Thursday, December 15, 2011

சமூக வலையமைப்புகளில் அதிக கவனத்தை ஈர்க்கும் அம்சம் எது?

நம்மில் பலர் தற்போது எதாவது ஒரு சமூகவலையமைப்பினை உபயோகித்து வருகின்றோம்.

இந்நிலையில் சமூக வலையமைப்புகளில் ஒருவரின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் அம்சங்கள் எவையென ஆய்வொன்றினை நடத்தியது.




இதனை 'ஐ ட்ரக் சொப்' எனப்படும் நிறுவனமொன்றே நடத்தியுள்ளது.

வெப் கெமராவின் மூலம் கண்களின் அசைவுகளை அவதானிப்பதன் மூலமே இவ்வாய்வு நடத்தப்படுகின்றது.



பேஸ்புக், கூகுள் +, டுவிட்டர், கிளவுட், ஸ்டம்பல் அபொன், லின்க்டின், டிக், தம்லர் போன்ற பல தளங்களைப் பாவனையாளர்களுக்குக் காட்டி அவர்களின் பார்வை எங்கே அதிகமாக ஈர்க்கப்படுகின்றது என்பதினை வைத்தே இவ்வாய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பார்வையை ஈர்க்கும் அம்சங்கள்.

1. புரொபைல் படம்

2. தொழில்/ பதவி

3. நண்பர்கள்

பின்வரும் அச்சங்களே சமூக வலையமைப்புகளில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

மேலும் நமது புரொபைல் பக்கத்தின் கீழே இருப்பவை அதிக கவனத்தை ஈர்ப்பதில்லையெனவும் இவ்வாய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும் இவ்வாய்வின் முடிவு ஒவ்வொரு சமூக வலையமைப்புகளுக்கும் ஏற்ப வேறுபடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.