Wednesday, November 30, 2011

இணையத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் தளங்கள்!

இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது பேஸ்புக் என்றே இருக்கும்.
[ நீங்களும் இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமா - http://www.onlineworkformoney.co.nr/  ]எனினும் உண்மை அதுவல்ல. இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் அமேசன்.கொம் ஆகும்.

சுயாதீன நிறுவனமொன்று நடத்திய ஆய்வொன்றிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

அந்நிறுவனத்தின் ஆய்வுப்படி அதிகம் பணமீட்டும் நிறுவனங்கள் பட்டியல் இதோ :

1. Amazon

இணையத்தில் பொருட்களை வாங்க உதவும் தளம் இது. பொருட்களை வாங்குவதற்கான ஒன்லைன் சந்தையாக விளங்கும் இது, விநாடிக்கு $776.66 படி. இதன் மொத்த வருடாந்த வருவாய் $24,509,000,000 ஆகும்.

2. Google

இணைய உலகில் கூகுள் தொடர்பில் அறியாதவர் எவருமிலர் எனலாம். இதன் வருட வருமானம் $23,650,560,000. ஒரு வினாடிக்கு $749.46 ஆகும்.

3. Comcast

அதிகம் சம்பாதிக்கும் பட்டியலில் இந்த தளம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தத் தளத்தின் ஆண்டு வருமானம் $8,727,360,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு 276.56$ சம்பாதிக்கிறது.

4. ebay

Amazon தளத்தை போன்று இதுவும் ஒன்லைனில் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் உதவும் இணையதளம். வினாடிக்கு 276.56$ ஐயும் ஆண்டுக்கு $8,727,360,000 ஐயும் இது சம்பாதிக்கின்றது.

5. Yahoo

இணையத்தில் மிகப்பிரபலமான தளம் இது. இதனுடைய ஆண்டு வருமானம் $6,460,000,000 ஆகும். சராசரியாக ஒரு வினாடிக்கு $204.71 ஆகும்.

6.Reuters

செய்தித்தளமான இது வினாடிக்கு 107$ வருமானமும் ஆண்டுக்கு $ 3,400,000,000 வருமானமும் பெற்றுக்கொள்கின்றது.

7. AOL

இந்தத் தளம் வினாடிக்கு 99.41$ம், ஆண்டுக்கு $3,137,100,000ம் வருமானமாகப் பெற்றுக்கொள்கின்றது.

8. Expedia

பயணம் செய்பவர்களுக்கு இது பயனுள்ள தளமாகும். டிக்கெட்டுகள் வாங்குவதில் இருந்து விமானங்களின் நேரங்கள் மற்றும் பல தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தத் தளம் வருடத்திற்கு $2,937,010,000 வருமானம் பெற்றுத் தருகிறது. இதன் ஒரு வினாடிக்கான வருமானம் $93.07 ஆகும்.

9. Paypal

ஒன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த தளம் பற்றி தெரிந்திருக்கும். உலகம் முழுவதும் பணப் பரிமாற்றம் செய்ய மிகப் பிரபலமான பயனுள்ள இணைய தளம் இது. இந்தத் தளம் வினாடிக்கு 91.90$ படி ஆண்டுக்கு $2,900,000,000 சம்பாதிக்கிறது.

10. iTunes

பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பது அப்பிள் நிறுவனத்தின் iTunes இணைய தளமாகும். இந்தத் தளத்தின் ஒரு வினாடிக்கான வருமானம் 60.21$. ஆண்டுக்கு $1,900,000,000 வருமானம் இந்த தளம் மூலம் பெற்றுக் கொள்கின்றது அப்பிள்.

பலரது விருப்பத்திற்குரிய பேஸ்புக், இப்பட்டியலில் பெற்றுக் கொண்டுள்ள இடம் 16. இதன் ஆண்டு வருமானம் $1,000,000,000 .வினாடிக்கு $31.69.