Saturday, March 5, 2011

மின்னஞ்சல்களை படித்து சொல்லும் புதிய கார்

நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
கற்பனையில் நினைப்பவற்றை இன்று நிஜத்திற்கு மாற்றித் தந்து கொண்டிருக்கிறது இன்றைய
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்.



அந்த வரிசையில் நாம் எதிர்பார்க்காத புதிய ஒரு விடயம் தான் நடந்தேறியுள்ளது.
அதாவது நமக்கு வருகின்ற மின்னஞ்சல் மற்றும் Facebook and Twitter updates களை
உடனுக்குடன் படித்து வாய்ஸ் மூலம் வாகன சாரதிக்கு சொல்லி விடுகின்றது ஒரு கார்.

 
இது எவ்வாறு சாத்தியப்படுகின்றது என்றால் குறித்த காரில் பயணிக்கும் முன் அதில்
தயார் செய்யப்பட்டுள்ள சார்ஜரில் தனது smart phones அல்லது iPads ஐ தொடுத்து விட 
வேண்டும். பின்னர் நாம் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது நமது பேஸ்புக் அல்லது
டிவிட்டரில் புதிதாக தகவல்கள் பரிமாறப்பட்டால், அந்த கார் வாய்ஸ் மூலம்
பரிமாற்றப்பட்ட தகவலை படித்து சொல்கின்றது.

 
அதைப் போலவே மின்னஞ்சல் வருகின்ற போதும் அவற்றை அப்படியே படித்து சொல்லி
விடுகின்றது. இக்கார் “இணையத்தளக்கார்” என அழைக்கப்படுகிறது. அண்மையில் ஜெனீபாவில்
நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் இந்த இலத்திரனியல் இணையக்கார்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

 
ஏராளமானவர்கள் இத்தொழில்நுட்பத்தை பாராட்டிச் சென்றுள்ளனர். இது மாத்திரமின்றி
இக்காருக்குள் Wi-Fi transmitter தொழில்நுட்பமும் காணப்படுகின்றமையால்
லாப்டெப்பையும் இலகுவாக பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.