Tuesday, December 6, 2011

மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்

கணனிகளின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம். எந்த அளவில் கணனியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.

நாம் இணையத்தினை உபயோகிக்கும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ, அல்லது யு.எஸ்.பி டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நமது கணனியில் புகுந்து கணனியில் உள்ள தரவுகளை அழிப்பதுடன் நம் கணனியை செயலிழக்க வைக்கின்றது.



வைரஸ்களில் இருந்து கணனிகளை பாதுகாக்க பல 'என்ட்டிவைரஸ்' மென்பொருட்கள் உள்ளன.

இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் புதிய இலவச மென்பொருளை வெளியிட்டுள்ளது. 'Microsoft Security Essential' என்ற இம் மென்பொருளின் புதிய தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

இதுவொரு இலவச மென்பொருள். கனணியில் உள்ள வைரஸ்கள். மெல்வெயார்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கிறது.

கணினியை ஸ்கேன் செய்ய மூன்று வகையான வசதிகளை (Quick Scan, Full Scan, Custom Scan) கொண்டுள்ளது.

இணையத்தில் உலவும் பொழுதும் நம் கணனியை எந்த வைரசும் பாதிக்காதவாறு Real Time Protecting வசதியை கொண்டுள்ளது.

மென்பொருளை உபயோகிக்க கணனியின் அடிப்படை தேவைகள்:

விண்டோஸ் இயங்கு தளத்தின் ஒரிஜினல் பதிப்பை உபயோகிப்பது அவசியம்.

Windows XP(SP3), Vista, Windows 7 போன்ற கணனிகளில் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.

XP என்றால் CPU Speed 500MHz அதிகமாகவும், 256MB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.

Vista மட்டும் Windows 7 ல் CPU Speed 1.0GHz அதிகமாகவும், 1GB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.

கணனி VGA Display 800 X 600 க்கு அதிகமாக இருக்க வேண்டும்.

200MB கணனியில் ப்ரீ ஸ்பேஸ் இருக்க வேண்டும்.



மென்பொருளை தரவிறக்கம் செய்ய - Microsoft Security Essential Beta
_