Sunday, March 16, 2014

தொடரும் மாயம்: விமானம் திட்டமிடப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளது, அனுபவமிக்க விமானிகளால் கடத்தப்பட்டிருக்கலாம், விமானத்திலிருந்து இன்னும் சேட்டிலைட் சிக்னல் வருகிறது

காணாமல் போன மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம், ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் பெய்ஜிங் நோக்கி கடந்த 7ஆம் திகதி சென்ற மலேசிய விமானம் நடுவானில் மாயமானது.
 
இதுநாள் வரையிலும் விமானம் குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் விசாரணை நடத்திய மலேசிய அரசு, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
 

Sunday, March 9, 2014

பாத வெடிப்பு குணமாக மருத்துவ குறிப்புகள்

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.

கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.

அதை போக்க சில எளிய வழிகள் இதோ:

மருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும் பின்பு தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

பாதம் தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பும் எலும்பிச்சை சாறும் சேர்த்து அதில் பாதத்தை வைத்திருந்து பின்பு சொரசொரப்பான பொருட்களால் தேய்த்து வந்தால் கெட்ட செல்கள் உதிரும். 

கிரிக்கெட்: ஆசியக் கோப்பையை வென்றது இலங்கை

மீர்பூரில் சனியன்று நடந்த பந்தயத்தின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியுள்ளது.பாகிஸ்தான் அணியில் மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய ஃபவாத் ஆலம் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.முதலில் மட்டைபிடித்த பாகிஸ்தான் அணியை இலங்கை அணியினர் 260 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தனர்.

எச்.ஐ.வி. தொற்றிலிருந்து இரண்டாவது குழந்தை விடுதலை

எயிட்ஸ் நோயை ஏற்படுத்தக்கூடிய எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் பிறந்த இரண்டாவது குழந்தையொன்றை குணப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 


கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்த  மேற்படி குழந்தைக்கு பிறந்து 4 மணித்தியாலங்களில்  எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன. 

தொப்பையை குறைக்கும் சரியான வழிமுறைகள்

தொப்பையுடன் திரிபவர்களுக்குப் பஞ்சமே இல்லை. சிலர், அதைச் செல்வச் செழுமையின் அடையாளமாகக் கூட நினைக்கின்றனர். ஆனால், அது ஆரோக்கியமான மனோபாவம் இல்லை. இன்னும் சிலர், உணவுகளுக்கு அடிமையாகி, வரையறை இல்லாமல், ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் உண்கிறார்கள். இவர்களால் உணவுக் கட்டுப்பாடு என்ற ஒன்றை நினைத்துப் பார்க்கவும் முடியாது.

இத்தகையோர்களுக்காகவே அக்குபஞ்சர் ஒரு சிறந்த நிவாரணத்தை தர முனவருகிறது. அது என்னவென்று தற்போது பார்ப்போம்.