Saturday, April 30, 2011

கடைசி பயணமாக இன்று விண்ணுக்கு புறப்படுகிறது எண்டவர்

அமெரிக்க விண்வெளி மையம் நாசாவின் விண்கலங்கள் எல்லாம் இந்த ஆண்டு ஓய்வு பெறுகின்றன. டிஸ்கவரி விண்கலம் சமீபத்தில் தனது கடைசி பயணத்தை முடித்து பூமி திரும்பியது.

Friday, April 29, 2011

பார்வை இழப்பைத் தடுக்க இனி ஒரு ஊசி மட்டும் போதும்

பார்வை இழப்பைத் தடுக்க இனி ஒரெ ஒரு ஊசி போதும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஊசி மூலம் ஸ்டிராய்டை கண்களுக்குப் பின்னால் இடம்பெற செய்து விட்டால் பார்வையிழப்பை எற்படுத்தக்கூடிய கண்நரம்பு அடைப்பை அது கட்டுப்படுத்தும்.

Thursday, April 28, 2011

சோனி பிளே ஸ்டேஷன் (Sony PlayStation Hacked) கக் பண்ணபட்டுள்ளது

PlaStation Hacked
சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷனில் உள்ள பயனர் கணக்குகள் திருடப்பட்டுள்ளது . இதில் 77 மில்லியன் பயனர் கடன் அட்டை தகவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது . தற்போது அந் நிறுவனம் தனது முகப்பில் பின்வருமாறு தெரிவிக்கின்றது Thank you for your patience while we work to resolve the current outage of PlayStation Network & Qriocity services
இது அணுக்கசிவு தொடர்பான பிரச்சினைக்கு பிறகு ஜப்பான் எதிர்கொள்ளும் மற்றுமொரு சவாலாகும்.

அண்டங்கள் எவ்வாறு உருவாயின? பெருவெடிப்பு காரணமாக இருக்கலாம்

அமாவாசை இரவில் நாம் விண்ணைத் துருவிப் பார்த்தோமானால், நம் கண்களுக்குச் சில இடங்களில் வெண்மையான பால் போன்ற வெளிச்சத்திட்டுக்கள் தென்படும். இவற்றுக்கு அண்டங்கள் என்று பெயர். விண்ணில் உள்ள இதுபோன்ற ஓர் இடத்தைத் தனது தொலை நோக்கியால் துருவிப் பார்த்துத்தான் முதன் முதலில் இத்தாலிய வானவியலார் கலிலீயோ (Galileo, 15641642) அண்டத்தைக் கண்டடறிந்தார் .

Wednesday, April 27, 2011

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்

இயற்கையின் படைப்புகள் அனைத்தும் வியக்கத் தக்கவை.  உயிரினங்களில் ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை உள்ள அனைத்து படைப்புகளிலும் பல அற்புதங்கள் புதைந்துள்ளன. இதில் மனித உடலானது ஒரு மாபெரும் படைப்பாகும்.

Tuesday, April 26, 2011

கோப்பி அருந்துவதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்

கோப்பி அருந்துவதால்  உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என புதிய விஞ்ஞான ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .The American Journal of Clinical Nutrition எனும்அமைப்பினால்  170,000மக்களிடம்மேட்கோள்ளப்பட்ட ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, April 25, 2011

மாதுளம் பழம்

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்!

நவீனமயமாகி விட்ட மருத்துவ உலகில் மூளை, இதயம் மற்றும் முதுகு தண்டுவடம் உள்ளிட்ட
பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஒரு சில சிக்கலான அறுவை சிகிச்சைகள் இன்றளவும்
சவாலாகவே உள்ளன. ஆனால், திபெத் மருத்துவர்கள் இந்திய மருத்துவர் கண்காணிப்பில்
சுமார் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்
என்பது ஆச்சரியமான விஷயம்தான். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து
மிகப்பழமையான த்ரிபித்தகா என்ற என்சைக்ளோபீடியாவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதன் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

Saturday, April 23, 2011

கடலில் 10 ஆயிரம் மைல்கள் நேர்கோட்டு வழியில் பயணிக்கும் திமிங்கிலங்கள்

ஹம்ப்பெக் எனப்படும் திமிங்கில வகைகள் கடலில் இடம்பெயர்வதற்காக சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை வழி தவறாமல் நேர்கோட்டு வழியில் பயணிக்கின்றன. அதற்குக் காரணம் அவை சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளைப் பின்பற்றுவதே என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Friday, April 22, 2011

அழிவின் விளிம்பில் பவள பாறை

ஒரு நாட்டின் கடல் வளம் பவளப் பாறைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. வேர்ல்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிட்யூட் (டபிள்யூ.ஆர்.ஐ), அமெரிக்காவில் உள்ள நேஷனல் ஓஷியானிக் அண்ட் அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்ட்ரேஷன், உலக மீன்நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப்பாறைகள் குறித்த மெகா ஆய்வை நடத்தின. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்:

Wednesday, April 20, 2011

கண்கள் குளிர்ச்சி பெறும் முருங்கைப் பூ

முருங்கைப் பூ
பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம், காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

Tuesday, April 19, 2011

காற்றில் இயங்கும் காரை கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை இந்தியாவில் உள்ள தமிழக கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வு, அதிக விலை, சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த காரை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு இரைச்சலை பதிவு செய்த விஞ்ஞானிகள் (காணொளி இணைப்பு)

ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந்தன.

Monday, April 18, 2011

பொல்லேன் அல்லேர்ச்சி (Pollen Allergy) - Videos

தாவரங்களின் இனபெருக்க காலத்தில் வெளியேறும் மகரந்தங்களினால் ஏற்படும்
ஒரு நோயாகும்.
இது கோடை, இலையுதிர் மற்றும் மழை காலங்களின் மனிதனுக்கு தாக்கத்தை உண்டுபண்ணும் ஒரு சாதாரண அல்லேர்சி  இந்தக் காலங்களில் வெளியேறும் மகரந்தங்கள் காற்றில் பரவுகின்றது.

Friday, April 15, 2011

விண்மீன்களின் ஆயுள்

விண்மீன்களின் ஆயுள், அவற்றின் நிறை வெப்ப ஆற்றல் இவற்றுடன் தொடர்புடையது. விண்மீன்கள் அவற்றுள் ஏற்படும் நிறை ஈர்ப்பை ஈடுகட்ட அதிகமான ஆற்றலைச் செலவிட்டுக் குறிப்பிட்ட வெப்பநிலையைக் காக்க வேண்டியுள்ளது. இவ்வாறு உயர் உள் வெப்பநிலையைக் காக்க ஹைட்ரசன் அணு கருப்பிணைவு அதிகமாகவும் துரிதமாகவும் நடைபெறும்.

வியக்கவைக்கும் கடல் வாழ் உயிரினங்கள் (பட இணைப்பு)

கடலுக்கடியில் நாம் இதுவரை காணாத பல அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

டையனோசர்கள் இரவு நேரத்திலேயே வேட்டையாடும்: புதிய ஆய்வில் தகவல்

யானையை விட பல மடங்கு பிரம்மாண்ட உருவம் கொண்ட டையனோசர் மிருகங்கள் பகல் நேரத்திலேயே தங்கள் உணவை தேடி வந்ததாக ஆய்வாளர்கள் கருதினர்.

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலைகள் தயாரிப்பு (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப கல்வியகத்தின் பேராசியரான முனைவர் தானியேல் நோசேரா தலைமையிலான குழு உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர்.

Wednesday, April 13, 2011

தானியங்கி விண்கலம்

 இன்று உலகின் முன்னணி நாடுகள் பலவும் விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. ஆனால் அந்த விண்கலங்களில் ஏதேனும் பிரச்சினை, கோளாறு ஏற்பட்டால் அவற்றைச் சரிசெய்ய மனிதர்களைப் போல `சிந்தித்து'ச் செயல்படும் விண்கலத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகிறார்கள்.

மாம்பழத்தின் மகிமை

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள்.

இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது.

