் கடலுக்கடியில் உலாவிய மாபெரும் மர்ம கடல் உயிரினம் ஒன்றின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சராக நசீர் அஹமட் பதவியேற்றார்

இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று மாலை ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Thursday, February 5, 2015

ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்!

வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழ்வதற்கு, தினமும் உடற்பயிற்சிகளை செய்து வருவதோடு, ஒருசில உணவுகளையும் அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதுடன், அதில் வைட்டமின்களும், இரும்புச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது.
மேலும் பசலைக்கீரையில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் லூடீன் அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம் பசலைக்கீரையில் இருப்பதால், இரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.

உன் தகுதியை உலகுக்கு நீயே உரக்கச் சொல்: சீசரின் மந்திரச் சொல்

ஜூலியஸ் சீசர் ஒருமுறை கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமாக சென்றபோது எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் 20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபரை விடுதலை செய்கிறோம் என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத் தகவல் அனுப்பியுள்ளனர்.
இதனை கேள்விப்பட்ட சீசர், என் விலை வெறும் 20 தங்கக் காசுகள் தானா?! என கோபமடைந்து எனது விலையாக 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள் என்று தோரனையோடு தெரிவித்துள்ளார்.

தைவான் விமான விபத்து ; ஹீரோ ஆன விமானி (வீடியோவைப் பாருங்கள்)

தைவானில் நேற்று பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான விமானம், ஓடு பாதையில் இருந்து புறப்பட்ட சிலி நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆற்றில்

Wednesday, February 4, 2015

மனிதனுடைய ஆயுட்காலம்

மனிதனுடைய ஆயுட்காலம் எவ்வளவு என்பதை கண்டறியும் புதிய உயிரி கடிகாரத்தினை (Bio clock) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று கணக்கிட்டுள்ளனர். மேலும், ஒரு மனிதன் எப்போது உயிரிழப்பான் என்பதற்கு விடையளிக்கும் புதிய உயிரி கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கிரெடிட் கார்டு அளவிலான போன்!

எதிர்கால பிலிப்ஸ் போன்
எதிர்கால ஸ்மார்ட்போன் வகைகள்தான் எத்தனை வகை. பிலிப்ஸ் நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்போன் வடிவமைப்பை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. மிக மெலிதாக கிரெடிட் கார்டு அளவில் இருக்கிறது இந்த போன். இதை வழக்கமான போன் பயன்படுத்துவது போல பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைக்கேற்ப கைகளில் சுற்றிக்கொள்ளவும் செய்யலாம்.

இலங்கையில் துப்பாக்கிகள் அமைதியடைந்தாலும் நல்லிணக்கம் இன்னும் ஏற்படவில்லை: சுதந்திரதின உரையில் ஜனாதிபதி

நல்லிணக்கத்தினூடாக தேசிய ஐக்கியத்தை அதன் எல்லா அம்சங்களிலும் அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் 67 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

Tuesday, February 3, 2015

இலங்கை மீது அழுத்தமும், உதவியும் தொடரும்: நிஷா பிஸ்வால்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று உறுதி கூறியிருப்பதாக தமிழ்த் தேசியக் அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைக்கானத் துணைச் செயலர் நிஷா பிஸ்வாலை கொழும்பில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

மஹிந்தவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி வியாழக்கிழமை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.
தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுத்நதிர முன்னணி மற்றும் வாசுதெவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இவ்வாறு புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளன.

சம்சுங் நிறுவனத்தின் வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்

சம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் செய்யக்கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பாக சம்சுங் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி இக்கடிகாரமானது Orbis  எனும் பெயருடன் வட்ட வடிவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடினமான சவால்களை இன்னமும் இலங்கை சந்திக்க வேண்டியேற்படும் : அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நிஷா

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் குறு­கிய காலத்தில் பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். ஆனால் இலங்கை இன்னும் செய்­ய­வேண்­டிய பல கடி­ன­ மான நட­வ­டிக்­கைகள் உள்­ளன. மீண்டு வரு­வ­தற்கு பல கடி­ன­மான சவால்கள் இன்னும் காணப்­ப­டு­கின்­றன என்­ப­தனை நாம் அறிந்­துள்ளோம் என்று மத்­திய மற்றும் ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்கச் செய­லாளர் நிஷா பிஷ்வால் தெரி­வித்தார்.

Sunday, February 1, 2015

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜெப் புஷ் போட்டியிட வாய்ப்பு அதிகரிப்பு

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இளைய மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் தம்பியுமான ஜெப் புஷ் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
குடியரசுக் கட்சி சார்பில் மிட் ராம்னி போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் போட்டியிடப் போவதில்லை என வியாழக்கிழமை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜெப் புஷ் (61) வேட்பாளராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஸ்ரீபவன் காலத்தில் நீதித்துறை வலுவடைந்து முன்னேறும்: சி.வி


இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ள கே. ஸ்ரீபவனின் காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்ல நிலையை நோக்கிச் செல்லும் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

உங்கள் கணினியில் 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.