Thursday, November 24, 2011

ஈழத்து இசையின் புதிய பரிணாமம் - வவுனியாவில் இருந்து வானமெல்லாம் பரவும் இசை.(வீடியோ இணைப்பு

இலங்கையை சேர்ந்த இரு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் தென்னித்திய இசைக்கு நிகரான புதிய பாடல் இணையத்தளங்களின் இப்பொழுது மிகவும் பிரபல்யம் ஆகியிருக்கு இந்தபாடலை வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் இசை இளவரசன்
கந்தப்புஜெயந்தன் இசையமைத்துள்ளார் பாடலை எழுதியிருப்பவர் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் அவர்கள் பாடலை பாடியிருப்பவர்
கந்தப்பு ஜெயந்தன் அவருடன் இணைந்து அவரது சகோதரி ஜெயபிரதா.கந்தப்பு ஜெயந்தன் அவர்களும் பாடலாசிரியர் அஸ்மின் அவர்களும் உருவாக்கிய எங்கோ பிறந்தவளே பாடலும் பல ரசிகர்களின் மனதை ஏற்கனவே கொள்ளை கொண்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
வசதிகள் குறைந்த இடத்தில் இருந்துகொண்டு இப்படி பல இசை தொகுப்புக்களை வெளியிட்டு வரும் இவர்களை லங்காஸ்ரீ இணையத்தளமும் வாழ்த்துகிறது.தென்னித்திய திரைப்படங்களில் நிச்சயம் இவர்களுக்கு சிறந்த களம் கிடைக்கவேண்டும் ..
இவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆதரவை வழங்குவோம்.