Friday, November 25, 2011

HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook


Facebook தொலைபேசி வரப்போகின்றதென்ற வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன. ஒரு கைத்தொலைபேசி உற்பத்தியாளர்களுடன் Facebook பேச்சு நடத்துகின்றதென்றும் தெரியவருகின்றது.
ஒரு வருடத்தின் முன்னரும் இதுபோன்று Facebook  தொலைபேசி தனது முழு அம்சங்களுடனும் வெளிவரப்போகின்றதென்ற செய்தி வெளிவந்திருந்தது.
 அப்போது Facebook தம்மை அணுகி Facebook அடையாளமிடப்பட்ட தொலைபேசியை வெளியிடக் கேட்டதாக CNET உறுதிப்படுத்தியிருந்தது.
ஆனால் இவ்வருடம் Facebook பொத்தான்களுடனான கருவிகள் வெளியப்படவுள்ளன என்ற செய்தி வந்ததன் பின்னர் இந்த வதந்தி அப்படியே காணாமற்போயிருந்தது. தற்போது தனது புதிய தொலைபேசியினை உருவாக்குவதுபற்றி Facebook  மீளவும் யோசிப்பதுபோலத் தெரிகின்றது.
HTC என்ற நிறுவனத்தினர்  Facebook கதைத்துவருவதாக ஓர் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இதற்கு Buffy என்ற மறைசொல்லும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி Android இன் மேம்படுத்தப்பட்ட மாதிரியைத் தளமாகக் கொண்டிருக்குமெனக் கூறப்படுகின்றது.
முதலில் Facebook நிறுவனத்தினர் Samsung இனையே தெரிவுசெய்திருந்தனரென்றும் பின்னர் பதிலாக HTC இனைத் தேர்ந்தெடுத்திருந்ததென்றும் தெரியவருகின்றது.
HTC முன்பே Salsa மற்றும் ChaCha என்ற தமது இரு தொலைபேசிகளில் Facebook பொத்தான்களை இவ்வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தியிருந்தன. இதைவிடவும் INQ Mobile மற்றும் மோட்டரோலாவும் தமது தொலைபேசிகளில் இதனை அறிமுகப்படுத்தியிருந்தன.
எனினும் இவையெல்லாவற்றையும்விடவும் இந்தத் தொலைபேசி வித்தியாசமாக இருக்குமென்றும் வெறுமனே Facebook  மட்டும் வழங்காமல் முற்றுமுழுதாகவே தனது சமூக வலையமைப்புத் தொழிநுட்பம் அனைத்தையும் அந்தக் கருவிக்குள் ஒன்றிணைத்திருக்குமெனவும் கூறப்படுகின்றது.
எனினும் மைக்ரோசொப்ற்றின் விண்டோஸ் தொலைபேசி செயற்பாட்டுத் தொகுதியில் (Operating System) Facebook  உம் ருவிட்டரும் பதியப்பட்டுள்ளன. Facebook முன்பும் பிளக்பெரி மற்றும் பாம் நிறுவனங்களுடன் வேலைசெய்துள்ளது.
ஆனால் இவ்வாறு கைத்தொலைபேசிகளை உருவாக்குவதன்மூலம் இந்நிறுவனம் எதனைப் பெறப்போகின்றதென்பதுதான் தெரியவில்லை. ஏனெனில் இதற்கு முன்னரே இப் பாதையிலுள்ள அப்பிளின் iPhone மற்றும் கூகிளின் Android போன்றவற்றுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்ளலாம்.
எனினும் இதுபற்றிய முழுவிபரத்தினையும் Facebook  உம் வெளியிட விரும்பவில்லை. அதனோடு இணைந்து செயற்படவுள்ள HTC நிறுவனமும் சொல்லத் தயாராக இல்லை.