Monday, December 26, 2011

34 ஆண்டு பயணம்.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர் - 1 விண்கலம்

இந்த மாதத்தின் துவக்மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது.

Sunday, December 25, 2011

துண்டுக் காகிதத்திலிருந்து மின்சாரம்! சொனி நிறுவனம் அதிரடி

ஒரு துண்டுக் காகிதம் ஒன்றில் இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழினுட்பத்தை உலகின் பிரபல மின் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான சொனி கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கண்டு பிடிப்பின் மூலம் சொனி நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தொடர்பான சமூக அக்கறையினையும் வெளியிட்டுள்ளது.
வீணாகப் போகும் துண்டுக் காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறையினை சொனி நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது.

Wednesday, December 21, 2011

மனதை அறியும் கணனிகள் சாத்தியப்படுமா?: ஐ.பி.எம் இன் எதிர்வுகூறல்

மனித மனத்தினை அறியும் கணனிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுதல் சாத்தியம் என ஐ.பி.எம் நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எம் IBM 5 in 5 என்ற தலைப்பின் கீழ் எதிர்வு கூறல்களை மேற்கொண்டு வருகின்றது.

அதிசயமான மேஜிக் காட்சிகள் - வீடியோ இணைப்பு

அதிசயமான மேஜிக் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. அந்தரத்தில் ஒருபெண்ணை படுக்க வைத்திருக்கும் காட்சிகள் பிரமாதம்.நீங்களும் பாருங்கள்.

Sunday, December 18, 2011

ரஷ்ய விண்கலம் பூமியில் மோதும் அபாயம்

செவ்வாய் கிரகத்தின் துணைக்கிரகமான சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது.  200 கிலோ எடையுள்ள இந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டதால், பூமிக்கு மீண்டும் திரும்புகிறது.

Thursday, December 15, 2011

தென்கொரியாவில்(SouthKorea) கட்டப்பட உள்ள அழகிய இரட்டைக் கோபுரம்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு தகர்த்தனர்.
விமானம் மோதும் முன்பு காணப்பட்ட கட்டிடத்தின் தோற்றத்தைப் போலவே தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் கட்டிடம் ஒன்றை கட்ட உள்ளனர்.

சமூக வலையமைப்புகளில் அதிக கவனத்தை ஈர்க்கும் அம்சம் எது?

நம்மில் பலர் தற்போது எதாவது ஒரு சமூகவலையமைப்பினை உபயோகித்து வருகின்றோம்.

இந்நிலையில் சமூக வலையமைப்புகளில் ஒருவரின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் அம்சங்கள் எவையென ஆய்வொன்றினை நடத்தியது.

Wednesday, December 14, 2011

கைவிரல் நகங்கள் நிறமாற்றம் : இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறி!

சில நேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும்.
அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.
இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.

பேஸ்புக் 'டைம்லைன்' : நம்மைப் பற்றிய மேலதிகத் தகவலின் தேடலா?

சமூக வலைப்பின்னல் உலகில், தினந்தினம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது பேஸ்புக்.

நமது கணக்கில் 'டைம்லைன்' எனும் மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டுவரப் போவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் அறிவித்திருந்தது.

Monday, December 12, 2011

மூன்று பெண்களுக்கு நோபல் விருதுகள்

அநீதி, சர்வாதிகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடிய மூன்று பெண்களுக்கு, நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த விழாவில், இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன.

உலகில் சுற்றுலா மேற்கொள்ள கூடிய மிகச்சிறந்தத இடங்கள்

(படங்கள் இணைப்பு )பார்பதற்கு மிகவும் அழகிய தோற்றமும் பல்வேறு வகையான சிறப்பம்சங்களைக்கொண்ட இடங்களை உலகில் சில நாடுகளிலேயே பார்க்கமுடியும்  . அந்த வகையில் இங்கே சில தகவல்கள் தரப்படுகின்றன.

