இதுவரை காலமும் நாய்களின் மோப்பசக்தியானது போதைப் பொருட்கள் , வெடிபொருட்கள் என்பனவற்றைக் கண்டுபிடிப்பதற்கே உதவி வந்தன.
எனினும் அண்மைக்காலமாக நாய்களின் மோப்ப சக்தியின் மூலம் நோய்களைக் கண்டறிய முடியும் என்பது தொடர்பில் அதிகளவான ஆராய்ச்சிகள் இடம் பெற்றுவருகின்றன.
இந்நிலையில் நாய்களின் மோப்ப சக்தியின் மூலம் மனிதர்களின் குடல் புற்று நோயினைக் கண்டுபிடிக்க முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக அவர்கள் கறுப்பு நிற 'லெபரேடர் ரெட்ரேவர்' வகை நாயினை பயிற்றுவித்துள்ளனர்.
குறித்த நாயானது மனிதரின் குடல் புற்றுநோயினை துல்லியமாகக் கண்டுபிடிப்பதாகவும் அது கண்டுபிடிப்பவற்றில் 98% சரியானதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புற்று நோயாளர்கள் வெளிவிடும் சுவாசக் காற்று மற்றும் நோயாளிகளின் மலத்தின் மாதிரிகளில் இருந்தே அந்நாய் நோயைக் கண்டுபிடிப்பதாக அவ்விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இதன் போது 36 பேரின் சுவாச மாதிரிகளில் 33 பேரையும், 38 பேரின் மல மாதிரிகளில் 37 பேரையும் புற்று நோயாளியாக அந்நோய் இனங்காட்டியுள்ளது.
இதன் துல்லியமான கண்டுபிடிப்பிற்காக விஞ்ஞானிகள் இறப்பர் பந்தொன்றினை அந்நாய்க்குப் பரிசளித்துள்ளனர்.
more - http://www.bbc.co.uk/news/health-12322790