Monday, April 11, 2011

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை (காணொளி இணைப்பு)

ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு ஒரு மாதம் முடியுறும் தறுவாயில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் 7.1 என்ற ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 3 அடி அளவில் சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த வாரமும் 7.1 என்ற ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அப்போது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எதுவும் ஏற்படவில்லை.

கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப்பானை சுனாமி தாக்கியது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும், அவற்றை மீட்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் ஜப்பானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.