ஹம்ப்பெக் எனப்படும் திமிங்கில வகைகள் கடலில் இடம்பெயர்வதற்காக சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை வழி தவறாமல் நேர்கோட்டு வழியில் பயணிக்கின்றன. அதற்குக் காரணம் அவை சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளைப் பின்பற்றுவதே என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகளுக்கு பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.
விஞ்ஞானிகளின் கருத்தின் படி, இவ்வகைத் திமிங்கிலங்கள் சூரியனின் நிலை, புவியின் ஈர்ப்புச் சக்தி மற்றும் நட்சத்திரங்களின் உதவியுடனேயே சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை மிகத்துள்ளியமாக பயணித்து இடம்பெயர்வதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இவை தமது நேர்கோட்டுப் பாதையில் இருந்து 5 பாகைக்கும் குறைவாகவே வளைவதாகவும் சீரற்றகாலை நிலை மற்றும் கடலில் ஏற்படும் மாற்றங்களிலும் அதன் பாதையிலிருந்து விலகுவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் ஆழ்கடலில் இவ்வாறு துல்லியமாக பயணிப்பது இலகுவானதல்லவெனவும் மேலே குறிப்பிட்ட காரணிகளுக்கும் மேலதிகமாக அவை கண்டறியப்படாத நுணுக்கங்கள் மூலமாகவே இவ்வளவு தூரம் நேர்கோட்டுப் பாதையில் வழி தவறாமல் பயணிப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.