செவ்வாய் கிரகத்தின் துணைக்கிரகமான சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது. 200 கிலோ எடையுள்ள இந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டதால், பூமிக்கு மீண்டும் திரும்புகிறது.
பூமியின் உட்காற்று பாதைக்குள் நுழையும் போது அந்த விண்கலமானது 20 முதல் 30 துண்டுகளாக உடையும். அவ்வாறு சிதைவடையும் துண்டுகள் பூமியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதியிலிருந்து 19-ந் தேதிக்குள் நடைபெறும் என ரஷ்யாவின் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியை நெருங்கும் போது அதன் துண்டுகள் நெருப்பு பிழம்பாக மாறும். அவை உடைந்து சிதறுவதால் வெளியேறும் நச்சு எரிபொருள் மற்றும் கதிரியக்க பொருளால் மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.