என்சைம் என்ற வேதிப்பொருளை தடுப்பதன் மூலம் மார்பக புற்று நோய் இதர உறுப்புகளுக்கு
பரவுவதை தடுக்க முடியும் என பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தினர்
கண்டுபிடித்துள்ளனர்.
LOXL2 என்சைமை தடுப்பதன் மூலம் புற்றுநோய் இதர உறுப்புகளுக்கு பரவுவதை
தடுக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர். 90 சதவீத புற்றுநோய் மரணங்களுக்கு கட்டிகள்
உடலின் இதரப்பகுதிகளுக்கு இடம் பெயர்வதே காரணமாகும்.
மார்பக புற்றுநோய் உள்ளவர்களுக்கு LOXL2 என்சைம் அதிக அளவில் உள்ளது. இந்த
வேதிப் பொருள் பரவுவதால் புற்றுநோய் பாதித்துள்ளவர்கள் நீண்டகாலம் உயிர்வாழ்வதற்கான
வாய்ப்பு குறைகிறது. மேலும் புற்றுநோய் துவக்க நிலையில் இருக்கும் போது அது
பரவுவதற்கு LOXL2 என்சைம் காரணமாக உள்ளது.
இந்த என்சைம் மார்பக திசுக்களில் இருந்து புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தில்
கலப்பதற்கு காரணமாக உள்ளது. எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து பிரிட்டன்
ஆய்வாளர்கள் தங்களது புதிய முடிவினை வெளியிட்டுள்ளனர்.
இந்த புதிய ஆய்வு சிறந்த நம்பிக்கை தருவதாக உள்ளது என புற்று நோய்
ஆராய்ச்சியாளர்கள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.