Saturday, December 10, 2011

இன்று பூரண சந்திர கிரகணம் : இலங்கையில் முழுமையாகப் பார்க்கலாம்

 2011ஆம் ஆண்டின் இரண்டாவதும் கடைசியுமான சந்திர கிரகணம் இன்று சனிக்கிழமை நிகழவுள்ளது. இதனை இலங்கையில் முழுமையாக காணக்கூடியதாக இருக்கும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சூரியன் மறைந்ததும், இன்று மாலை 6.16 முதல் இரவு 9.48 வரை இலங்கையில் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்கமுடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்து 51 நிமிடங்கள் நீடிக்கவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.36 மணி முதல் 8.27 மணிவரை முழு சந்திர கிரகணம் தென்படும்.

3 மணி 52 நிமிடம் 17 வினாடிகள் நீடிக்கவுள்ள சந்திர கிரகணம் இன்று இரவு 11 மணிக்கு நிறைவடையும் எனவும் ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

அலாஸ்கா, வடக்கு கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, மத்திய மற்றும் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளிலும் இது தென்படும் என நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.