Tuesday, April 12, 2011

1947ல் பூமிக்கு வந்த வேற்றுகிரக வாசிகள் (Video இணைப்பு)

1947 இல் ஆம் ஆண்டு பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகளின் புகைப்படத்தை FBI தற்போது வெளியிட்டுள்ளது.
1000ற்கும் மேற்பட்ட தனது பழைய கோப்புக்களை ஓன்லைனில் நேரடியாக பதிவு செய்யும் நடவடிக்கையின் போதே FBI இத்தகவலை வெளியிட்டுள்ளது.

ரத்த செல்களை இதய செல்களாக மாற்றும் முறையை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை

ரத்த செல்களை துடிக்கும் இதய செல்களாக மாற்றும் புதிய முறையை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த புதிய முறை வைரஸ் இல்லாத புதிய பிரபஞ்ச முறையாக அறியப்படுகிறது.

லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் சோதனையில் அமெரிக்கா - Video

லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் சோதனையில் அமெரிக்கா கடந்த 1970ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்க, இலக்கை தாக்குவதற்கு மட்டுமே இதுவரை லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது முதல் முறையாக எதிரிகளின் படகுகளை செயல் இழக்கச் செய்யும், லேசர் பீரங்கியை அமெரிக்கா சோதனை செய்துள்ளது.

Monday, April 11, 2011

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை (காணொளி இணைப்பு)

ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு ஒரு மாதம் முடியுறும் தறுவாயில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் 7.1 என்ற ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 3 அடி அளவில் சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Sunday, April 10, 2011

உலகின் முதன் முதலில் மனித ஆணின் உடலுக்கு வெளியில் ஆண் உயிரணுக்களை உருவாக்கம்.

மனித ஆணின் உடலுக்கு வெளியில், In vitro fertilisation (IVF) முறையில் உருவான முளையம் (Embryo) ஒன்றில் இருந்து பெறப்பட்ட மூலவுயிர்க்கலங்களைப் பயன்படுத்தி ஆண் உயிரணுக்களை முழுக்க முழுக்க ஆய்வுசாலையில் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் உயிரியற்துறை விஞ்ஞானிகள்.

மூக்கின் வழியே இரத்தப்போக்கு

மூக்கின் வழியே இரத்தப்போக்கு எற்படுவது குழந்தை பருவத்தில் மிகவும் பொதுவான நிகழ்ச்சி. பெரும்பாலான இந்த வகை இரத்தபோக்கு, மிதமாக இருப்பதனால் சிறிது நேரத்தில் தானாகவே நின்று விடுகிறது.

இணையதள வசதியுடன் கூடிய கார்கள் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

டொயோட்டா கார் நிறுவனமானது மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது வாகன உற்பத்திகளில் இணையத்தள வசதியை இணைக்கவுள்ளது.

உங்களது கோப்புகளை ஓன்லைனில் சேமித்து வைக்க

முக்கியமான கோப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்க இமெயிலில் சேமித்து வைத்திருப்போம்.
ஆனால் Size அதிகமான கோப்புகளை ஓன்லைன் மூலம் எளிதாக பாதுகாப்பாக சேமித்து வைத்து உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் தரவிறக்கலாம்.

அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்

இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மொனிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும்.

இணைய இணைப்பு இல்லாத போது ஜிமெயிலில் ரெடிமேட் தகவலை அனுப்ப

நாம் எப்போதும் இணைய இணைப்பிலேயே இருப்போம் என சொல்ல முடியாது. அவசர வேலையாக வெளியில் செல்ல நேரிடலாம். இரண்டு நாள் அல்லது அதற்கு மேலும் வெளியூர் செல்ல நேரிடலாம்.

Friday, April 8, 2011

2012 ஆம் ஆண்டளவில் மிகப்பிரலமான இயக்குதளமாகுமா அண்ட்ரோயிட்?

கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளமானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டளவில் உலகின்
மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி
நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.

