நில நடுக்கம் |
ஜப்பானில் நேற்று இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக அதன் பிரதான தீவு தனது
அச்சில் இருந்து எட்டு அடி(2.4 மீற்றர்கள்) நகர்ந்துள்ளது.
இதை அமெரிக்காவின் பூகற்பவியல் நிபுணர் கென்னத் ஹுட்னட் தெரிவித்துள்ளார். அதே அச்சில் இருந்து எட்டு அடி(2.4 மீற்றர்கள்) நகர்ந்துள்ளது.
நேரம் இத்தாலிய பூகற்பவியல் மற்றும் எரிமலைகள் தொடர்பான ஆய்வு மையத்தின் தகவல்களின்
பிரகாரம் நேற்றைய நிலநடுக்கம் காரணமாக பூமி அதன் அச்சிலிருந்து பத்து
சென்டிமீட்டர்கள்(நான்கு அங்குலம்) நகர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.
பசுபிக் சமுத்திரத்தின் கீழுள்ள புவித்தட்டில் 400 கிலோ மீற்றர் நீளமும், 160
கிலோ மீற்றர் அகலமும் கொண்ட பூமிப்பரப்பில் பிளவுண்டாகி புவித்தட்டு நகர்ந்த
காரணத்தாலேயே நேற்றைய நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பேரலை என்பன நிகழ்ந்துள்ளன.
அதன் காரணமாக பசுபிக் கடல் பகுதிக்கு கீழான புவித்தட்டு பதினெட்டு மீற்றர்கள்
நகர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஜப்பானில் நேற்று இடம் பெற்ற சுனாமித் தாக்கமானது கடந்த 2004 ம் ஆண்டின்
சுனாமியுடன் ஒத்ததாக இருந்ததுடன், கடந்த 140 வருடங்களில் அங்கு ஏற்பட்ட மோசமான
நிலநடுக்கமாக நேற்றைய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.