அமாவாசை இரவில் நாம் விண்ணைத் துருவிப் பார்த்தோமானால், நம் கண்களுக்குச் சில இடங்களில் வெண்மையான பால் போன்ற வெளிச்சத்திட்டுக்கள் தென்படும். இவற்றுக்கு அண்டங்கள் என்று பெயர். விண்ணில் உள்ள இதுபோன்ற ஓர் இடத்தைத் தனது தொலை நோக்கியால் துருவிப் பார்த்துத்தான் முதன் முதலில் இத்தாலிய வானவியலார் கலிலீயோ (Galileo, 15641642) அண்டத்தைக் கண்டடறிந்தார் .
இது பல இலட்சக் கணக்கான விண்மீன்கள் அடங்கிய ஒரு பெரும் கூட்டமாகும். அண்டத்தில் உள்ள இப்பெரும் விண்மீன் கூட்டம். அவற்றுக்கு இடையே ஒன்றுடன் மற்றொன்று கொண்டிருக்கும் ஈர்ப்பு விசை காரணமாகக் கூட்டமாக உள்ளன.
சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளின் உதவியால் இது போன்ற பல லட்சக் கணக்கான அண்டங்களை நாம் காண முடியும். ஓர் அண்டத்திற்கும் மற்றொன்றும் இடைப்பட்ட தூரமானது 1000 முதல் 1,00,00,000 ஒளி ஆண்டுகள் வரை வேறுபடுகின்றது. (1 ஒளி ஆண்டு என்பது ஒளி, நொடிக்கு 3,00,000 கி.மீ. வேகத்தில் ஓர் ஆண்டு பயணித்தால் ஆகும் தூரம்). பிரபஞ்சமானது பல அண்டங்கள் தெறிக்கப்பட்டுள்ளது போல் காணப்படுகின்றது.
இந்த அண்டங்கள் எவ்வாறு உருவாயின?
பிரபஞ்சத்தில் ஏற்பட்ட பெரும் வெடிப்பிற்குப் பின் உருவான பெரும் சுழல ஆரம்பித்தன. இவ்வேக வேறுபாட்டின் காரணமாகப் பல்வேறு அளவிலான அண்டங்கள் உருவாயின. அவற்றின் வடிவம் நீள்வட்டமாகவும், ஒழுங்கற்ற வடிவம் உடையதாகவும், சுருள் வில் (Spiral) வடிவமாகவும் காணப்படுகிறது. மாஸ்கோ பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஓர் அட்டவணையில் இது வரையில் 30,000 அண்டங்களின் இருப்பிடம், அவற்றின் உருவம், நிறம், பிரகாசம், சுழல் வேகம் முதலியவற்றை அளித்துள்ளனர்.
பால்வழி மண்டலம் என்றழைக்கப்படுகின்ற நமது அண்டத்திற்கு மிக அருகில் உள்ள அண்டம் 'அண்ட்ரோமெடா’ (Andromeda) ஆகும். இது சுமார் 20,00,000 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. அதாவது நம் கண்ணுக்குப் புலப்படும் அண்ட்ரோமெடாவின் ஒளியானது சுமார் 20,00,000 ஒளி ஆண்டுகளுக்கு முன் அதிலிருந்து புறப்பட்டது ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் 20,00,000 ஒளி ஆண்டுகளுக்கு முன் அண்டிரோமெடா இருந்த நிலையைத்தான் நம்மால் இப்போது காண முடிகின்றது.
அது இப்போது இருக்கும் நிலையை இன்னும் 20,00,000 ஒளி ஆண்டுகள் கழத்துத்தான் நம்மால் காண முடியும். நமது அண்டத்திற்கு அருகில் ஸ்கல்ப்டரி (Sculptory), ஃபர்கைஸ் போன்ற அண்டங்கள் உள்ளன. இவ்வாறு விண்வெளியில் எல்லாத் திசைகளிலும் அண்டக் கூட்டங்கள் தெரிகின்றன.