நவீன உலகில் புரட்சி - எண்ணங்களால் கட்டுப்படுத்தக்கூடிய கணனி _


Mind & Computer
மனித எண்ணங்களினால் கட்டுப்படுத்தக்கூடிய கணனியை கண்டுபிடித்துள்ளதாக வொஷிங்டன்
பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

Wednesday, April 6, 2011

விண்மீன்களின் தோற்றம்

விண்மீன்கள், வெப்பத்தையும், ஒளியையும் உமிழும் வாயு வினாலான வெப்பக் கோள்களாகும். விண்மீன்கள் பல்வேறு அளவுகளில், வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு வெப்ப நிலையில் இருக்கின்றன. இதைப் பொறுத்து அவற்றின் ஒளிச் செறிவு மற்றும் நமது பூமியிலிருந்து அவை இருக்கும் தொலைவு ஆகியன மாறுபடுகின்றன. நமது சூரியனும் ஒரு நடுத்தர அளவுடைய விண்மீன்தான். நமது பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் சூரியனாகையால், அது அளவில் பெரியதாகத் தென்படுகின்றது.

இலங்கையர்களுக்கு சனிக்கிரகத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் வாய்ப்பு

சனி கிரகம்
இலங்கையர்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சனிக்கிரகத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் வாய்ப்பேற்படவுள்ளது என்று இலங்கை வானியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் சனிக்கிரகத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் நிலை உச்சத்தை அடையலாம் என்று இலங்கை வானியலாளர்கள் சங்கத்தின் தலைவர் காவன் ரணசிங்க தெரிவிக்கின்றார்.

அமெரிக்காவில் 300 மில்லியன் பழைமையான பூச்சியின் சுவடுகள்


இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பழமையானதாகக் கருதப்படும் சுமார் 300
மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்த பூச்சியொன்றின் சுவடுகளை அமெரிக்க விஞ்ஞானிகள்
கண்டு பிடித்துள்ளனர்.

Sunday, April 3, 2011

குவாசர்கள்

இதுவரை நமது அறிவியல் வளர்ச்சியினால் உருவாக்கப்பட்டுள்ள கருவிகளாலும் ஆராய்ச்சிகளாலும் நமது கண்ணுக்கும், நமது கருவிகளின் புலனுக்கும் தெரியக்கூடிய எல்லை வரையில் பல விந்தைப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 1963 இல் கண்டுபிடிக்கப்பட்ட குவாசர்கள் (Quasars) புதிரானவை. குவாசர் என்பது ஒரு கூட்டுச் சொல் ஆகும். குவாசர்கள் தோற்றத்தில் ஒரு விண்மீனைப் போன்றே காட்சியளிக்கின்றன. இந்த குவாசர்கள் பல கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ளன. இக்குவாசர்கள் பல்வேறு அளவுகளில் மிகுதியாக ஒளியை உமிழ்கின்றன.

Saturday, April 2, 2011

FESTO நிறுவனம் தயாரித்துள்ள இயந்திர பறவை - வீடியோ இணைப்பு

இயந்திர பறவை
தொழில்நுட்பத்தின் அபாரவளர்ச்சியின் பயன்பாடாக விஞ்ஞானிகள் இன்று புதுமையான பல
கண்டுபிடிப்புக்களை எம் கண்முன்னால் காட்டி எம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றனர்.
இயற்கையின் படைப்புக்களுக்கு சவால் விடும் வகையில் இயற்கைக்கு இணையான பல்வேறு
கண்டுபிடிப்புக்களை நாம் காணமுடிகிறது.

 

வேற்று கிரக வாசிகள் பற்றிய அபூர்வ தகவல்கள்

வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல்
அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது. இதனை நம்புவோரின் எண்ணிக்கை தற்போது
பரவலாக அதிகரித்து வருகிறது.


Friday, April 1, 2011

புதன் போட்டோவை அனுப்பியது ‘மெசஞ்சர்’- Video

மெசஞ்சர்
6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை சமீபத்தில் சென்றடைந்திருக்கும் ‘மெசஞ்சர்’ விண்கலம் முதல் போட்டோவை பூமிக்கு அனுப்பியிருக்கிறது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன். இது பற்றிய ஆராய்ச்சிக்காக 2004&ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ‘மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கேப் கேனவராலில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து டெல்டா&2 ராக்கெட்டில் வைத்து மெசஞ்சர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

எகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு! (பட இணைப்பு)

எச்சங்கள்
எகிப்தில் உள்ள சக்காரா பாலைவனப்பகுதியில் பழங்காலத்தில் பதனிடப்பட்ட (mummified)
நாய்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.