Wednesday, April 27, 2011

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்

இயற்கையின் படைப்புகள் அனைத்தும் வியக்கத் தக்கவை.  உயிரினங்களில் ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை உள்ள அனைத்து படைப்புகளிலும் பல அற்புதங்கள் புதைந்துள்ளன. இதில் மனித உடலானது ஒரு மாபெரும் படைப்பாகும்.
மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இன்றியமையாதவை.  இவற்றில் சில உறுப்புகளின் செயல்பாடுகள் விரைவில் குன்றிவிடும் என்பதற்காக இரண்டு உறுப்புகளை இயற்கை வடிவமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக கண், காது, மூக்கு துவாரம், நுரையீரல், சிறுநீரகம் இவைகள் இரண்டு உறுப்புகளாக உள்ளன.  இப்படி மனித உடலின் இயக்கத்திற்கு உதவும் சிறுநீரகம் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம்.
சிறுநீரகம்

மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான்  சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.    இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி