Tuesday, December 6, 2011

ஐ போனுக்குத் தடை!

சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி அசாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் 'ஐ போனை' அந்நாட்டு அரசு தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டின் சுங்கத் திணைக்களம், மற்றும் நிதியமைச்சின் கிளையொன்றும் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அங்கு இடம்பெறும் கலவரங்கள் தொடர்பில் மக்களிடையே செய்திகள் பரிமாற்றப்படுவதினையும் அவை வெளியுலகுக்குத் தெரிய வருவதினைத் தடுக்கும் தந்திரோபாயமாகவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலவரம் ஏற்பட்ட போது அங்கு கலவரம் பரவுவதற்கு பிளக்பெரி'யே பிரதான காரணமாக இருந்ததாகவும் அதனை கலவரங்களின் போது தடை செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.