Friday, April 8, 2011

2012 ஆம் ஆண்டளவில் மிகப்பிரலமான இயக்குதளமாகுமா அண்ட்ரோயிட்?

கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளமானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டளவில் உலகின்
மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி
நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் பிரகாரம் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை
கொண்டவையாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வருடத்தில்
'ஸ்மாட்போன்' விற்பனை எண்ணிக்கையானது 468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த
வருடத்துடன் ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை அப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய இயக்குதளமாக மாறுமெனவும்
அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நொக்கியாவுடன் இணைந்துள்ளதால்
மைக்ரோசொப்டின் விண்டோசானது 3 ஆவது மிகப்பெரிய இயங்குதளமாக இருக்குமெனவும்
எதிர்வுகூறப்பட்டுள்ளது.