Saturday, December 10, 2011

இன்று பூரண சந்திர கிரகணம் : இலங்கையில் முழுமையாகப் பார்க்கலாம்

 2011ஆம் ஆண்டின் இரண்டாவதும் கடைசியுமான சந்திர கிரகணம் இன்று சனிக்கிழமை நிகழவுள்ளது. இதனை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருக்கும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு...


விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம்.
இந்த செயல்முறையை நான்கு இலகுவான படிமுறைகளை கொண்டு multiboot USB டிரைவ் மூலம் செயல்படுத்தலாம்.

Thursday, December 8, 2011

2011 ம் ஆண்டு மிகப் பிரபலமான இயற்கை காட்சிகள் - பிரமிக்கத்தக்கவை

இந்த வருடம் மிகப்பிரபலமான இயற்கை காட்சிகள் இங்கே தரப்படுகின்றன. பெரும்பாலானவை கடல் சூழலில் காணப்படுபவை .

படங்கள் இணைப்பு

அமெரிக்காவின் உளவுபார்க்கும் இயந்திரமாக பேஸ்புக் - ஜூலியன் அசாஞ்சே அதிர்ச்சித் தகவல்

 இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில் அமெரிக்காவின் பயங்கரமான உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் என விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

Tuesday, December 6, 2011

ஐ போனுக்குத் தடை!

சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி அசாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் 'ஐ போனை' அந்நாட்டு அரசு தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிற்கவைத்து தலைக்கு பின்னால் சுடும் மரண தண்டனைக்கு முதல் நாளிரவு சீனப்பெண் கைதிகளின் வாழ்க்கை!

சீனாவின் சிறைச்சாலை ஒன்றில் கடந்த 2003ம் வருடம், ஜூலை 24ம் திகதி படம்பிடிக்கப்பட்ட இப்புகைப்படங்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பெண் சிறை கைதிகளை பற்றியது.போதைவஸ்துக்கள் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இப்பெண்களுக்கு,

மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்

கணனிகளின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம். எந்த அளவில் கணனியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.

நாம் இணையத்தினை உபயோகிக்கும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ, அல்லது யு.எஸ்.பி டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நமது கணனியில் புகுந்து கணனியில் உள்ள தரவுகளை அழிப்பதுடன் நம் கணனியை செயலிழக்க வைக்கின்றது.

உடல் குண்டவதைத் தடுப்பதற்குரிய சுலபமான முறைகள்.

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம் அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம்.

குளோனிங் முறையில் மீண்டும் மமூத் யானைகள்: விஞ்ஞானிகள் முயற்சி

குளோனிங் முறையில் மீண்டும் மமூத் யானையை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கின்றனர்.
உலகில் கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மமூத் என்ற மிகப்பெரிய உருவமுள்ள யானைகள் அதிக அளவில் இருந்தன.

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு - கற்பனை அல்ல நிஜம் .

வேற்றுகிரகவாசிகள் இங்கே வந்து செல்வதாக செய்திகள் வந்துகொண்டுதான்
 இருக்கிறது.இதனை உறுதிப்படுத்தும் விதமான இச் செய்தி முக்கியம் வய்ந்ததது. 
விண்வெளியில் 16 மாதமாக   கேப்ளேர் என்ற தொலைநோக்கி அனுப்பிய செய்திகள் புதிய பாதையில் உலகத்தை இட்டுசெல்லும் என்னபதில் ஐயமில்லைஎனலாம்.இதன்மூலம்  2326 புதிய கிரகங்கள் மற்றும் எமது 
சூரிய குடும்பம்போன்றபலவற்றை கண்டுபிடித்துஅனுப்பயுள்ளது .

Sunday, December 4, 2011

5 GB அளவுடைய தகவல்களை சேமிக்க வேண்டுமா !

இணையத்தில் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம்.
கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில்

18 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு - கெப்ளர் ஆராய்ச்சி

சூரியனை விட பல மடங்கு பெரியதாக 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.இதுபற்றி வாஷிங்டனில் குழுவின் தலைவர் ஜான் ஜான்சன் கூறுகையில்,

ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கூகுள்

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கென ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் என்ற இணையத்தளத்தை ஆப்பிள் நிறுவனம் அமைத்து பல்லாயிரக்கணக்கான மியூசிக் கோப்புகளை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் தரவிறக்கம் செய்திடும் வகையில் இயக்கி வருகிறது.

