Monday, November 28, 2011

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் புத்தம் புது வசதிகள்

மைக்ரோசொப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் இல்லாத இரண்டு புதிய வசதிகளை இதன் பதிப்பு 10ல் அறிமுகப்படுத்துகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், Spell Checker and Auto Correct வசதிகளை இணைத்துள்ளது.
இது குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் இணையதள வலைமனையில் விண்டோஸ் 8
ஓபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்திலும் இன்டநெட் எக்ஸ்புளோரர் 10 உள்பட இந்த இரண்டு வசதிகளையும் தந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் Spell Checker வசதி இல்லை. பல மைக்ரோசொப்ட் வாடிக்கையாளர்கள் இதனாலேயே இந்த உலாவியை பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்திருந்தனர். எனவே தான் மைக்ரோசொப்ட் நிறுவனம் இதனைத் தன் புதிய புரோகிராம்களில் தந்துள்ளது.
Spell Checkerக்கருடன், Auto Correct வசதியும் தரப்படுகிறது. இதன் மூலம் வேர்ட் தொகுப்பில் நாம் எந்த சொற்களில் உள்ள பிழைகள் எல்லாம் தானாக திருத்தப்படுகின்றனவோ, அவை எல்லாம் இன்டர்நெட் எக்ஸ்புலோரர் பதிப்பு 10ல் தானாகவே திருத்தி அமைக்கப்படும்.
இந்த புதிய வசதிகளுடன் கூடிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எப்போது வெளியிடப்படும் என மைக்ரோசொப்ட் இன்னும் அறிவிக்கவில்லை. வெளியானவுடன் இந்த இரண்டு வசதிகளும் எத்தனை வாடிக்கையாளர்களை இழுக்கும் என நாம் காணலாம்.