Tuesday, July 31, 2012

உலக அழிவு- மிக அபத்தமானது-விவாதம் தொடங்குகிறது

"பலகோணங்களில் ஆராயப்படும் இந்  நிகழ்வுக்கு முதற் படியாக இக் கட்டுரை அமைகிறது "
நம் முன்னே இருக்கும் தவிர்க்க இயலாத அபாயம் சூரியன் முழுமையாக எரிந்துபோவது மட்டுமே
தலைவர் பி.ஆர்.எல். கவுன்சில் & முன்னாள் தலைவர், இஸ்ரோ
ஜோதிடர்கள், கிளி ஜோதிடர்கள் மற்றும் போலி விஞ்ஞானிகள் ஆகியோர் டிசம்பர் 21-ம் தேதி உலகம் கடுமையான அழிவைச் சந்திக்கும் என கணித்துள்ளனர்.

Friday, July 13, 2012

சாகரத்தின் புதிய விஞ்ஞான மெய்ஞான தொடர் ஆரம்பம் - "உலக அழிவு"

எமது இந்த வாழ்க்கையில் சந்தோசம் துக்கம் என்பன ஒவ்வரு கணப்பொழுதும் ஒரு சக்கரமாக சுழன்றுகொண்டு  இருக்கிறது.இதை  ஆசையின் அல்லது தேவையின் அளவு  தீர்மானிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஏன் இது இங்கே சொல்லப்படுகின்றது என்பது போகப்போக புலப்படக்கூடியதாக இருக்குமென நாம் நம்புகின்றோம். இந்த உலகத்தின் தளம்பல் போக்கை ஆராய்வதட்குதான் நாம் முயற்சிக்கின்றோம் 

Tuesday, July 10, 2012

விண்டோஸ் 7ஐ பூட்டபிள் USB மூலம் கணணியில் நிறுவுவதற்கு


விண்டோஸ் 7 இயங்குதளத்தை சிடி இலிருந்து நிறுவும் போது ஏதாவது ஒரு காரணத்தினால், அவை தடைப்பட்டு பாதியில் நின்று விடும். இதை தவிர்க்க மாற்று வழியாக பூட்டபிள் பென் டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ கணணியில் நிறுவிக் கொள்ளலாம்.இவற்றிற்கு தேவையானது குறைந்தது 4 GB அளவுடனான யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டோலேஷன் டிவிடி.

உங்கள் கணணியில் இரகசிய தகவல்களை பாதுகாக்க இலகுவழி


கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்சினை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம்தான். இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.

Sunday, July 8, 2012

9 திகதி ஏய் வைரஸிலிருந்து கணணி பாதுகாக்கும் முன்னெச்சரிக்கைகள்

ஏய் வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணிணியை செயல் இழக்கச்செய்து விடும் என்ற தகவல் பயணாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. 
இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கணணியில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9 ம்திகதி பெரும் பாதிப்பை தரும் என்கின்றனர் கணணி வல்லுநர்கள்.

Thursday, July 5, 2012

2012 மே இல் தான் உலக வரலாற்றில் அதி கூடிய வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டுள்ளது


இந்த வருடத்தின் மே மாதம் தான் உலக வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவாகிய மாதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இந்த மே மாதம் தான் அதிக சூடாக இருந்ததாம்.1880 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக வெப்பம் இந்த வருட மே யில் தான் பதிவாகியுள்ளது.இதனை அமெரிக்காவின் (NCDC) தேசிய காலநிலை தரவு மையம் (National Climatic Data Centre) உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது.

Wednesday, July 4, 2012

கடவுளின் அணுத் துகள் “ஹிக்ஸ் போஸான்” கண்டுபிடிப்பு: 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளது

கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.

Tuesday, July 3, 2012

கணணி தொழினுட்பத்தின் எதிர்காலம்!

அடுத்த 10 ஆண்டுகளில் கணணியில் என்ன என்ன மாற்றங்கள் வரும் என்பதை கணித்து நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.அதிக இடத்தை எடுத்துக் கொண்டு மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கணணியின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கணணிகள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

குரோமின் வளர்ச்சிப்படியைக் காட்டும் கூகுளின் சுவாரஸ்ய காணொளி -தொழினுட்பத்தின் தெளிவு வீடியோ

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பொக்ஸ் உலாவிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் கூகுளும் குரோமினை அறிமுகப்படுத்தியது.
கூகுள் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குரோமினை வெளியிட்டது. 
குரோமின் எளிய தோற்றமும் செயல்படும் வேகமும் சிறப்பாக இருப்பதனால் நான்கே வருடங்களில் சுமார் 310 மில்லியன் பாவனையளர்களைப் பெற்று அபார வளர்ச்சி அடைந்துள்ளது. 
இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கத்தினைக் குரோம் வெகுவாக குறைத்துள்ளதுடன் பயர்பொக்ஸினையும் பின் தள்ளியது.