Saturday, April 2, 2011

வேற்று கிரக வாசிகள் பற்றிய அபூர்வ தகவல்கள்

வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல்
அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது. இதனை நம்புவோரின் எண்ணிக்கை தற்போது
பரவலாக அதிகரித்து வருகிறது.



கலிபோர்னியா நகரில் மோனோ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிக விஷ தன்மை கொண்ட
ஆர்சனிக் என்ற நச்சு பொருள் கலந்துள்ளது. இதில் உயிர்கள் வாழ்வது என்பது அரிதான
ஒன்று என கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் ஏரியின்
கீழ்பகுதியில் நுண்ணிய பாக்டீரியா வகையினை கண்டறிந்துள்ளனர்.


இது ஆர்சனிக் என்ற நச்சு பொருளை எடுத்து கொண்டு வாழ்வது தெரியவந்துள்ளது. இதனை
அடிப்படையாக கொண்டு வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள்
உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.


மேலும் விஞ்ஞானிகள் பல நூறு பில்லியன் டிரில்லியன் ஆண்டுகளை கடந்து விண்வெளியில்
அமைந்திருக்கும் பூமி போன்ற வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வாய்ப்புள்ளது
என கணித்துள்ளனர்.


கடந்த 10 வருடங்களில் சூரிய குடும்பத்தை தவிர்த்து 500 கிரகங்கள் வரை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் வானியலாளர்கள்
பூமி போன்று 3 மடங்கு பெரிதான கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.


இந்த கிரகத்தில் நம்முடைய பூமியில் இருப்பது போல் வளிமண்டலம் புவியீர்ப்பு விசை
மற்றும் மேற்பரப்பில் நீர் ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளது. இதற்கு
கிளீஸ் ஜி என பெயரிட்டுள்ளனர். இது ஏறத்தாழ 118,000,000,000,000 மைல்கள் அளவிற்கு
தூரம் இருக்கும்.


மேலும் இதிலிருந்து வெளிப்படும் ஒளியானது பூமியை வந்தடைய 20 வருடங்கள் ஆகும்
எனவும் கணக்கிட்டுள்ளனர். இதனையடுத்து வேற்று கிரகத்தில் உயிரினங்கள் பற்றிய
ஆராய்ச்சி மேலும் வலுவடைந்துள்ளது. அது தொடர்பான விவாதங்களும்
சூடுபிடித்துள்ளன.


இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் கார்பன்,
ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் இந்த 6 ரசாயனங்களால்
உருவானவை


இந்த பாக்டீரியாவின டி.என்.ஏ வில் பாஸ்பரஸ் இல்லை. அதன் டி.என்.ஏ வில்
பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது. ஆர்சனிக் பாக்டீரியா
கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் உயிரின் அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது.