Tuesday, June 28, 2011

சனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி ; விஞ்ஞானிகள் தகவல்!

 கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியிலிருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர்.

Thursday, June 23, 2011

4,800 கி.மீ. வேகத்தில் பறக்கும் ஹைப்பர்சானிக் விமானம் தயார்

அதிபயங்கர வேகத்தில் பறக்கும் விமானத்தை ஏர்பஸ் குழுமம் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ராம்ஜெட் இன்ஜின்கள் இதில் பொருத்தப்படுகின்றன.

ஹாலந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் யூரோப்பியன் ஏரோநாட்டிக் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் கம்பெனி (இஏடிஎஸ்). ஏர்பஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பு. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு மாடல்களில் விமானங்களை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துவரும் சர்வதேச விமான கண்காட்சியில் ஹைலைட்டாக இடம் பிடித்திருப்பது இஏடிஎஸ் நிறுவனத்தின் தயாரி
 ப்பான ‘மேக்4’ எனப்படும் ஹைப்பர்சானிக் விமானம்.

Tuesday, June 21, 2011

மனிதக் கழிவிலிருந்து உணவுப் பண்டம்: ஜப்பானிய விஞ்ஞானி தயாரிப்பு (காணொளி இணைப்பு)

மனிதக் கழிவிலிருந்து 'பேர்கர் பன்' எனப்படும் உணவுப் பண்டத்திற்கான செயற்கை இறைச்சியினைத் தயாரித்து ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஜப்பானின் ஒகயாமாவில் அமைந்துள்ள சூழல் ஆராய்ச்சி நிலையத்தினைச் சேர்ந்த மிட்சுயுகி இகேடா என்ற விஞ்ஞானியே இச்சுவை மிகு உணவினை தயாரித்துள்ளார்.

விண்வெளியை சுத்தப்படுத்தும் செயற்கைகோள்

உலகின் 50ற்கும் மேற்பட்ட நாடுகள் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. 6000ற்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன. தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் இந்த செயற்கைக் கோள்கள் செயல் இழந்து குப்பையாகி விடுகின்றன. சில செயற்கைகோள்கள் உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகின்றன. இவை விண்வெளி குப்பைகள் ஆக சுற்றி வருகின்றன.

Tuesday, June 14, 2011

மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க புது கருவி கண்டுபிடிப்பு இந்திய நிபுணர்கள் சாதனை

பெண்களுக்கு மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க அதிநவீன கருவியை, ரஷ்ய குழுவுடன் இணைந்து இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். துல்லியமாக கண்டறிவதுடன், எந்த பாதிப்பும் ஏற்படாது; கட்டணம் வெறும் 150 ரூபாய் தான் ஆகும்.
அலகாபாத் நகரில் உள்ள இந்திய இன்ஸ்ட்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியை சேர்ந்த நிபுணர்கள், ரஷ்யாவின் ரேடியோ இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வில் இறங்கினர்.

Thursday, June 9, 2011

விண்வெளியில் விவசாய பண்ணை!

சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாய பண்ணை அமைப்பதில் ஜப்பான் விஞ்ஞானி தீவிரமாக உள்ளார். அமெரிக்கா, ரஷ்யா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நடுவானில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்து வருகின்றன. சோயுஷ் விண்கலம் மூலம் சென்று அங்கு ஆய்வகம் (பரிசோதனை கூடம்) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் அங்கு விவசாய பண்ணை அமைத்து அதில் காய்கறிகளை பயிரிட திட்ட மிட்டுள்ளன.

Wednesday, June 8, 2011

எய்ட்ஸ் பற்றி தெரியவந்து முப்பதாண்டுகள்

நாம் எல்லோரும் இன்று நன்றாக அறிந்துள்ள எய்ட்ஸ் நோய் பற்றி முதல் முதலாக தகவல் வெளியாகி இன்றோடு முப்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.

எலுமிச்சை - அற்புதமான இயற்கையின் படைப்பு

உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது.
உலக மக்களால் விரும்பி அருந்தப்படும் பானங்களும் இக்கனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது .

Thursday, June 2, 2011

எண்ணங்கள், சொற்கள் மூளையில் எங்கிருந்து உருவாகின்றன-புதிய ஆய்வுத்தகவல்-

மனித மூளையில் சொற்களின் வடிவங்களுக்கான வழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மோசமான அங்கவீனம் காரணமாகப் பேச முடியாமல் இருப்பவர்களுக்கு என்றாவது ஒரு நாள் இது உதவக் கூடிய வகையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.

Wednesday, June 1, 2011

செல்போனில் இருந்து பரவும் கதிர்வீச்சால் மூளையில் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து -ஆராய்ச்சி தகவல்(Videos)

 செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோய் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.