Tuesday, November 29, 2011

ஆக்ஸிஜனுக்கு வயது 2.48 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல்

ஆக்ஸிஜனுக்கு வயது 2.48 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அவுஸ்திரேலியாவின் பில்பாரா பாறைகளில் இருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளின் துணையுடன், 2.48 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலில் உருவான ஆக்ஸிஜன் தோற்றத்தை கண்டறிந்ததாக சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று விவரிக்கிறது.

பேராசிரியர் மார்க் பார்லே தலைமையிலான குழு ஒன்று இதுதொடர்பான ஆய்வினை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த விவரம் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது.
பூமியில் முதல் முதலில் ஆக்ஸிஜன் கடந்த 2.48 பில்லியன் ஆண்டுகளுக்கும், 2.32 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுவதாக இந்தப் புவிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.