அமெரிக்க விண்வெளி மையம் நாசாவின் விண்கலங்கள் எல்லாம் இந்த ஆண்டு ஓய்வு பெறுகின்றன. டிஸ்கவரி விண்கலம் சமீபத்தில் தனது கடைசி பயணத்தை முடித்து பூமி திரும்பியது.
பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட டிஸ்கவரி விண்கலம், அமெரிக்க மியூசியத்தில் வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் எண்டவர் விண்கலம் தனது கடைசி பயணத்தை இன்று தொடங்குகிறது. அட்லான்டிஸ் விண்கலம் விரைவில் தனது கடைசி பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. நாசாவின் விமான மாடல் விண்கலம் விண்ணுக்கு செல்வதை இன்னும் 2 முறைதான் பார்க்க முடியும். அதனால், எண்டவர் விண்ணில் ஏவப்படும் காட்சியை பார்க்க புளோரிடாவின் கேப்கேனவரால் ஏவுதளத்தில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கூடியுள்ளனர்.
எண்டவர் விண்கலம் புறப்படும் காட்சியை சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் நேரில் பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நேரில் பார்வையிடுகிறார். இந்த விண்கலத்தில் கமாண்டர் மார்க் கெல்லி தலைமையில் 6 பேர் விண்ணுக்கு செல்கின்றனர். இவர் கடந்த ஜனவரி மாதம் சுடப்பட்ட அரிசோனா மாநில எம்.பி. கேப்ரெலி கிபோர்ட்ஸ் என்பவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலையில் குண்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த கேப்ரெலி, தற்போது குணமடைந்துவிட்டார். எண்டவர் விண்கலம் விண்ணுக்கு புறப்படுவதை பார்க்க, அவரும் கேப்கேனவரால் வந்துள்ளார்.