Saturday, December 3, 2011

யூரோப்பா கிரகத்தில் தண்ணீர் - நாசா தகவல்

வியாழன் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அந்த கிரகத்தில் உள்ள “யூரோப்பா” என்ற சந்திரனில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான பனிக்கட்டி படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, December 2, 2011

ஐபோனுக்கு ஆபத்தா அல்லது ஐபோனால் ஆபத்தா!-புதிய சர்ச்சையில் ஆப்பிள் நிறுவனம்.

தொழில்நுட்பத்தில் அப்பிளின் ஐ போன்கள் முன்னணி வகிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

அதன் ஐ பொட், ஐ போன், ஐ பேட் என அனைத்தும் உயர் தொழிநுட்பம் கொண்டவை.

செயற்கையான எலும்பினை உருவாக்கி வைத்தியர்கள் சாதனை

எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எலும்பினால் காயங்களைக் குணப்படுத்த முடியுமென்கின்றனர் ஆய்வாளர்கள்.

Thursday, December 1, 2011

பிறவியிலே கண்பார்வையற்ற ஒரு கலைஞனின் கைவண்ணம் - படங்கள் இணைப்பு

கிரேக்  ராயல் இவர் ஒரு வரைபட கலைஞர் ஆனால் பிறவியிலே கண்பார்வையற்ற இவர் ஒரு அதிசய அதியமான். கடின உழைப்பால் அவர் இவ்வகையான பல சித்திரங்களை வரைந்துள்ளார். பிறவியிலே கண்பார்வையற்ற ஒரு கலைஞனின் கைவண்ணம் கீழே பாருங்கள்.

முதல் பத்து சிறந்த மோட்டார்பைசிக்கிள் - வீடியோ

மோட்டார் பைசிக்கிகள் உலகில் பல நாடுகளில் பிரதான வாகனமாக பாவிக்கின்றனர் அந்த வகையில் இந்த வீடியோவும் அதன் கூர்ப்புத் தன்மையை விளக்குகின்றது.அமெரிக்கர்களின் மோட்டார் பைசிக்கிள் என்றாலே தனி மரியாதையை  இருக்கிறது.அவர்கள் எவ்வாறு தொழினுட்பத்தை அபிவிருத்தி செய்தார்கள் என்று இந்த காணோளியைப் பார்த்தால் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.

Wednesday, November 30, 2011

மிகவும் அழகிய சொகுசு வசதியுள்ள மகாராஜா எக்ஸ்ப்ரெஸ் - படங்கள் இணைப்பு.

இது ஒரு மிகவும் அழகிய சொகுசு வசதியுள்ள மகாராஜா எக்ஸ்ப்ரெஸ்.இந்தியாவில் உல்லாச பிரயாணிகளின் உல்லாசமான சுற்றுலாவைக் செய்ய மிகவும் அற்புதமான ஒரு சொகுசு ரயில் ஆகும்.நன்றாக வடிவமைக்கப்பட்ட இதன் காட்சிகள் கீழே....

இணையத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் தளங்கள்!

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது பேஸ்புக் என்றே இருக்கும்.
[ நீங்களும் இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமா - http://www.onlineworkformoney.co.nr/  ]எனினும் உண்மை அதுவல்ல. இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் அமேசன்.கொம் ஆகும்.

Tuesday, November 29, 2011

உங்கள் பகுதியில் நிலநடுக்கம் பற்றிய உடனடித் தகவல்களுக்கு - அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கிளில் உங்கள் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய எச்சரிக்கை தகவல்களை தருகின்றது.

ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெறும் ஒரே உயிரினம்!


கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்ஸிஜனுக்கு வயது 2.48 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல்

ஆக்ஸிஜனுக்கு வயது 2.48 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அவுஸ்திரேலியாவின் பில்பாரா பாறைகளில் இருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளின் துணையுடன், 2.48 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலில் உருவான ஆக்ஸிஜன் தோற்றத்தை கண்டறிந்ததாக சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று விவரிக்கிறது.

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு: ஆய்வாளர்கள் தகவல்

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் மிகப் பெரிய குகையான ஹாங் சொன் டொங்கின் மிரட்டலான உட்பக்கம்

'ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும்.
இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகின்றது.

வியட்நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகையானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்குகையின் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Monday, November 28, 2011

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் புத்தம் புது வசதிகள்

மைக்ரோசொப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் இல்லாத இரண்டு புதிய வசதிகளை இதன் பதிப்பு 10ல் அறிமுகப்படுத்துகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், Spell Checker and Auto Correct வசதிகளை இணைத்துள்ளது.
இது குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் இணையதள வலைமனையில் விண்டோஸ் 8

'Jew Or Not Jew' ?புதிய சர்ச்சையில் யூதர்கள் - அப்பிளின் மென்பொருள்

அப்பிளின் புதிய மென்பொருள் படுத்தும் பாடு யூதர்களை காயப்படுத்தியதாக சொல்லப்படுகின்றது   மென்பொருள்  துறை என்பது பல பில்லியன்கள் புரளும் தொழிற்துறையாக மாறிவிட்டது.

Sunday, November 27, 2011

இளமையின் ரகசியம் - ஏலக்காய்

ஏலக்காய் இயற்ட்கையின் அற்புதம் .
மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.
ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும்.
இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும்

Saturday, November 26, 2011

ஆமையும், முதலையும் கலந்த விசித்திர உயிரினம்

நீங்கள் முதலையை பார்த்திருப்பீர்கள். ஆமையை பார்த்திருப்பீர்கள். ஆனால் முதலை ஆமையை பார்த்திருப்பீர்களா? பார்க்காதவர்களுக்காகவே இந்த தகவலும் காணொளியும்.
ஆம் Alligator snapping turtles எனப்படும் ஒரு அரியவகை ஆமைதான் இது. பார்ப்பதற்கு ஆமை போன்று முகத்துடனும்,

பூமியில் ஏழு சிறந்த இயற்க்கை அதிசயங்கள் - Amazing Nature

 இயற்கையின் அற்புதமான படைப்புகள்

1. அமேசன் மழைக்காடுகள்
2. ஆல்ப்ஸ்

3. மத்திய தரை கடல்
4. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
5. சஹாரா பாலைவனம்
6. கிரீன்லாந்தின் பனியாறுகள்
7. ஆப்பிரிக்க சமவெளிகள்


இணையத்தில் உளவு பார்த்தல் - Spy on the Net

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில் நமக்குத் தெரியாமல் பல நிறுவனங்கள் தங்கள் வேவு பார்க்கும் கோப்புகளை நம் கணணியில் பதிக்கின்றன.
நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல்களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள் நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன.

வயர்லஸ் தகவல் பரிமாற்ற வேகம் - ஜப்பானிய விஞ்ஞானிகள்

ஜப்பானிய விஞ்ஞானிகள் கம்பியில்லா தகவல் பரிமாற்றத்தை    சிறிய சிப்சினை உடைய  செமிகோண்டக்ட்டர்  மூலம் பரிசோதித்து 
வெற்றிகண்டுள்ளனர். இதன் மூலம் மிகவிரைவான தகவல் தொடர்பாடலுக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை. செக்னனுக்கு
1 .5 கிகாபைட்ஸ் தகவல்களை  அனுப்ப கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் - புதிய தகவல்

பல்வேறு  கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் பற்றி விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆராய்ந்த கொண்டு இருகின்றனர். அனால் தற்போது விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் சந்திரனில் உயிர்கள் வாழக்கூடிய நிலைமை இருக்கின்றதா என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
சூரியக்குடும்பத்தைச் சேராத கிலியேசே 581g என்ற வெளி கோளும் (exo planet), சனியின் சந்திரனான டைட்டானும் உயிர்கள் வாழக்கூடியனவாக உள்ளன.

Friday, November 25, 2011

இரவில் பூக்கும் ஓக்கிட் மலர் கண்டுபிடிப்பு

இரவில் மலரும் ஒரே ஒரு வகை ஓக்கிட் மலராக Bulbophyllum என்ற வகை பூ உள்ளதாக தாவரவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலுள்ள 25,000 வகை ஓக்கிட் மலர்களில் இந்த இனம் மட்டுமே இரவில் பூக்கின்றது.
இந்த மலர் ஏன் இரவில் பூக்கின்றதென்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை.

நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் - எஜமானை புதைத்த இடத்தில் ஏழுநாட்கள் வரை ஊண் உறக்கமற்றிருந்த நாய்


நாய்கள் தான் இன்றுவரை நன்றிக்கு உதாரணமாக கூறப்படுபவை, ஒரு வேளை உணவிட்டாலும் அதை மட்டும் நினைவில் வைத்து வாங்கும் அடி உதைகளை கூட மறந்துவிடும் பண்பு நாய்க்கு மட்டுமே உள்ளது.
சீனாவின் கிராமமொன்றில் வாழ்ந்துவந்த Lao Pan உறவுகளால் விலக்கப்பட்டு தனிமையில் வாழ்ந்துவந்தவர். நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்பது போல இவருக்கு இந்த நாய் மட்டுமே துணை.

HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook


Facebook தொலைபேசி வரப்போகின்றதென்ற வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன. ஒரு கைத்தொலைபேசி உற்பத்தியாளர்களுடன் Facebook பேச்சு நடத்துகின்றதென்றும் தெரியவருகின்றது.
ஒரு வருடத்தின் முன்னரும் இதுபோன்று Facebook  தொலைபேசி தனது முழு அம்சங்களுடனும் வெளிவரப்போகின்றதென்ற செய்தி வெளிவந்திருந்தது.

Thursday, November 24, 2011

செவ்வாய் கிரகத்தில் மற்றுமொரு ஆராய்ச்சி - நாசாவின் தேடல்

செய்வாய் கிரகத்திற்கு உயிரினங்கள் பற்றிய ஆய்விற்காக புதிதாக நாசா ரோவர் ஒன்றை இந்தவார இறுதியில் அனுப்ப இருக்கிறது.இந்த ரோபோ வாகனத்தை தயாரிக்க $2 .5  பில்லியனை நாசா செலவிட்டுள்ளதாக தெரிகிறது.இதன் எரிபொருள் அணு சக்தியில்

ஈழத்து இசையின் புதிய பரிணாமம் - வவுனியாவில் இருந்து வானமெல்லாம் பரவும் இசை.(வீடியோ இணைப்பு

இலங்கையை சேர்ந்த இரு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் தென்னித்திய இசைக்கு நிகரான புதிய பாடல் இணையத்தளங்களின் இப்பொழுது மிகவும் பிரபல்யம் ஆகியிருக்கு இந்தபாடலை வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் இசை இளவரசன்

மரபணு மாற்று நுட்பம் (Gene Technology) தரப்போகும் விலைமதிக்க முடியாத அற்புதங்கள்.

மரபணு மாற்று விஞ்ஞானம் மருத்துவ உலகை புரட்டிப்போட வைத்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மனிதனுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க `ஆன்டிபயாடிக்’ (நோய் எதிர்ப்பு) மருந்துகளை அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.
அடுத்த கட்டமாக நோய்க்கு மூலகாரணமாகத் திகழும் மரபணு என்ன என்பதை கண்டறிந்து

Wednesday, November 23, 2011

கண்மேல் வில்லை(contact lens) முலம் இணையத்தை பார்க்கலாம் - புதுமையின் நுட்பம்

தொழிநுட்ப புரட்சியில் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த்துகொண்டிருக்கும் இவ் வேளையில் மற்றுமொரு கண்டுபிடிப்பை பாருங்கள். கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.