Friday, August 26, 2011

2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்

2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.
பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது நம்மை சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் பவுண்ட் என கணக்கிடப்பட்டுள்ளது.

Friday, August 19, 2011

மனித மூளையை ஒத்த 'சிப்'பை உருவாக்கி ஐ.பி.எம்(IBM) சாதனை

 அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.

Sunday, August 14, 2011

ஏ.சி வசதியுடன் கூடிய புதிய பைக் அறிமுகம்

ஏ.சி வசதியுடன் கூடிய பைக் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலை ரூ.34 லட்சம்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெரவ்ஸ் என்ற நிறுவனம் கேபினுடன் கூடிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹேண்ட்பார், 2 வீல்கள் ஆகியவை வழக்கமான பைக் போல. உட்கார சற்று அகலமான சீட். வண்டியை நிறுத்தி இறங்கும் போது பேலன்ஸ் தவறாமல் இருக்க சின்னப் பசங்க சைக்கிள் போல இரு புறமும் சப்போர்ட்டுக்கு 2 மினி சக்கரங்கள்.

Thursday, August 4, 2011

குண்டான உடல் இளைக்க தண்ணீரே மருந்து!

குண்டான உடல் இளைப்பதற்கு பலரும் பல வழிகளை கையாளுகிறார்கள். நீங்கள்கடைப்பிடிப்பதற்கு எளிதான வழி, சாப்பாட்டுக்கு முன்பு ஒரு அரை லீற்றர் தண்ணீர் குடியுங்கள் போதும், உங்கள் உடல் எடை குறைந்து விடும் என்று புதிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ராட்சஸ டீசல் எஞ்சின்-பின்லாந்து

ஒரு லட்சம் குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய ராட்சஸ டீசல் எஞ்சினை பின்லாந்து நிறுவனம் தயாரித்துள்ளது.
90 அடி நீளம், 44 அடி உயரம் (அப்பார்மென்ட் வீடு சைஸ்) கொண்ட இந்த எஞ்சின் சரக்கு கப்பலில் பொருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.