Monday, November 28, 2011

'Jew Or Not Jew' ?புதிய சர்ச்சையில் யூதர்கள் - அப்பிளின் மென்பொருள்

அப்பிளின் புதிய மென்பொருள் படுத்தும் பாடு யூதர்களை காயப்படுத்தியதாக சொல்லப்படுகின்றது   மென்பொருள்  துறை என்பது பல பில்லியன்கள் புரளும் தொழிற்துறையாக மாறிவிட்டது.


இதற்கு சிறந்த உதாரணங்களாக அண்ட்ரோய் மார்க்கட் மற்றும் அப்பிளின் அப் ஸ்ட்ரோர் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

எனினும் சில அப்ளிகேஷன்கள் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகிய வண்ணமே உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனது மகன் ஓரினச் சேர்க்கையாளனா ? ("Is My Son Gay?" ) என்ற அப்ளிகேசன் அண்ட்ரோய்ட் சந்தையில் வெளியாகி பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.



இந்நிலையில் தற்போது அப்பிளின் அப்ஸ்டோரில் சர்ச்சைக்குரிய அப்ளிகேஷன் விற்பனைக்கு வந்துள்ளது.

அவ் அப்ளிகேஷனின் பெயர் யூதரா ? யூதர் இல்லையா? ('Jew Or Not Jew' ) என்பதாகும்.

இதில் பிரபலங்கள் மற்றும் முக்கிய சிலரின் தரவுகளை வைத்து அவர்கள் யூதர்களா என பாவனையாளர்கள் தீர்மானித்துக்கொள்ளும் படி இவ் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டிருந்தது.

இவ் அப்ளிகேஷனானது யூதர்களைக் காயப்படுத்துவதாக உள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் வழக்கும் தொடுத்துள்ளன.

பிரான்ஸிலே இதற்கான வழக்கு முதலில் தொடுக்கப்பட்டது.

எனினும் குறித்த அப்ளிகேஷனை பிரான்ஸ் நாட்டிற்கான அப் ஸ்டோரில் இருந்து அப்பிள் அகற்றியதை அடுத்து இச்சர்ச்சை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து அப்பிளுக்கெதிரான வழக்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் அமெரிக்க அப் ஸ்ட்ரோரில் இவ் அப்ளிகேஷன் இன்னும் விற்பனைக்கு உள்ளாதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.